கெமிக்கல் கலக்காத பவுடர் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?

rose-powder
- Advertisement -

நிறைய பெண்கள் இப்போது தங்களை அழகாக காட்டிக் கொள்ள இந்த காம்பேக்ட் பவுடரை தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த கெமிக்கல் கலந்த பவுடர் உங்களுடைய சருமத்தை சீக்கிரம் பொலிவிழக்கச் செய்யும். பவுடர் போடும்போது தான் அழகு இருக்கும். பவுடரை கழுவிய பின்பு உங்களுடைய சருமம் வாடிப்போகும்.

இயற்கையான முறையில் உங்களுடைய சருமத்தை பாதுகாக்கவும் அதேசமயம் பார்ப்பதற்கு நீங்கள் அழகாக தெரிய வேண்டும் என்றால் இந்த காம்பாக்ட் பவுடரை பயன்படுத்தி பாருங்கள். இயற்கையான முறையில் வீட்டிலேயே காம்பேக்ட் பவுடரை எப்படி தயார் செய்வது. சூப்பரான அழகு குறிப்பு இதோ உங்களுக்காக.

- Advertisement -

இயற்கையான காம்பேக்ட் பவுடர்

நாட்டு மருந்து கடைக்கு போங்க. ரோஜாப்பூ பவுடர், சந்தன பவுடர் என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். இரண்டும் மலிவான விலையில் கிடைக்கிறது என்பதற்காக தரம் குறைவான பொடியை வாங்கிறாதீங்க. தரமான பவுடர் வாங்கிக்கோங்க. நிறைய ஆர்கானிக் கடைகளில் இப்போது இந்த பொடி சுலபமாக கிடைக்கிறது. அங்கிருந்து  வாங்கிக் கொள்ளவும்.

ஒரு சின்ன டப்பாவில் 1 ஸ்பூன் ரோஜாப்பூ பவுடர், 1 ஸ்பூன் சந்தன பவுடரை போட்டு, நன்றாக கலந்து விடுங்கள். டப்பாவை மூடி நான்கு முறை குலுக்கினாலே போதும். பவுடர் தயார். இதை நீங்கள் காம்பேக்ட் பவுடராக பயன்படுத்திப் பாருங்கள். உங்களுடைய முகம் மேக்கப் போட்டது போலவே ஜொலி ஜொலிப்பாக இருக்கும். உங்களுக்கு ரோஜாப்பூ பொடி பிடிக்கவில்லையா. ஆவாரம் பூ பொடி சேர்க்கலாம். ஆவாரம் பூ போடியும் சருமத்திற்கு நல்லது பண்ணக்கூடியதுதான்.

- Advertisement -

இந்த பவுடரை நீங்கள் போட்டுக் கொண்டால் இயற்கையாகவே நீங்கள் வாசமாகவும் இருப்பீர்கள். முகம் மேக்கப் போட்டது போல அழகாகவும் இருக்கும். இனிமே திருமணத்திற்கு போகும்போது, அலுவலகத்திற்கு போகும் போது செயற்கையான பொருட்கள் இருக்கும், கடையில் வாங்கிய பவுடரை பயன்படுத்தாதீங்க. இந்த பவுடரை பயன்படுத்தி பாருங்க.

நிச்சயமாக சருமத்தில் நல்ல வித்தியாசம் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பொடியில் கொஞ்சமாக பன்னீர் ஊற்றி கலந்து முகம் கை கழுத்து பகுதிகளில் பேக் போல கூட போட்டுக் கொள்ளலாம். வெயிலில் வெளியில் சென்று நிறம் மாறிய உங்கள் சருமம், கூடிய விரைவில் நல்ல கலராக மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: வளராத முடியை வளர வைக்கும் ஹேர் டானிக்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த ஒரு பயமும் இல்லாமல் பயன்படுத்தக்கூடிய இந்த பவுடர் அழகு குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் இந்த குறிப்பா ஷேர் பண்ணுங்க.

- Advertisement -