ஒரே வாரத்தில் புது முடி முளைக்க

new hair oil
- Advertisement -

எவ்வளவு வயதானாலும் தலைமுடி உதிர்தல் என்பது ஏற்பட்டால் அந்த வயதிலும் கவலை என்பது உண்டாகும். அந்த அளவிற்கு தலைமுடிக்கு நம்முடைய சமுதாயத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தலைமுடி உதிர்ந்து வழுக்கை விழுந்து விட்டால் பார்ப்பவர்கள் அனைவரும் கிண்டல் செய்வார்கள் என்ற எண்ணத்திலேயே தலைமுடி உதிர ஆரம்பித்ததும் அதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்போம். அப்படி நினைப்பவர்கள் வீட்டிலேயே இந்த முறையில் எளிமையாக எண்ணெய் தயார் செய்து தேய்க்க ஒரே வாரத்தில் தலைமுடி வளர்வதை காண முடியும். அது எப்படி என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

கட்டுக்கடங்காத முடி வளர்ச்சியை தரக்கூடிய பல அற்புதமான பொருட்கள் நம்முடைய வீட்டு சமையலறையில் இருக்கிறது. அதை நாம் முழுமையாக பயன்படுத்தினாலே நம்முடைய தலைமுடியில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி முடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும். அந்த வகையில் சமையலறையில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான தேங்காய் எண்ணெயை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

நம்முடைய தலை முடிக்கு தேவையான இரும்புச்சத்தை தரக்கூடிய ஒரு அற்புதமான பொருளாக திகழ்வதுதான் கருவேப்பிலை. ஒரு கொத்து கருவேப்பிலையை எடுத்து சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்து அதை மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இதனுடன் நாம் ஊற வைத்திருக்கும் வெந்தயம் இரண்டு ஸ்பூனை சேர்த்துக் கொள்ள வேண்டும். வெந்தயத்தை நாம் சேர்ப்பதன் மூலம் நம் தலையில் இருக்கக்கூடிய உஷ்ணமானது குறையும் மேலும் தலைமுடி உதிர்தலை தடுக்கும்.

அடுத்ததாக இதனுடன் ஐந்து செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்ள வேண்டும். செம்பருத்திப்பூ என்பது இயற்கையிலேயே நம்முடைய கூந்தலை ஆரோக்கியமாக வளர்வதற்கு உதவி செய்கிறது. அடுத்ததாக ஒரு கையளவுக்கு சோற்றுக்கற்றாழையை எடுத்து பொடியாக நறுக்கி அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய கற்றாழையை தான் பயன்படுத்த வேண்டும். கடைகளில் விற்கக்கூடிய ஜெல்லை பயன்படுத்த வேண்டாம். கற்றாழை நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய வறட்சித்தன்மையை நீக்கும். அதனால் தலையில் பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும்.

- Advertisement -

அடுத்ததாக மூன்று சின்ன வெங்காயத்தை சேர்க்க வேண்டும். சின்ன வெங்காயம் முடி உதிர்ந்த சொட்டையான இடத்திலேயும் முடியை வளரச் செய்வதற்குரிய ஒரு அற்புதமான ஆற்றல் கொண்டதாக திகழ்கிறது. இவை அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு இரும்பு அல்லது சில்வர் பாத்திரத்தில் 200 எம்எல் தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த தேங்காய் எண்ணெய் சல்பர் இல்லாத எண்ணையாக இருப்பது நல்லது.

எண்ணெய் ஊற்றிய உடனேயே நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதை அதில் சேர்த்து விட வேண்டும். குறைந்த தீயில் அரை மணி நேரம் அப்படியே இருக்கட்டும். அவ்வப்பொழுது லேசாக கிண்டி விட்டுக்கொண்டு இருங்கள். இதில் இருக்கக்கூடிய ஈரத்தன்மை அனைத்தும் நீங்கி அதன் சத்துக்கள் அனைத்தையும் எண்ணெய் உட்கருகிக்கும். அதனால் இதை குறைந்த தீயில் அரை மணி நேரம் வைத்திருக்க வேண்டும். பிறகு 5 மிளகை எடுத்து ஒன்றிரண்டாக இடித்து எண்ணெயில் சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

- Advertisement -

சூடு நன்றாக ஆரிய பிறகு இதை அப்படியே வடிகட்டி ஒரு பாட்டிலில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணையை தலையின் வேர்க்கால்களில் படும்படி நன்றாக தேய்த்து மசாஜ் செய்து கொள்ள வேண்டும். தலைக்கு குளிப்பவர்கள் ஆக இருக்கும் பட்சத்தில் அரை மணி நேரத்துக்கு முன்பாக தேய்த்து ஊற வைத்து பிறகு குளிக்க வேண்டும். அல்லது இந்த எண்ணெயை அன்றாடம் எப்பொழுதும் தலைக்கு தேய்ப்பது போல் பயன்படுத்தும் செய்யலாம்

இதையும் படிக்கலாமே மென்மையான சருமத்திற்கு கோதுமை மாவு

இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய முடிக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இந்த பொருட்களை வைத்து தேங்காய் எண்ணெய் தயார் செய்து பயன்படுத்துவதன் மூலம் கண்டிப்பான முறையில் முடி உதிர்களை முற்றிலும் நிறுத்தி புதிய முடியை வளர வைக்க முடியும்.

- Advertisement -