தினசரி பூஜையின் போது இவற்றை செய்தால் விரும்பியதை பெறலாம் தெரியுமா ?

vinayagar

நமக்கே மிஞ்சிய ஒரு சக்தி உலகில் இருக்கிறது என்ற திடமான எண்ணம் இறை வழிபாடு செய்பவர்கள் அனைவருக்கும் உள்ளது. இறைவன் எங்கும் நீக்கமற இருந்தாலும், நாம் வசிக்கின்ற இல்லத்தில் இறைவனின் அருள் ஆட்சிகள் நிறைந்திருக்க பூஜை அறையில் தினமும் தெய்வங்களுக்குரிய வழிபாடுகள் செய்வது சிறப்பான நன்மைகளைத் தர வல்லதாகும். பொதுவாக பூஜை அறையில் இருக்கும் வீடுகள் அனைத்துமே தெய்வ சக்தி தானாக வந்து நிறையும். ஆனாலும் முறையான சில பூஜை விதிகளை கடைப்பிடிப்பதால் அந்த தெய்வ சக்திகளின் முழுமையான அருளைப் பெற்று, வாழ்வில் மேலான நிலையை அடையலாம் அந்த பூஜைக்கான சில விதிகள் என்ன என்பதை பற்றி இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Vellerukka Vinayagar

ஒரு சிலர் அனைத்து தெய்வங்களையும் வழிபாடு செய்யும் பழக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். வீட்டில் விசேஷ நாட்களிலும் அல்லது தினந்தோறும் தெய்வ வழிபாடு செய்யும் போதும் முதலில் விநாயகர், பிறகு உங்கள் குலதெய்வம் இறுதியாக மறைந்த முன்னோர்கள் ஆகியவர்களை வணங்கிவிட்டு தான் உங்கள் இஷ்ட தெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும். பூஜை மற்றும் வழிபாடு நிறைவு செய்யும் போதும் விநாயகர், குலதெய்வம், முன்னோர்களை வழிபட்டு முடித்து விஷேச பூஜைகள் மற்றும் வழிபாடுகளை செய்து முடிப்பது மட்டுமே சிறப்பான பலன்களைக் கொடுக்கும்

வீட்டில் விசேஷ தினங்களின் போது தெய்வங்களுக்கு தேங்காய் வைத்து வழிபடும் போது அந்த தேங்காயில் இருக்கின்ற நார் மற்றும் குடுமிகள் அனைத்தையும் பிய்த்து வைத்து பூஜைகள் செய்ய வேண்டும். அதே நேரத்தில் பித்ரு தர்ப்பணம், சிராத்தம் போன்றவற்றை செய்யும் போது குடுமி, நார் நீக்கப்படாத தேங்காயை வைத்து பூஜைகள் செய்வதால் எந்த ஒரு பாதகமும் இல்லை.

sambirani

செவ்வாய் மட்டும் வெள்ளிக்கிழமைகள் மற்றும் விசேஷ தினங்களில் நாம் வசிக்கும் வீட்டில் பூஜையறையில் சாம்பிராணி கொளுத்தி, அந்தப் புகையை வீடு முழுவதும் நிறையுமாறு செய்ய வேண்டும். சாம்பிராணி புகைக்கு துஷ்ட சக்திகள் மற்றும் எதிர்மறையான அதிர்வுகளை வீட்டிலிருந்து வெளியேற்றும் ஆற்றல் அதிகம் உள்ளதால் இதை தவறாமல் செய்வது நல்லது.

- Advertisement -

Pooja room

உங்கள் வீட்டில் சாதாரண தினங்கள் மற்றும் விசேஷ தினங்களிலும் தெய்வங்களுக்கு பிடித்த நைவேத்திய பொருட்களை சமர்ப்பித்து, பூஜைகள் செய்வதால் உங்கள் கோரிக்கை தெய்வங்களால் ஏற்கப்பட்டு அவை விரைவில் நிறைவேற வழி வகை செய்யும். தெய்வங்கள் மற்றும் தேவர்களின் அருளாசிகள் உங்கள் வீட்டில் நிறைந்திருக்க கேசரி, சர்க்கரை பொங்கல், பொங்கல் போன்ற உணவுகளை தினமும் சிறிதளவு படைத்து நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்வது நல்லது. தினமும் இப்படி விதவிதமான உணவுப் பண்டங்களை தயாரித்து நைவேத்தியம் செய்ய முடியாதவர்கள் பழங்களை நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்யலாம். அல்லது 100 கிராம் அளவிற்கு சிறிய அளவிலான கற்கண்டுகளை வாங்கி, தினமும் தெய்வங்களின் பூஜை நேரத்தில் ஒரு சிறிய கிண்ணத்தில் மூன்று அல்லது நான்கு கற்கண்டு கற்களை வைத்து, தெய்வங்களுக்கு நைவேத்தியம் வைத்து, பூஜை செய்வது சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே:
வீட்டில் வெள்ளெருக்கு வளர்த்தால் நல்லதா?

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Home pooja rules in Tamil. It is also called as Naivedyam in Tamil or Pooja vidhigal in Tamil or Poojai Porutkal in Tamil or Veetil poojai seiyum podhu in Tamil.