உப்பு சமையலுக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டாம்! இதற்கெல்லாம் கூட உப்பு பயன்படுமான்னு ஆச்சரியமா இருக்கே!

salt-uppu
- Advertisement -

நாம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் உப்பு சமையலுக்கு மட்டுமல்ல! வீட்டில் நிறைய விஷயங்களுக்கு பயன்படுத்தி பயன் பெறலாம். சமையல் உப்பு பெரும்பாலும் தூள் உப்பு பயன்படுத்துவது தவிர்ப்பது நல்லது. கல் உப்பு, இந்துப்பு, அயோடின் உப்பு போன்றவற்றை சமையலுக்கு பயன்படுத்தி வந்தால் ஆரோக்கியம் பலப்படும். ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பார்கள். ஒருவருடைய கைகளால் உப்புள்ள அன்னம் பரிமாறும் பொழுது அவரை கடைசிவரை மறக்கக்கூடாது என்பது அர்த்தமாகும். மேலும் மஹாலக்ஷ்மியின் அம்சமாகவும் உப்பு பார்க்கப்படுகிறது. எப்பொழுதும் ஒருவருடைய வீட்டில் உப்பை குறையாமல் பார்த்துக் கொண்டால் அந்த வீட்டில் செல்வம் நிரம்பி இருக்குமாம். இத்தகைய மகத்துவம் நிறைந்த உப்பை வேறு எதற்கெல்லாம் வீட்டில் பயன்படுத்தலாம்? என்பதை நாமும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

salt

சமையலுக்கு பயன்படுத்தும் தேங்காய் உடைத்த பின் மீதமிருக்கும் மூடியை பத்திரமாக பராமரிக்க கைபடாமல் சிறிதளவு எல்லா இடங்களிலும் படும்படி உப்பைத் தூவி கொள்ளுங்கள். பின்னர் ஃபிரிட்ஜில் பால் வைக்கும் டிரேயில் கவிழ்த்து வையுங்கள், எவ்வளவு நாட்கள் ஆனாலும் தேங்காய் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்.

- Advertisement -

நீங்கள் புதிதாக வாங்கும் துணிமணிகள் சாயம் போகும் என்று உங்களுக்கு தெரிந்தால் அதனை கல் உப்பு கலந்த தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் அலசி காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்யும் பொழுது அதிக அளவு சாயம் வெளியேறுவது தடுக்கப்படும். எந்த ஒரு புது துணியையும் பயன்படுத்துவதற்கு முன்னர் ஒரு முறை உப்பு தண்ணீரில் அலசி காய வைத்து பயன்படுத்துவது மிகவும் நல்லது.

wheat-flour

கோதுமை மாவில் வண்டுகள், பூச்சிகள் தொந்தரவு இன்றி நீண்ட நாட்கள் பராமரிக்க ஃப்ரிட்ஜில் வைப்பது உண்டு. அப்படி பிரிட்ஜில் வைக்க முடியாமல் வெளியில் வைக்க வேண்டுமென்றால் சிறிதளவு கல் உப்பைத் தூவி கலந்து வைத்து விடலாம். எவ்வளவு நாட்கள் ஆனாலும் வண்டுகள், பூச்சிகள் தொந்தரவு இருக்காது. பயன்படுத்தும் பொழுது உப்பின் அளவை மட்டும் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தீராத தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள், தொண்டையில் கரகரப்பு இருந்தாலும் சிறிதளவு வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் கல் உப்பு கலந்து தொண்டையில் படும்படி கொப்பளித்து துப்ப வேண்டும். இப்படி ஒரு 10 முறை செய்தால் தொண்டையில் இருக்கும் கிருமிகள் அழிந்து உடனடியாக நல்ல நிவாரணம் கிடைக்கும். இதனை தினமும் ஒரு முறை செய்தால் நம் உடம்பில் கிருமிகள் நுழைவதையும் கூடுமானவரை தடுத்துக் கொள்ளலாம்.

salt-water

கால் வலி, குதிகால் வலி, பாதத்தில் அழுத்தம், வெடிப்பு போன்றவை இருந்தால் அரை பக்கெட் அளவிற்கு சுடுதண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். சூடு பொறுக்கும் அளவிற்கு இருக்கும் தண்ணீரில் கால்களை நிமிடம் வைத்தால் போதும் வலி எல்லாம் பஞ்சாய் பறந்து விடும். பாதத்தில் இருக்கும் அழுக்குகளும், கிருமிகளும் நீங்கி பாதம் சுத்தமடையும். சோர்வுடன் இருந்த பாதம் வலி நீங்கி புத்துணர்வு பெறும்.

