உங்கள் வீட்டு மிதியடியை, சுத்தமாக சுலபமாக எப்படி துவைப்பது? ஒரு சின்ன ட்ரிக் இருக்கு. அத நீங்க தெரிஞ்சுக்கோங்க!

mat-cleaning
- Advertisement -

நம்முடைய வீடுகளில் இருக்கக்கூடிய மிதியடியை நாம் கவனிப்பதே இல்லை. பலபேர் அதை துவைத்து போடவே மாட்டார்கள். மூன்றிலிருந்து நான்கு மாதங்கள் ஆனாலும் சரி, அதை எடுத்து சுவற்றில் தட்டி தட்டி, மீண்டும் அப்படியே பயன்படுத்தி வருவார்கள். சிலபேர் ஒரு வருடத்திற்கு ஒருமுறை, பழைய மிதியடியை தூக்கிப் போட்டு விட்டு, புதிய மிதியடியை வாங்கும் பழக்கத்தைக் கூட வைத்திருப்பார்கள். ஆனால், சில பேர் மிதியடியை ஊறவைத்து, பிரஷ் போட்டு, கஷ்டப்பட்டு துவைப்பவர்களும் இருக்கிறார்கள்.

mat

இனி கஷ்டமே தேவையில்லை. உங்களுடைய வீட்டில் பத்து மிதியடிகளை பயன்படுத்தினால் கூட சுலபமாக துவைக்க முடியும். உங்கள் வீட்டு மிதியடியை எப்படித் துவைக்கலாம்? எப்படி துவைத்தால் அதில் இருக்கும் அழுக்கும் துர்நாற்றமும் நீங்கும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கீழே ரப்பர் வைத்து, மேலே ஸ்பான்ச் உள்ள மிதியடி, சாதாரண துணி மிதியடி, எப்படி இருந்தாலும் இந்த முறையை நீங்கள் பின்பற்றலாம். கிழிந்து போக வாய்ப்பில்லை. அது என்ன ட்ரிக் என்பதை தெரிந்து கொள்ளலாமா?

- Advertisement -

முதலில் உங்கள் வீட்டில் இருக்கும் மிதியடிகளை நன்றாக தூசு தட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதன்பின்பு, ஒரு அகலமான பக்கெட்டில் சுடு தண்ணீரை ஊற்றவேண்டும். சாதாரண சூடு இருந்தால் பத்தாது. தண்ணீர் கொதிக்க இருக்கவேண்டும். நீங்கள் எடுத்திருக்கும் தண்ணீர், உங்கள் மேட் மூழ்கும் அளவிற்கு இருந்தால் போதும். தண்ணீரை அதிகமாக ஊற்றி விடக்கூடாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. அந்த தண்ணீரில் வாஷிங் சோடா, வினிகர், துணி துவைக்கும் பவுடர், (விலை கம்மியான துணி துவைக்கும் பவுடரை பயன்படுத்தினாலே போதும். உங்களிடம் எத்தனை மிதியடி இருக்கின்றதோ, அதற்குத் தகுந்த மாதிரி), இந்த மூன்று பொருட்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

mat1

இப்போது நீங்கள் சேர்த்த பொருட்களை எல்லாம் சுடு தண்ணீரில் நன்றாக கலக்கி விட வேண்டும். கையை போட்டு விடாதீர்கள். உங்கள் வீட்டில் குச்சி ஏதாவது இருந்தால், அதை போட்டு கலந்து விடுங்கள். அப்படி இல்லை என்றால், மாபின் பின்பக்கத்தை பயன்படுத்தி நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒவ்வொரு மேட்டாக எடுத்து அதில் நனைத்து விடவேண்டும். நினைக்கும்போதும் கையை பயன்படுத்த வேண்டாம். சுட்டு விடும். 5 மணியிலிருந்து 6 மணி நேரம் வரை மிதியடி ஊறட்டும்.

- Advertisement -

இந்த காலகட்டத்தில், வாஷிங் மெஷின் இல்லாத வீடுகளே இல்லை என்று ஆகிவிட்டது. உங்களுடைய வீட்டில் வாஷிங் மெஷின் இருந்தால், அதில் உங்களுடைய துணியை துவைக்கும் போது, இரண்டாவது, முறை மூன்றாவது முறை அலசும் தண்ணீரை வெளியிடும் சமயத்தில், ஒரு பக்கெட்டை வைத்து பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

mat2

வாஷிங் மெஷினின் அவுட் வாட்டர் வரும் அல்லவா, அந்த பைப்பை பக்கெட்டில் விட்டு, அந்தத் தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், சுடுதண்ணீரில் ஊற வைத்திருக்கும் அந்த மீதியடிகளை, அழுக்கு மொத்தமும் போகும்படி அலச வேண்டும் என்றால், அதிகப்படியான தண்ணீர் எடுக்கும். நல்ல தண்ணீரை முதலில் வீணாக்க வேண்டாமே!

- Advertisement -

hot-water

உங்களுக்கு தேவைப்பட்டால் நல்ல தண்ணீரிலும் அலசிக் கொள்ளலாம். ஆனால் அந்த மேட்டை 8 லிருந்து 10 முறை நன்றாக அலசி விட வேண்டும். அதன் பின்பாக உங்கள் வீட்டு வாஷிங் மெஷினிலேயே, நீங்கள் அலசி சுத்தம் செய்து வைத்திருக்கும் மிதியடிகளை, போட்டு, கொஞ்சம் துணி துவைக்கும் பவுடரையும் போட்டு, ஒருமுறை துவைத்து, அலசி எடுத்தால் மட்டுமே போதும். உங்கள் மேட் பளிச் பளிச்சென்று மாறி, சீக்கிரமே காய்ந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

mat3

சிலபேர் மிதியடியை வாஷிங்மெஷினில் போட்டு துவைக்க வேண்டுமா? அதில் இருக்கும் அழுக்கு மிஷினில் ஒட்டிக் கொள்ளாதா? என்றெல்லாம் போட மாட்டார்கள். ஆனால், அந்த அழுக்கு முழுவதும் மொத்தமாக போயிருக்கும். தாராளமாக வாஷிங் மெஷினில் போட்டு மிதியடிகளை துவைத்து எடுக்கலாம். ஆனால், சுடுதண்ணீரில் ஊற வைக்காமல், நான்கிலிருந்து ஐந்து முறை தண்ணீரில் அலசாமல் அப்படியே மட்டும் போட்டுவிடாதீர்கள். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால், ஒரு முறை உங்கள் வீட்டு மேட்டை இந்த முறை துவைத்து தான் பாருங்களேன்.

இதையும் படிக்கலாமே
இந்த பொருள் இல்லாம கூட 10 நிமிஷத்துல சாம்பார் வெக்கலாமா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have How to Clean Floor Mat. Mithiyadi Cleaning. Floor Mats in Washing Machine. How to Clean House Floor Mats

- Advertisement -