உங்கள் வீட்டு சமையலறையில் சிறிய ஈக்கள், குட்டி குட்டி பறக்கும் பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருக்கிறதா? இத மட்டும் வச்சு பாருங்க அப்புறமும் ஒரு பூச்சி கூட உயிரோட தம்பிக்காது.

house-fly
- Advertisement -

நம்முடைய வீட்டில், குறிப்பாக சமையல் அறையில் குட்டி குட்டியாக பறக்கும் ஈக்களின் தொந்தரவு சில சமயம் அதிகமாக இருக்கும். எப்படி இந்த ஈக்கள் வருகிறது. எத்தனை நாள் கழித்து தான் போகிறது என்றே சொல்ல முடியாது. இப்படிப்பட்ட பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை காண சின்ன டிப்ஸ் தான் இன்னைக்கு நாம இந்த பதிவின் மூலம் பார்க்க போகின்றோம். குறிப்பாக வாழைப்பழத் தோல் மற்றும் பழுத்த பழவகைகளில் வாசனைக்கு இந்த ஈ வீடு தேடி வரும். அப்படியே நம் வீட்டில் நிரந்தரமாகத் தங்க ஆரம்பித்து விடும் அல்லவா?

house-fly3

இப்படிப்பட்ட பூச்சிகளை நம் வீட்டு சமையலறையில் அப்படியே விட்டுவிட்டோம் என்றால் அவ்வளவுதான். நோய்களை உடனேயே பரப்பிவிடும். சரி, இந்த ஈக்களை விரட்ட சுலபமான ஒரு குறிப்பை இப்போது பார்த்துவிடலாம். உங்களுடைய வீட்டில் சிறிய அளவில் இருக்கும் பிளாஸ்டிக் டப்பா ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு உள்ளே பழுத்த வாழைப்பழம் இருந்தால், அதில் 2 துண்டை அந்த பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.

- Advertisement -

அப்படி இல்லை என்றால், உங்களுடைய வீட்டில் பழுத்த வாசம் வீசும் எந்த பழம் இருந்தாலும், அந்த டப்பாவில் போட்டு, முடிந்தால் அந்தப் படத்தினை கொஞ்சம் கரைத்து நசுக்கி தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் மேல் ஒரு கவர் போட்டு மூடி, ரப்பர் போட்டுவிடுங்கள். அதன் பின்பு அதன் மேலே சிறிய ஓட்டைகளை குத்தி விட்டு விடுங்கள். கீழே படத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

house-fly1

இதை உங்கள் வீட்டு சமையலறையில் சிங்குக்கு கீழே வைக்கலாம். குப்பைக்கூடை பக்கத்தில் வைக்கலாம். இப்படியாக உங்களுடைய வீட்டில் ஈக்களின் நடமாட்டம் எங்கெல்லாம் உள்ளதோ அந்த இடத்தில் எல்லாம் வைத்துவிடுங்கள். அந்த குட்டி குட்டி கொசுக்கள் எல்லாம் அந்த டப்பாவில் உள்ளே, பழத்தின் வாசத்திற்கு உள்ளே போய்விடும். அதன் பின்பு அந்த டப்பாவை விட்டு வெளியேறுவது என்பது கொஞ்சம் சிரமமான விஷயம்தான்.

- Advertisement -

நிறைய ஈக்கள் அந்தத் அப்பாவிற்கு உள்ளேயே இறந்துவிடும். ஒரு சில ஈக்கள் உள்ளேயே சிக்கி இருக்கும். அந்த டப்பாவை தூக்கி அப்படியே குப்பையில் போட்டு விட்டாலும். அல்லது வெளியே கொண்டு போய் சுத்தப்படுத்திவிட்டு, நீங்கள் மீண்டும் பயன்படுத்திக் கொண்டாலும் சரி.

house-fly2

மீண்டும் ஈக்களை துரத்துவதற்கு தான் அந்த தப்பா பயன்படும். வேறு எந்த உபயோகத்திற்கும் அந்த டப்பாவை பயன்படுத்திக் கொள்ளாதீர்கள். பார்ப்பதற்கு இது ஒரு சின்ன டிப்ஸ் மாதிரி தான் இருக்கும். ஆனால் ரொம்ப ரொம்ப யூஸ் ஃபுல்லான டிப்ஸ். ஒரே ஒரு வாட்டி உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. தாங்க முடியாத ஈ தொல்லை இருந்தா நம்ம வீட்ல இட்லி மாவு கூட திறந்து வைக்க முடியாது. புளிச்ச வாடைக்கு உடனே வந்து மாவின் உள்ளே விழுந்து விடும். தலைவலி பிடித்த இந்த ஈக்களை துரத்துவதற்கு இதை விட சுலபமான வழி வேறு எதுவுமே கிடையாது ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
பழங்காலத்து மறந்து போன ஆச்சரியமூட்டும் சில எளிய வீட்டு வைத்தியங்கள்! இவற்றிற்கு ஈடு இணை எதுவுமே இல்லை.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -