அடிக்கிற வெயிலில் கூட எப்போதுமே நீங்க ஃப்ரெஷ்ஷா, வெள்ளையாகவே இருப்பீங்க. இந்த சோப்பு போட்டு குளித்து பாருங்கள்.

face5
- Advertisement -

அடிக்கிற வெயிலில் வெளியில் சென்று வந்தால் முகம் கறுத்துப் போய், வியர்வை படிந்து பிசுபிசுவென பார்க்கவே பயங்கரமாக மாறிவிடுகின்றது. வெயிலிலும் நம்முடைய முகம் எப்போதும் பிரஷ்ஷாக அழகாக வெள்ளையாக பொலிவாக இருக்க என்ன செய்யலாம். இந்த சோப்பைப் போட்டு முகத்தை கழுவலாம். ரொம்ப ரொம்ப சிம்பிள் மெத்தட் இந்த சோப்பை நம்முடைய வீட்டிலேயே நம் கையாலேயே சுலபமாக எப்படி தயார் செய்வது. தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

இந்த ஸ்பெஷலான சோப்பு தயாரிக்க நமக்கு கடையிலிருந்து வாங்க கூடிய ஒரு சோப் தேவை. அந்த சோப் பார்ப்பதற்கு கண்ணாடி போல இருக்க வேண்டும். உதாரணத்திற்கு பியர்ஸ் சோப் எல்லாமே கண்ணாடி போல தானே இருக்கும். பியர்ஸ் சோப்பில் எந்த நிறம் சோப்பை வேண்டுமென்றாலும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். அந்த சோப்பை சிறிய சிறிய துண்டுகளாக முதலில் வெட்டிக் கொள்ளுங்கள். கத்தியால் வெட்டினால் சுலபமாக வெட்டி விடலாம்.

- Advertisement -

வெட்டியா இந்த சோப்புகளை ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பெரிய தக்காளி பழத்தை மிக்ஸியில் போட்டு அடித்து வடிகட்டி சாறை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு 1 ஸ்பூன் அளவு பட்டை பொடி நமக்கு தேவைப்படும். இப்போது எல்லா பொருட்களும் தயாராக உள்ளது. வெட்டி வைத்திருக்கும் பியர்ஸ் சோப், தக்காளி பழ சாறு, பட்டை பொடி, இது அப்படியே இருக்கட்டும்.

அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி அதை லேசாக சூடு செய்யுங்கள். இப்போது சுடுகின்ற தண்ணீரின் மேல் வெட்டிவைத்த சோப்பை போட்டு வைத்திருக்கும் கிண்ணத்தை வைத்து, டபுள் பாய்லின் மெத்தடில் சூடு செய்ய வேண்டும். கிண்ணத்தில் இருக்கும் சோப்பு டபுள் பாயிலில் மெத்தையில் நன்றாக சூடாகி உருகத் தொடங்கிவிடும்.

- Advertisement -

உருகும் இந்த சோப்புடன் தக்காளி பழச்சாறு பட்டைப் பொடியையும் போட்டு கை விடாமல் கலந்து கொண்டே இருங்கள். முழுமையாக சோப்பு கரைந்து நன்றாக சூடு ஆன பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள். கிண்ணத்தில் லிக்விட் பக்கத்தில் இருக்கக்கூடிய சோப்பை எடுத்து கீழே வைத்து ஒரு ஸ்பூன் வைத்து கலந்து கொண்டே இருக்க வேண்டும். சூடு ஆறும் வரை கொஞ்சம் கலக்க தான் வேண்டும். (மொத்தமாக சோப் உருகி தக்காளி பழச்சாறு உடன் சேர்ந்து கொதித்து வர 20 நிமிடங்கள் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.)

டபுள் பாய்லின் மெத்தடில் உருக்கி வைத்திருக்கும் சோப்பின் சூடு ஆறட்டும். இதற்குள் ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் உள்ள தேங்காய் எண்ணெயை தடவி ஆறிய இந்த சோப் லிக்விடை அந்த டப்பாவில் ஊற்றி செட் செய்து இதை அப்படியே ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். 24 மணி நேரம் கழித்து எடுத்துப் பார்த்தால் இது மீண்டும் கட்டி சோபாக உங்களுக்கு கிடைத்திருக்கும். இதை ஃப்ரீசரில் இருந்து வெளியே எடுத்து உங்களுடைய குளியல் அறையிலேயே ஸ்டோர் செய்து உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்க பயன்படுத்தலாம்.

முகம் கை கால்களில் எப்போதும் சோப்பு போட்டு குளிப்பது போல இந்த சோப்பைப் போட்டு தேய்த்து இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்து குளித்து வர வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் இந்த சோப்பைப் பயன்படுத்தி பாருங்கள். உங்களுடைய சருமத்தில் நல்ல வித்தியாசம் உங்களுக்கே தெரியும்.

- Advertisement -