மஞ்சளாய் மாறிப்போன ஃபோன் கவரை, பழையபடி வெள்ளையாய் மாற்ற இப்படி செய்தால் போதும்!

mobile-cover2

நம்முடைய செல் ஃபோனை எப்போதுமே பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கும் மேல் கவர் சீக்கிரமே பழுப்பு நிறமாக, மஞ்சள் நிறமாக மாறிவிடும். அது நம்முடைய செல் ஃபோனின் அழகையே குறைவாக காட்டும். நிறம் மாறிய ஃபோன் கவரை பழையபடி எப்படி வெள்ளையாக மாற்றலாம் என்பதைப்பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

mobile-cover

இதற்கு தேவையான பொருட்கள் பிளாஸ்டிக் பௌல், டிஷ்யூ பேப்பர், சின்தடிக் வினிகர்(synthetic vinegar), பெயிண்ட் தின்னர் ஆயில்(paint thinner oil), துணி துவைக்கும் ஏதாவது ஒரு பவுடர்(detergent powder).

முதலில் ஒரு பிளாஸ்டிக் பவுலை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இரண்டு டிஷ்யூ பேப்பர்களை வைத்து, அதன்மேல் 2 கப் சுத்தமான தண்ணீரை ஊற்றி, 1 ஸ்பூன் துணி துவைக்கும் பவுடர் போட்டு, தண்ணீரில் நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் கரைத்து வைத்திருக்கும் சோப்புத் தண்ணீரில் உங்களது செல்போன் கவரை போட்டு 5 நிமிடங்கள் நன்றாக ஊற வைக்க வேண்டும்.

mobile-cover1

ஊற வைத்திருக்கும் அந்த செல்போன் கவரின் மேல் மற்றொரு டிஷ்யூ பேப்பரை வைத்து, அதன்மேல் ஐந்து சொட்டு சின்தடிக் வினிகரை சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இறுதியாக பெயிண்ட் தின்னர் ஆயிலை 4 சொட்டு ஊற்றி, 3 நிமிடங்கள் கழித்து, செல்ஃபோன் கவரை வெளியே எடுத்து பார்த்தால், நீங்கள் புதியதாக வாங்கிய போது அந்தக் அவர் எந்த நிறத்தில் இருந்ததோ அதே நிறத்திற்கு மாறிவிடும். காய்ந்த துணியை வைத்து நன்றாகத் துடைத்து மீண்டும் செல்ஃபோன் கவரை புதியதாக பயன்படுத்திக் கொள்ளலாம். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்தால் இதற்கான செய்முறை விளக்கத்தை காணலாம்.

இதோ அந்த வீடியோ: