- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஇயற்கையான முறையில் தயாரிக்கப்படும் செம்பருத்தி ஷாம்பு.

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் செம்பருத்தி ஷாம்பு.

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் மார்க்கெட்டில் அதிக அளவில் கெமிக்கல் நிறைந்த ஷாம்புகள் கிடைக்கின்றன. இயற்கையான ஷாம்புகள் என்று கூறிக்கொண்டே அதில் பல கெமிக்கல்களை கலப்பவர்களும் இருக்கிறார்கள். இவற்றை நாம் உபயோகப்படுத்துவதால் விரைவிலேயே நரைமுடி ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் முடி வறட்சி ஏற்பட்டு முடி உதிர்தல் பிரச்சினை அதிகரிக்கிறது. இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் இயற்கையான முறையில் செம்பருத்தி வைத்து எப்படி ஷாம்பு தயார் செய்வது என்று பார்ப்போம்.

எண்ணெய் பசையும் அழுக்குகளும் நீங்க வேண்டும் என்பதற்காகவும் அதே சமயம் பொடுகு தொல்லையை நீக்குவதற்காகவும் பல ஷாம்புகளை நாம் உபயோகப்படுத்துகிறோம். இந்த ஷாம்புகளால் நம் முடிக்கு பலவிதமான பாதிப்புகள் ஏற்படும். இதை தவிர்ப்பதற்கும் தடுப்பதற்கும் நாம் இந்த ஷாம்புகளை உபயோகப்படுத்தாமல் இயற்கையான முறையில் நாமே ஷாம்புவை தயார் செய்யலாம்.

- Advertisement -

அப்படி நாம் தயார் செய்யும் ஷாம்புவில் எந்தவித கெமிக்கல்களும் இல்லாமல் இயற்கையான முறையில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து மட்டுமேதான் நாம் தயார் செய்வோம். அப்படி நமக்கு தேவைப்படும் ஒன்றுதான் செம்பருத்தி, செம்பருத்தியில் இருக்கக்கூடிய பல மருத்துவ குணங்கள் நம் தலைமுடிக்கு மிகவும் நன்மையை தருகிறது. அதுமட்டுமல்லாமல் வறட்சியை நீக்கி முடி உதிர்தலை தவிர்த்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும் தன்மை இந்த செம்பருத்திக்கு இருக்கிறது. சரி இப்பொழுது செம்பருத்தி ஷாம்புவை தயார் செய்யும் முறையை பார்ப்போம்.

ஒரு கைப்பிடி அளவு செம்பருத்தி இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் 10 செம்பருத்தி பூக்களை எடுத்துக் கொள்ளுங்கள். மொட்டுகளாக இருந்தாலும் பரவாயில்லை. இதனுடன் நான்கு பூந்திக்கொட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். அதிகமாக நுழைய வேண்டும் என்று நினைப்பவர்கள் பூந்திக்கொட்டையை சேர்த்துக் கொள்ளலாம். இந்த ஷாம்பு தயார் செய்வதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே பூந்திக்கொட்டையில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு பூந்திக்கொட்டையை நல்ல தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது செம்பருத்தி இலைகளை சிறிது சிறிதாக கிழித்து மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் நாம் எடுத்து வைத்திருக்கும் செம்பருத்தி பூக்களில் இருக்கக்கூடிய தண்டுகளை மட்டும் நீக்கிவிட்டு சேர்த்துக்கொள்ள வேண்டும். ஊற வைத்த பூந்திக்கொட்டையும் இதனுடன் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். அரைத்த இந்த விழுதை 2 மணி நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு ஒரு வடிகட்டியை பயன்படுத்தி 200 மில்லி தண்ணீர் ஊற்றி நன்றாக வடிகட்டி கொள்ள வேண்டும். வடிகட்டிய இந்த நீரே ஷாம்புவாக நமக்கு உபயோகப்படும். மேலே இருக்கும் அந்த சக்கையையும் நாம் தலைக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

இந்த ஷாம்புவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்க விட்டு இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி கொதிக்க வைத்து வைக்கும் பொழுது ஷாம்பூ ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாது. அது மட்டுமல்லாமல் அதிக அளவில் செய்வதை விட அவ்வப்பொழுது செய்து நாம் உபயோகப்படுத்தினால் தான் அதன் சத்துக்கள் நம் தலைமுடியை வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு பேக் நம்முடைய தலைமுடியையும் முகத்தையும் ஆரோக்கியமாக பாதுகாக்கும்.

இந்த முறையில் மிகவும் எளிமையான செம்பருத்தி ஷாம்புவை நாமும் தயார் செய்து நம் தலைமுடியின் ஆரோக்கியத்தை பேணி காப்போம்.

சற்று முன்