ஹைகோர்ட் மகாராஜா கோவில் வரலாறு

highcourt-maharaja
- Advertisement -

சுடலைமாட சுவாமி
சுடலைமாட சுவாமியை காவல் தெய்வமாக கொண்டு வழிபடுபவர்கள் தென் மாவட்டங்களில் அதிகமாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு கோவில் தான் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கும் ‘ஹைகோர்ட் மகாராஜா’ சுடலைமாட சுவாமி கோவில். இவர் சிவனுக்கும், பார்வதிக்கும் மகனாக பிறந்தவர் என்று கூறப்படுகிறது. அந்தக் காலங்களில் பெரிய மண்டபங்களை எல்லாம் ‘மாடம்’ என்ற பெயர் கொண்டு அழைப்பார்கள். பார்வதி கைலாயம் என்னும் இடத்தில் ஆயிரம் தூண்களைக் கொண்ட மண்டபத்தில், விளக்கின் சுடரில் இருந்து வரும் வெளிச்சத்தில் பிறந்ததால் சுடலைமாடன் என்ற பெயரை கொண்டார்.

தல வரலாறு
ஆறுமுகமங்கலம் எனும் கிராமத்தில் சின்னான் என்று பெயர் கொண்ட ஒருவர் வாழ்ந்து வந்தார். இவருக்கு உறவு என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை. தனியாகத்தான் வசித்து வந்தார். இவர் மாடு மேய்க்கும் தொழில் செய்பவர். வசதி படைத்தவர்களின் வீட்டில் இருக்கும் மாடு கன்றுகளை மேய்த்து அதில் வரும் வருமானத்தில் தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார். அப்படி ஒரு நாள் காட்டில் மரத்தடியில் மாடுகளை கட்டி விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது, ஒரு அப்பாவியை இரண்டு முரடர்கள் வெட்டுவதற்காக துரத்திக்கொண்டு வருவதை சின்னான் கண்டுள்ளார். அந்த அப்பாவி தன்னை காப்பாற்றிக் கொள்ள அந்த முரடர்கள் காலில் விழுந்து கெஞ்சி இருக்கிறான். இதனை பார்த்துக்கொண்டிருக்கும் சின்னாவுக்கு அந்த அப்பாவியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அந்த முரடர்களிடம் சண்டை போடும் அளவிற்கு சக்தியும், தைரியமும் அவனிடம் இல்லை.

- Advertisement -

அந்த இரண்டு முரடர்கள், அந்த அப்பாவியின் காலை முதலில் வெட்டி கீழே தள்ளிவிட்டனர். இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும்  அந்த இடத்தின் எதிரே ஒரு சுடலைமாடசாமியின் கோவில் இருந்தது. அந்த அப்பாவியானவன் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அந்த இரு முறைகளையும் பார்த்து ‘நீங்கள் செய்யும் பாவங்களை அந்த சுடலைமாடசாமி பார்த்துக் கொண்டிருக்கிறார். என்னை வெட்டாமல் விட்டுவிடுங்கள் இல்லை என்றால் உங்களைத் தண்டிக்க அவர் நேரில் வருவார்’ என்றும் கூறி பார்த்தான். ஆனால் அந்த இரு முரடர்களும், அந்தப் பேச்சை காதில் வாங்காமல் அந்த அப்பாவியின் தலையை வெட்டி, தலை வேறு முண்டம் வேறாக வீசிவிட்டு சென்றுவிட்டனர்.

highcourt-maharaja

இந்த சம்பவத்தை சின்னான் அந்த அப்பாவியின் மனைவியிடமும் ஊர் மக்களிடமும் தெரிவித்தான். மனைவியானவள், இறந்த தன் கணவனின் காலை பிடித்துக்கொண்டு அழுததை சின்னானால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த அப்பாவியை வெட்டிக் கொன்ற அந்த இரண்டு முரடர்களுக்கு எதிராக நான் சாட்சி கூறுகிறேன், என்று அந்த ஆதரவற்ற மனைவிக்கு தைரியம் கூறினான்.

- Advertisement -

சின்னான் சாட்சி கூறினால் அந்த இரண்டு முரடர்கள் தண்டனை கிடைப்பது நிச்சயம். இதை அறிந்த அந்த முரடர்கள் சின்னாணை சாட்சி கூற வரக்கூடாது என்று தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து போய் மிரட்டினார்கள். இதற்கு சின்னான் பயப்படவில்லை என்பதால், அவனை ஒரு பாழடைந்த மண்டபத்திற்குள் வைத்து கட்டி பூட்டி விட்டார்கள்.

highcourt-maharaja

இந்த வழக்கு கோர்ட்டிற்கு வந்துவிட்டது. சாட்சிக்காக சின்னானை அழைத்தபோது தான் அந்த அதிசயம் நடந்தது. கட்டடத்திற்குள் அடைத்து வைத்திருந்த சின்னான் கோர்ட்டில் நேராக வந்து அந்த இரண்டு முறைகளுக்கு எதிராக சாட்சி சொல்லி விட்டான்.

- Advertisement -

இது எப்படி சாத்தியம் ஆகும் என்ற குழப்பம் அந்த இரு முரடர்களுக்கும், அவனது கூட்டாளிகளுக்கும் இருந்தது. கூட்டாளிகள் அந்த பாழடைந்த மண்டபத்திற்குள் போய் பார்த்தாள் சின்னான் கட்டியபடி அப்படியேதான் மயக்கத்தில் படுத்திருந்தான். அப்படி என்றால் கோர்ட்டில் வந்து நீதிபதியிடம் சாட்சி சொன்னது யார்?

highcourt-maharaja

அந்த அப்பாவியானவன் தன் உயிரை இழக்கும் சமயத்தில் அந்த சுடலைமாடசாமி சாட்சியாக வந்து உங்களை தண்டிக்கும் என்று கூறினான் அல்லவா? அதுபடியே அந்த சுடலைமாடசாமி சின்னான் ரூபத்தில் வந்து சாட்சி சொல்லி இருக்கிறார் என்பது தான் உண்மை. இந்த சம்பவத்திற்கு பிறகுதான் அந்த ஊர் மக்கள் சுடலைமாடசாமியை ஹைகோர்ட் சுடலைமாடசாமி என்று அழைத்து வந்தனர்.

தரிசன நேரம்:

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்
காலை 10.00AM – 10.00PM

முகவரி:
திருநெல்வேலி டவுன்,
திருநெல்வேலி,
தூத்துக்குடி மாவட்டம்,
தமிழ்நாடு 627006.

தொலைபேசி எண்
9843324037

இதையும் படிக்கலாமே
கோகர்ண நாதேஸ்வரர் கோவில் வரலாறு

இது போன்ற மேலும் பல ஆன்மிக தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have High court maharaja temple history in Tamil. High court maharaja temple details. High court maharaja kovil varalaru Tamil. High court maharaja temple timings.

- Advertisement -