உடுப்பி ஹோட்டல் ஸ்டைல்ல ஒரு வேர்கடலை சட்னி காரசாரமா வாசனையா எப்படி செய்யறது பாக்கலாமா?

verkadalai-chutney

வேர்க்கடலை சட்னியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செய்வார்கள். அந்த வரிசையில் கொஞ்சம் வித்தியாசமாக ஒரு சில பொருட்களை சேர்த்து காரசாரமாக வாசனையான உடுப்பி ஸ்டைல் வேர்க்கடலை சட்னி எப்படி செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இட்லி தோசைக்கு இது ஒரு சூப்பர் சைட் டிஷ். இந்த காரசாரமான வாசனையான வேர்க்கடலை சட்னி வெறும் பத்தே நிமிடத்தில் ரெடி பண்ணிடலாம். ரெசிபிய இப்பவே பார்க்க போலாமா.

verkadalai

கடையிலிருந்து வறுத்த தோல் உரிக்காத வேர்கடலையாக வாங்கி இருந்தாலும் தோலை உரித்து விட்டு அந்த வேர்கடலையை ஒருமுறை வறுத்து சட்னி அரைத்தால் சட்னியின் சுவை மேலும் அதிகரிக்கும்.

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, நல்லெண்ணை 1 ஸ்பூன் அளவு ஊற்றி, 50 கிராம் அளவு வேர்க்கடலையை போட்டு பொன்னிறம் வரும் அளவிற்கு வறுக்க வேண்டும். வேர்க்கடலை பொன்னிறமாக வறுத்த பின்பு 2 – டேபிள்ஸ்பூன் அளவு பொட்டுக்கடலை, பச்சைமிளகாய் – 4 லிருந்து 5, பூண்டுப் பல் – 2, கருவேப்பிலை – 1 கொத்து, புதினா – 5 லிருந்து 8 இலைகள் இவைகளை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 2 நிமிடங்கள் வதக்கினால் போதும்.

mint

இறுதியாக சிறிய எலுமிச்சை அளவு புளியை சிறு சிறு துண்டுகளாக கிள்ளி, கடாயில் சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்துவிடுங்கள். இந்தக் கலவை நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு, 1/2 – கப் அளவு தேங்காய் துருவலையும் சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு 80 சதவிகிதம் வரை அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன்பின்பு இறுதியாக 80 சதவிகிதம் அரைத்த வேர்க்கடலை சட்னியில் 2 – இணுக்கு கொத்தமல்லி தழைகளை சேர்த்து, இரண்டு ஓட்டுகள் மட்டும் ஓட்டவேண்டும். கொத்தமல்லித் தழை மொத்தமாக அரைத்து விட கூடாது. ஒன்னும் பாதியுமாக அறிந்து அதன் வாசம் சட்னியில் வரவேண்டும். சட்னி பச்சை நிறத்தில் மாறும் அளவிற்கு நிறைய கொத்தமல்லி தழை வைத்து விடாதீர்கள்.

ஒரே ஒருமுறை இந்த குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றி வேர்க்கடலை சட்னியை அரைத்து தான் பாருங்களேன்! இதன் சுவை நிச்சயமாக வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் பிடிக்கும். காரசாரமாக, வாசனையாக ஒரு வித்தியாசமான சுவையில் சைடிஷ் தயார். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்களுடைய வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
இந்த அறிகுறிகள் எல்லாம் உங்களுக்கு இருந்தால் கட்டாயம் இந்த பிரச்சனைகள் எல்லாம் விரைவில் வரும்! அது என்ன?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.