நரைமுடி மாற தேங்காய் எண்ணெய்

grey hair oil
- Advertisement -

இன்றைய காலத்தில் பலரும் அனுபவிக்க கூடிய அழகு ரீதியான பிரச்சினை என்றால் அது நரைமுடி பிரச்சனை அல்லது முடி உதிர்தல் பிரச்சனை தான். இந்த இரண்டிற்கும் ஒரு சிறந்த தீர்வாக தான் இன்று நாம் பார்க்கப் போகிற தேங்காய் எண்ணெய் இருக்க போகிறது. புதிதாக இப்பொழுதுதான் ஒவ்வொன்றாக வெள்ளை முடி வந்து கொண்டு இருக்கிறது என்பவர்களும், முடி உதிர்தல் பிரச்சினை அதிகமாக இருக்கிறது என்று நினைப்பவர்களும் இந்த எண்ணையை பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை எப்படி தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

தலைமுடி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கான சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். பொதுவாக நாம் தலைக்கு குளிக்கும் பொழுது குளிக்கும் தண்ணீர் ஆனது எப்பொழுதும் ஒரே மாதிரி தான் இருக்க வேண்டும். ஒரு சிலர் குளிர்காலத்தில் சுடுதண்ணீரையும் வெயில் காலத்தில் குளிந்த தண்ணீரையும் குளிப்பதற்கு பயன்படுத்துவார்கள். அப்படி இல்லாமல் எப்பொழுதுமே வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும். இப்படி குளிப்பதன் மூலம் தலைமுடி உதிர்தல் என்பது குறையும்.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் நம்முடைய உணவில் அதிகப்படியாக பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். போதுமான அளவு இடைவெளியில் தண்ணீர் அருந்த வேண்டும். மேலும் நம்முடைய தலைக்கு உபயோகப்படுத்தும் ஷாம்பு அதிக கெமிக்கல் நிறைந்த ஷாம்புவாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதோடு நாம் தலைக்கு தேய்க்கக்கூடிய எண்ணையானது சல்பர் இல்லாத சுத்தமான மரச்செக்கு எண்ணெயாக இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொண்டு பிறகு உபயோகப்படுத்த வேண்டும். இவை அனைத்தையும் நீங்கள் செய்தால் உங்களுடைய தலைமுடி ஆரோக்கியத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.

நரைமுடி வந்துவிட்டது என்று நினைப்பவர்கள் முதலில் கவலைப்படுவதை நிறுத்தி விடுங்கள். நம்முடைய தலைமுடியை கருமையாகவும், முடி உதிர்தலை நிறுத்தி அடர்த்தியாகவும் வளர செய்வதற்கு உதவக்கூடிய ஒன்றாக திகழ்வதுதான் கருவேப்பிலை. கருவேப்பிலையை நாம் பொதுவாக வெறும் இலைகளை மட்டும்தான் பயன்படுத்திப்போம். ஆனால் இந்த பதிவில் கருவேப்பிலையுடன் அது குச்சிகளையும் சேர்த்து எண்ணையில் போட போகிறோம்.

- Advertisement -

இதற்கு முதலில் ஒரு கொத்து கருவேப்பிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் இலைகளை தனியாக உருவி அதன் குச்சிகளையும் அதனுடன் வைத்து அது நன்றாக காயும் அளவிற்கு வெயிலில் வைத்து காய வைக்க வேண்டும். வெயிலில் வைத்து தான் காய வைக்க வேண்டும். இது அனைத்தும் நன்றாக காய்ந்த பிறகு இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அளித்து கொள்ளுங்கள்.

200 எம் எல் சல்ஃபர் கலக்காத தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும். பிறகு அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு விளக்கெண்ணெய் சேர்த்து 24 மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். பிறகு இதை ஒரு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை நாம் தினமும் தடவலாம் அல்லது தலைக்கு குளிப்பதற்கு முன்பாக தலையில் வைத்து நன்றாக மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்தும் தலைக்கு குளிக்கலாம்.

இதையும் படிக்கலாமே: பழைய சாதம் ஹேர் பேக்

இப்படி நாம் செய்வதன் மூலம் புதிதாக வரக்கூடிய வெள்ளை முடிகளை தடை செய்வதோடு உதிர்ந்த இடத்தில் முடியை அடர்த்தியாகவும் வளரச் செய்யும். மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த பொருளை பயன்படுத்தி நம்முடைய நரை முடி பிரச்சனையும் முடி உதிர்தல் பிரச்சனையும் சரி செய்து கொள்ளலாம்.

- Advertisement -