சமையலறையில் வீணாக கீழே ஊற்றும் இந்த தண்ணீரை, உங்கள் வீட்டு ரோஜா செடிகளுக்கு ஊற்றுங்கள். 10 நாளில் செடிகளில் கொத்துக் கொத்தாக பூக்கள் பூக்க தொடங்கிவிடும்.

rose2

நம்முடைய வீட்டில் வாங்கி வைத்த சில செடிகள், ரோஜா செடிகள் ஆக இருந்தாலும் சரி, காய்கறி பழ வகை செடிகளாக இருந்தாலும் சரி, பூக்காமல் காய்க்காமல் இருக்கும் அந்தச் செடிகளை வளர்க்க எவ்வளவு தான் ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை காசு கொடுத்து வாங்கிப் போட்டாலும் வளரவே வளராது. புதியதாக துளிர் வைக்காது. மொட்டுக்கள் இருக்காது. நிறைய பேர் இந்த செடிகளை தூக்கிப் போட மனமில்லாமல் அப்படியே தண்ணீர் ஊற்றி பராமரித்து வருவார்கள். இப்படிப்பட்ட பூக்காத காய்க்காத செடிகளுக்கும் கூட ஊட்டச்சத்தினை கொடுத்து, ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் வளரச்செய்ய முடியும். அது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

arisi

நம்முடைய வீட்டில் கட்டாயம் தினமும் சமைப்போம். அந்த காய்கறிகளினுடைய கழிவுகள் கட்டாயம் இருக்கும். அதை ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இதேபோல் அரிசி பருப்பு கழுவும் தண்ணீர் கட்டாயம் தினம்தோறும் எல்லோருடைய வீட்டிலும் இருக்கும். அதையும் அந்த காய்கறி கழிவுகளோடு கொட்டி விடுங்கள். இப்போது உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீர் தயாராக உள்ளது.

இந்த கழிவுகளை போட்டு வைத்திருக்கும் பாத்திரத்தை ஒரு மூடி போட்டு, மூடி வைத்துவிடுங்கள். ஒரு 10 லிருந்து 15 மணி நேரம் இந்த தண்ணீரை அப்படியே புளிக்க வைத்து விட்டால், அதில் நுண்ணுயிரிகள் அதிகமாக உற்பத்தி ஆகியிருக்கும். அப்படியே இந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

vegetable

இரண்டு லிட்டர் அளவு இந்த ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீர் உங்களுக்குக் கிடைத்தால், அதில் 10 லிட்டர் அளவு நல்ல தண்ணீரை கலந்து கொள்ளுங்கள். அதன் பின்பு உங்களுடைய செடிகளின் வேர்ப்பகுதிகளுக்கு இந்த தண்ணீர் ஊற்றினாலே போதும். ஒரு ரூபாய் கூட செலவு கிடையாது. பூக்கவே பூக்காத செடிகள் கூட பூத்து காய்க்க தொடங்கி விடும். இந்த தண்ணீரை தினம்தோறும் தாராளமாக செடிகளுக்கு கொடுக்கலாம்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் மீன் தொட்டி இருந்தாலும் சரி, அப்படி இல்லை என்றால் உங்கள் அக்கம் பக்கத்து வீட்டில் மீன் தொட்டி இருந்தாலும் சரி வாரத்தில் ஒரு நாள் அல்லது 2 நாள் அந்த தண்ணீரை மாற்றுவார்கள். மீன் தொட்டியில் இருக்கும் சத்து நிறைந்த ஒரு லிட்டர் அளவு தண்ணீரில் 10 லிட்டர் அளவு நல்ல தண்ணீரை கலந்து உங்களுடைய செடிகளுக்கு ஊற்றினால் அவ்வளவு நல்லது.

fish tank

குறிப்பாக மீன் தொட்டிகளில் பச்சை நிறத்தில் பாசி பிடித்து இருக்கும் அந்த பச்சை நிறப் பாசியோடு, செடிகளுக்கு ஊற்றினால் நல்லது. ஆனால், பழுப்பு நிறத்தில் பிடித்து இருக்கக்கூடிய பாசியை செடிகளுக்கு ஊற்றக் கூடாது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

rose-plant-spray

மீன் தொட்டியில் உள்ள கழிவு நீரில் நுண்ணுயிர் சத்து அதிகம் கிடைக்கும். அதனால்தான் அதை செடிகளுக்கு ஊற்றினால் நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த மீன் தொட்டியில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உங்களுடைய செடிகளுக்கு கொடுப்பது நல்லது. முயற்சி செய்து பாருங்கள் நிச்சயமாக உங்கள் வீட்டு செடிகள் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் தெரியும்.