நீங்கள் இந்த ஹோரையில் காலண்டரை பார்த்து இதை செய்தால் அதிசயம் நடக்குமா? ஹோரையும், ஹோரைக்குரிய பலன்களும்!

horai-lakshmi
- Advertisement -

‘ஹோரைப் பார்த்து செயல்படுபவர்களிடம் உரசக்கூடாது’ என்கிற பழமொழி உண்டு. ஏனெனில் ஹோரை பார்த்து ஒரு விஷயத்தை செய்யும் பொழுது அந்த விஷயம் நிச்சயம் 100% வெற்றி ஆகும் என்பது ஜோதிட நம்பிக்கை. அந்த வகையில் நல்ல ஹோரையில் நல்ல காரியங்களையும், அசுப ஹோரையில் சில விஷயங்களையும் தவிர்ப்பது வழக்கம். ஹோரை என்பது உங்கள் வீட்டு காலண்டரில் பார்த்தாலே தெரியும்! அதற்கான அட்டவணையும் கொடுக்கப்பட்டு இருக்கும். இதில் எந்தெந்த ஹோரைகள்? என்ன காரியங்களை செய்ய உகந்தது? என்பதை நாமும் தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் செயல்பட்டால் நமக்கும் வெற்றி வந்து சேரும். அவற்றை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

surya-bhagavan

சூரிய ஹோரை:
சூரிய ஹோரையில் புதிய தொழில் துவங்க நினைப்பவர்கள், புதிதாக வேலைக்கு செல்பவர்கள், பெரிய மனிதர்களின் ஆதரவை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள், அரசு வழி காரியங்களை சாதிக்க நினைப்பவர்கள், உங்கள் சொத்துக்கள் மீதான உயில் சாசனம் எழுத யோசிப்பவர்கள், சூரிய ஓரையில் இதனை துவங்க அந்த காரியம் நல்லபடியாக நடக்கும்.

- Advertisement -

சந்திர ஹோரை:
சந்திர ஹோரையில் புதிய வியாபாரம் துவங்க நினைப்பவர்கள், திருமண காரியங்கள் பற்றிய விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்கள், நீர் வழி பயணங்களை மேற்கொள்ள நினைப்பவர்கள், தாய் வழி உறவினர்களை சந்திக்க போகிறார்கள், தைல தயாரிப்பில் ஈடுபட நினைப்பவர்கள் ஆகியோர் இந்த ஹோரையில் இந்த விஷயங்களை துவங்க ஜெயம் உண்டாகும்.

chevvai

செவ்வாய் ஹோரை:
செவ்வாய் ஹோரையில் அறுவை சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள செல்லும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம். அதே போல ஆயுதம் தயாரிக்க நினைப்பவர்கள், இயந்திரங்கள் தயாரிக்க நினைப்பவர்கள், செவ்வாய் ஹோரையில் துவங்க நல்லபடியாக நடக்கும்.

- Advertisement -

புதன் ஹோரை:
புதன் ஹோரையில் புதிதாக வேலைக்கு இன்டர்வியூ செல்பவர்கள், கலை, கல்வி தொடர்பான விஷயங்களுக்கு செல்பவர்கள், புதிய பொன்னை உருக்குபவர்கள், ஜோதிடரை காண செல்பவர்கள் இந்த ஹோரை பார்த்து செல்ல செல்லும் காரியம் 100% ஜெயமாகும்.

guru-bagavan

குரு ஹோரை:
குரு ஹோரையில் குருவை காண செல்பவர்கள், நல்ல மனிதர்களை அறிமுகம் கொள்ள போகிறவர்கள், சுப காரியங்களை நிர்ணயிக்க நினைப்பவர்கள், நவரத்தினங்கள், தங்க நகைகள் வாங்க போகிறவர்கள், புதிதாக வங்கிக் கணக்கு தொடங்க நினைப்பவர்கள், கடன் பாக்கிகளை கொடுக்க நினைப்பவர்கள், புது வஸ்திரம் வாங்க நினைப்பவர்கள், சுபகாரியங்களுக்கு நாள், நேரம் பார்க்க செல்பவர்கள், இந்த ஹோரை பார்த்து செல்ல செல்லும் காரியம் ஜெயமாகும்.

sukran

சுக்கிர ஹோரை:
சுக்கிர ஹோரையில் சுப காரியங்களை நிர்ணயம் செய்ய இந்த ஹோரையை தேர்ந்தெடுக்கலாம். அதே போல வாகனம் வாங்க செல்பவர்கள், இன்ன வாகனம் வாங்க வேண்டும் என்று பார்க்க செல்பவர்கள் கூட சுக்கிர ஹோரை பார்த்துச் செல்ல மனதிற்குப் பிடித்த வாகனம் அமையும். அதே போல விருந்துக்கு செல்பவர்கள், மருத்துவரை காண செல்பவர்கள், ஆபரணம் புதிதாக அணிந்து பார்க்க நினைப்பவர்கள், வஸ்திரம் வாங்க செல்பவர்கள், புது வஸ்திரம் உடுத்த வேண்டிய நேரம், தொழில் தொடங்க கூடிய நேரம் ஆகியவற்றை சுக்கிர ஹோரை பார்த்து செய்ய சுபம் ஆகும்.

sani-temple-1

சனி ஹோரை:
சனி ஹோரையில் காடு, கிணறு, நிலம், தோட்டம் தொடர்பான விஷயங்களை புதிதாக கையாளுபவர்கள், ஆயுத கலை தொடங்குபவர்கள், யாத்திரை செல்ல நினைப்பவர்கள், விருந்துண்ண செல்பவர்கள் ஆகியோர் இந்த ஹோரை பார்த்துச் செல்ல செல்லும் காரியம் நிச்சயம் வெற்றி ஆகும்.

- Advertisement -