பணக்காரராய் வாழ ஆசைப்பட்டால் ஜோதிட சாஸ்திரங்கள் சொல்லும் இந்த விஷயங்களை கடைப்பிடியுங்கள்.

jothidam logo richest man
- Advertisement -

ஒவ்வொரு மனிதரும் தாங்கள் பணக்காரராக வேண்டும் என்று ஆசைப்படுவது உண்டு. இது இயற்கைக்கு மாறான செயலும் கிடையாது. ஆனால் பணக்கார வாழ்க்கை வாழ வேண்டும் எனில் அதற்கான பெரும் முயற்சியை நாம் எடுக்க வேண்டும் என்பதையும் மறக்கக் கூடாது. அப்படியான முயற்சியுடன் சேர்த்து ஒரு சில விஷயங்களையும் நாம் கடைப்பிடிக்கும் போது அது விரைவில் சாத்தியமாகும்.

பொதுவாக ஒரு வேலையை செய்யும் போதும் கடினமாக உழைக்கும் போதும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக உழைத்தால் அந்த வேலை எளிதில் அதே நேரத்தில் சிறப்பாக செய்ய முடியும். அதே போல தான் இந்த ஜோதிடம், ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்களும், வழிமுறைகளும் நம்முடைய உழைப்பு முயற்சியுடன் இதையும் செய்யும் பொழுது பலனை சீக்கிரத்தில் சிறப்பாக பெறலாம்.

- Advertisement -

பணக்காரராய் வாழ என்ன செய்ய வேண்டும்

இந்த முயற்சியை நீங்கள் தொடங்கும் பொழுது முதலில் குலதெய்வ வழிபாட்டை சரிவர செய்ய வேண்டும். ஒரு மனிதன் குலதெய்வ வழிபாட்டை சரியான முறையில் கடைபிடித்தால் அந்த குலம் தழைத்து விளங்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. ஆகையால் தினமும் காலையில் குலதெய்வத்தை நினைத்து வழிபடுவது சிறந்தது.

அடுத்து வீட்டில் குபேர தீபம் ஏற்றுவது. இதுவும் செல்வ செழிப்பை பெருக்கி தரும். இந்த குபேர தீபத்தை ஏற்றும் போது தாமரைத் தண்டு திரி போட்டு ஏற்றினால் மகாலட்சுமி தாயாரின் அனுகிரகத்தையும் சேர்த்து பணவரவை அதிகரித்துக் கொடுக்கும்.

- Advertisement -

இதே போல வீட்டில் பெருமாள் பத்மாவதி தாயாருடன் இணைந்து இருக்கும் படத்தை வைத்து வழிபட வேண்டும். அதுமட்டுமின்றி மாதந்தோறும் வரும் பௌர்ணமி நாளில் சத்திய நாராயண பூஜை செய்வது பணவரவை அதிகரித்து கொடுப்பதுடன் வீடு லட்சுமி கடாட்சத்துடன் நிறைந்திருக்கும்.

வீட்டில் ஆந்தை படம் வைத்து அதை அடிக்கடி பார்த்து வரும் போது பணவரவு அதிகரிக்கும். இதே போல ஓடும் வெள்ளை குதிரை படத்தையும் வீட்டில் மாட்டி அதையும் பார்த்தால் பணவரவு அதிகரிக்கும் அதிர்ஷ்டங்களும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: ராகு கேது பெயர்ச்சி பலன்கள். 8-10-2023 முதல் 26-04-2025 வரை

இத்துடன் கோவில்களில் புண்ணிய காரியங்களுக்காக செலவு செய்வதும் இல்லாத ஏழை எளியவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்வதும் உங்களிடம் இருக்கும் பணம் பல மடங்கு பெருகுவதற்கான வாய்ப்புகளை தரும். இந்த ஜோதிடம் குறித்த பதிவில் உள்ள பண வரவிற்கான வழிமுறைகள் உங்களுக்கும் பிடித்திருந்தால் நீங்களும் பின்பற்றலாம்.

- Advertisement -