- Advertisement -

மிக்ஸி ஜாரில் இருக்கும் பிளேடுகள் கூர்மை இழந்து மழுங்கி போனால் சிறிதளவு கல் உப்பு சேர்த்து சுற்றி விடுங்கள். உப்பின் உராய்ப்பில் பிளேடுகள் நன்கு கூர்மை ஆகிவிடும். மேலும் பிளேடுகளுக்கு அடியில் இருக்கும் விடாப்பிடியான அழுக்குகளும் வெளியேறி சுத்தம் அடையும். பின்னர் புதியது போல ஜார் நன்கு அரைத்துக் கொடுக்கும்.

salt-water-bath

பாத்திரம் கழுவும் சிங்க் மற்றும் பாத்ரூமில் தண்ணீர் போகும் இடங்களில் இருக்கும் அடைப்புகள் நீங்க சிறிதளவு பேக்கிங் சோடாவுடன் தூள் உப்பு சேர்த்து போட்டு தண்ணீர் ஊற்றி விடுங்கள். அடைப்புகள் நீங்கி அதிலிருந்து வரும் துர்நாற்றம் மறைந்துவிடும். காபி, டீ போன்ற சூடான பொருட்களை ஊற்றி வைக்க பயன்படுத்தும் பிளாஸ்க் விரைவாக துர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றத்தை தவிர்க்க சிறிதளவு உப்புக் கலந்த தண்ணீரில் அலசினால் நல்ல பலன் கிடைக்கும்.

sambar-veggies

நாம் அன்றாட உணவிற்காக வாங்கும் காய்கறிகள் பெரும்பாலும் செயற்கை உரங்கள் பயன்படுத்தி விளைவிக்கப்படுகின்றன. இதன் பாதிப்புகள் குறைவதற்கு காய்கறிகளை வாங்கி வந்தவுடன் சிறிது நேரம் சூடான தண்ணீரில் கல் உப்பு கலந்து காய்கறிகளை அப்படியே போட்டு ஊற விடுங்கள். பின்னர் அலசி எடுத்து பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனால் நுண்கிருமிகள், பாக்டீரியாக்கள் அழிந்து நீண்ட நாட்கள் வரை காய்கறிகள் பாதுகாப்பாக இருக்கும்.

paste

பல் தேய்க்க பயன்படுத்தும் பேஸ்டில் உப்பு இருக்கா? என்று விளம்பரம் வருவதை பார்த்திருப்பீர்கள். பேஸ்ட்டில் உப்பு கலந்து இருந்தால் பற்களில் வெண்மை அதிகரிக்கும். எனவே எந்த பேஸ்ட் பல் தேய்க்க நீங்கள் பயன்படுத்தினாலும் சரி, அதில் கொஞ்சம் உப்பு தூவி பற்களை தேயுங்கள், நல்ல பளிச்சிடும் வெண்மை கிடைக்கும். குழந்தைகள் பல் தேய்க்கும் பொழுது சரியாக தேய்க்க மாட்டார்கள் எனவே குறிப்பாக குழந்தைகளுக்கு இது போல் செய்து கொடுத்தால் மஞ்சள் கரை நீங்கி, வாய் துர்நாற்றமும் அகலும்.

egg

முட்டை வேக வைக்கும் தண்ணீரில் சிறிதளவு உப்பு போட்டு வேக வைத்தால் முட்டையின் ஓட்டை உரிப்பதற்கு சுலபமாக இருக்கும். பருப்புகள் வேக வைக்கும் பொழுது உப்பு சேர்த்து வேக வைத்தால் பருப்புகள் சீக்கிரம் வேகும். குழந்தைகளுக்காக ஆப்பிள் வெட்டி கொடுக்கும் பொழுது நீண்ட நேரம் கறுத்து போகாமல் இருக்க சிறிதளவு லேசாக உப்பு தடவி கொடுக்கலாம். காலிஃப்ளவரில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத புழுக்கள் போக சுடு தண்ணீரில் உப்பு சேர்த்து ஊற வைத்தால் எளிதாக நீங்கிவிடும்.

- Advertisement -