- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்வீட்டை எப்போதும் நறுமணமாகவும், ப்ரஷ்ஷாகவும் வைத்திருக்க இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள். பிறகு இதை தொடர்ந்து செய்வீர்கள்.

வீட்டை எப்போதும் நறுமணமாகவும், ப்ரஷ்ஷாகவும் வைத்திருக்க இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள். பிறகு இதை தொடர்ந்து செய்வீர்கள்.

- Advertisement -

வீடு எப்பொழுதும் ப்ரஷ்ஷாகவும், நறுமணமாகவும் இருந்தால் வீட்டில் இருக்கும் நாமும் உற்சாகமாகவும், ஆனந்தமாகவும் இருப்போம். வீடு தூய்மை இல்லாமல் அசுத்தமாக இருந்தால் நமக்கே அசௌகரியமாகவும், சற்று வெறுப்பாகவும் இருக்கும். இவ்வாறு வீடு என்பது நம் மனநிலையை மாற்றும் ஒரு முக்கிய இடமாக உள்ளது. அதனால் வீட்டை எப்போதும் நல்ல நறுமணத்துடன் ப்ரஷ்ஷாக வைத்திருக்க என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

fresh

குறிப்பு 1:
கால் மிதி, ஜன்னல் மற்றும் வாசல் கதவுகளுக்கு போட்டு வைத்திருக்கும் ஸ்கிரீன்கல் வாசனையாக இருக்க, ஒரு வாட்டர் பாட்டிலில் வீட்டில் துணி அலசுவதற்கு பயன்படும் வாசனைப் பொருள் கம்ஃபோட்டை 2 மூடி எடுத்துக் கொண்டு அதனுடன் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக குலுக்கி விட வேண்டும். இந்த லிக்விடை கால்மிதி மற்றும் ஸ்கிரீன்களின் மீது ஸ்ப்ரே செய்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வீடு நறுமணத்துடன் இருக்கும் வீட்டிற்குள் நுழையும்போதே புத்துணர்ச்சி உண்டாகும்.

- Advertisement -

குறிப்பு 2:
இப்பொழுது மழைக்காலம் என்பதால் வீட்டினுள் எப்போதும் ஒரு விதமான ஈர வாசனை இருந்துக்கொண்டே இருக்கும். அதனை அகற்றி வீட்டை எப்போதும் நறுமணத்துடன் வைத்திருக்க வீட்டிலேயே இயற்கையாக பிரஷனரை தயார் செய்து பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.

ஒரு காலி டப்பாவில் நான்கு ஸ்பூன் ஆப்ப சோடா மாவு, அதனுடன் சாக்பீஸ் துண்டுகள் அல்லது கரித்துண்டுகளை சேர்த்து விடவேண்டும். கரிதுண்டுகளை நீங்கள் அயன் செய்யும் கடைகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம். இவற்றுடன் ஏதேனும் ஒரு வாசனை திரவியத்தை ஒரு காட்டனில் நனைத்து அதையும் அவற்றுடன் சேர்த்து விட வேண்டும். இந்த கலவையை வீட்டில் ஒரு சில மூலைகளில் அப்படியே வைத்துவிடவேண்டும். இந்தக் கலவை காற்றில் கரைந்து நல்ல நறுமணத்தை வீடு முழுவதும் பரவச் செய்யும்.

- Advertisement -

இவை எதுவும் இல்லாவிட்டாலும் எலுமிச்சம் பழத் தோல் மற்றும் அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து அந்த தண்ணீரில் சோடா மாவு சேர்த்து இதனை மட்டுமே ஒரு ஸ்பிரே பாட்டிலில் எடுத்துக்கொண்டு வீடு முழுவதும் தெளித்து வந்தால் வீடு எப்போதும் நல்ல நறுமணத்துடனும் பிரஷ்ஷாகவும் இருக்கும்.

lemon-juice1

குறிப்பு 3:
தினமும் சாம்பிராணி தூபம் போடுவது வீட்டை எப்போது நறுமணமாக வைத்திருக்கும். சாம்பிராணி தூபம் போட முடியாவிட்டாலும் தசாங்கம் பொடியை பயன்படுத்தியும் வீட்டை நறுமணமாக வைத்திருக்கலாம்.

- Advertisement -

குறிப்பு 4:
பாத்திரம் துலக்க பயன்படும் ஏதேனும் ஒரு லிக்விடுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வைத்து வீட்டின் சுவர்களில் தெளித்து சுத்தம் செய்து விட்டோம் என்றால் சுவர்கள் பளபளப்பாக தூய்மையாக மாறுவதுடன் வீட்டினுள் நல்ல நறுமணத்தையும் கொடுக்கும்.

spray

குறிப்பு 5:
பாத்திரம் துலக்கும்ஸிங்க் மற்றும் குளியலறையில் தண்ணீர் உள்ளே செல்லும் இடத்தில் இருக்கிற சல்லடை களில் பூச்சிகளை விரட்டி வாசனையையும் கொடுக்கும் நாப்தலின் உருண்டைகளை போட்டு வைக்கலாம். இதன் மூலம் நல்ல நறுமணம் கிடைக்கும்.

இந்த குறிப்புகளை பயன்படுத்தி நீங்களும் உங்கள் வீட்டை எப்பொழுதும் நல்ல நறுமணத்துடன் வைத்திருங்கள். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள்.

சற்று முன்