நம்முடைய தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டும் என்று தான் அனைவரும் ஆசைப்படுவோம். அப்படி அடர்த்தியாக நம்முடைய முடி வளர வேண்டும் என்றால் அதற்கு நம்முடைய முடி ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மேலும் முடியின் வேர்க்கால்கள் உறுதியாக இருக்க வேண்டும். இப்படி இவை அனைத்தும் நடைபெற்றால்தான் நாம் எதிர்பார்த்த அந்த அடர்த்தியான கூந்தலை நம்மால் பெற முடியும். அதற்கு உதவக்கூடிய ஒரு ஹேர் கிரீமை எப்படி வீட்டிலேயே தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
நம்முடைய தலைமுடியில் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. பொடுகு தொல்லை, முடி உதிர்தல், முடி வலுவிழந்து போகுதல், முடியில் ஏற்படக்கூடிய பிளவுகள் என்று பல இருக்கின்றன. இவை அனைத்தையும் சரி செய்வதற்கு நாம் பல எண்ணெய்கள், ஹேர் பேக்கள் போன்றவற்றை பயன்படுத்துவோம். இதற்கு பதிலாக ஹேர் க்ரீமை தயார் செய்து பயன்படுத்தினோம் என்றால் அதற்குரிய பலனை நம்மால் விரைவிலேயே பெற முடியும்.
இந்த ஹேர் க்ரீமை தயார் செய்வதற்கு சுத்தமான செக்கில் ஆட்டப்பட்ட தேங்காய் எண்ணெய் வேண்டும். அடுத்ததாக கடைகளில் விற்கக்கூடிய கற்றாழை ஜெல் வேண்டும். இந்த கற்றாழை ஜெல்லில் எந்தவித வாசனையும் நிறமும் இருக்கக் கூடாது. ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஐந்து டேபிள் ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லை எடுத்து போட்டு அதை நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பிறகு இதில் மூன்று டேபிள்ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெயை ஊற்றி அதையும் ஒரு முறை நன்றாக கலந்து கொள்ளுங்கள். அடுத்ததாக இதில் 10 சொட்டுகள் பெப்பர் மென்ட் எசன்சியல் ஆயிலை போட வேண்டும். இதையும் ஒருமுறை கலந்து அப்படியே மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இது க்ரீமாக மாறி இருக்கும்.
இந்த க்ரீமை கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்து நாம் தலைக்கு குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக தலையில் நன்றாக தடவி அரைமணி நேரம் கழித்து எப்பொழுதும் போல் தலைக்கு குளித்து விடலாம். இப்படி செய்வதன் மூலம் தலையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும். தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். அடர்த்தியாகவும் புதிய முடிகள் வளரவும் ஆரம்பிக்கும். பொடுகு தொல்லை எதுவும் இருக்காது.
இதை நாம் ஒருமுறை செய்து வைத்து பலமுறை கூட உபயோகப்படுத்தலாம். ஒரு வாரத்திற்கு மூன்று நான்கு முறை கூட நம்முடைய தலைக்கு இந்த க்ரீமை பயன்படுத்தலாம். இதில் இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய கற்றாழையை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அப்படி பயன்படுத்தினால் அது விரைவிலேயே கெட்டுப் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே முகப் பிரச்சினைகளை தீர்க்கும் ஐஸ் கியூப்
நாமே நம்முடைய கைப்பட வீட்டிலேயே இந்த முறையில் ஹேர் க்ரீம் தயார் செய்து நம்முடைய தலைக்கு பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய தலைமுடி அழகாகவும், அடர்த்தியாகவும், மிருதுவாகவும் திகழும். கடைகளில் இருந்து கெமிக்கல் நிறைந்த க்ரீமை பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்துவோம்.