தர்மம் செய்தால் மட்டும் தான் புண்ணியம் கிடைக்குமா?

dharmam

தர்மம் செய்தால் தான் ஒருவருக்கு புண்ணியம் வந்து சேரும் என்றால் ஏழை எளிய மக்கள் பலருக்கு புண்ணியம் குறைந்த அளவே சேரும். ஆகையால் அந்த கூற்று தவறு.

ஒருவர் புண்ணியத்தை பெறுவதற்கு இறைவனின் நாமத்தை அடிக்கடி ஜபித்துக்கொண்டிருந்தாலே போதும். இளமை காலத்தில் வேலை வேலை என்று ஓடினாலும் முதுமை காலத்திலாவது ஜெபிக்கவேண்டும். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் தான் புராணத்தில் உள்ள “அஜாமிளன்” சரித்திரம்.

அஜாமிளன் என்பவர் சிறந்த பக்தர். அவர் தினமும் காட்டிற்கு சென்று கடவுளின் அர்ச்சனைக்கு தேவையான பல வித பூக்களை பறித்துக்கொண்டு தர்ப்பை எல்லாம் எடுத்து கொண்டு வந்து கடவுளை தினமும் பூஜித்து வணங்குவார். இவர் காட்டிற்கு செல்லும் வழியில் ஒருநாள் வேடப் பெண் ஒருவரை கண்டார். பிறகொரு நாள் அவரிடம் பேச ஆரமித்தார். சிறுது நாட்களில் அவர்கள் இருவரும் நன்கு பழக ஆரமித்துவிட்டர்னர்.

ஒருகட்டத்தில் அஜாமிளன் தன் மனைவி பிள்ளைகள் என அனைவரையும் விட்டுவிட்டு வந்து காட்டிலேயே இந்த பெண்ணோடு வாழ ஆரமித்துவிட்டார். அவர்களுக்கு நாலைந்து பிள்ளைகளும் பிறந்துவிட்டன. அதில் கடைசி பையனுக்கு நாராயணன் என்று பெயர் வைத்தார்.

- Advertisement -

வருடங்கள் கடந்தன அஜாமிளானுக்கு வயதானது. ஒருநாள் படுத்த படுக்கையாகிவிட்டார். அவரின் உயிரை பறிக்க எம தூதர்கள் அவரை தேடி வந்துவிட்டனர். அவர்களை பார்த்து நடுங்கிய அஜாமிளன், பயத்தில் தன் கடைசி மகனான நாராயணனை அழைத்தார். உடனே தேவலோகத்தில் இருந்து விஷ்ணுவின் தூர்தர்கள் அவரை அழைத்துப்போக வந்துவிட்டனர்.

அவர்களை பார்த்த எம தூதர்கள் நீங்கள் எதற்கு இங்கு வந்தீர்கள் இவன் மகா பாவி இவன் நரகத்திற்கு செல்லவேண்டியவன் என்று கூறினார்கள். இதை கேட்ட விஷ்ணு தூதர்கள் இவனா பாவி? இவன் எப்பொழுதும் நாராயண நாராயண என்று நாராயணன் நாமத்தை கூறிக்கொண்டுதானே இருந்தான் என்றார்கள்.

இப்போது அஜாமிளானை யார் அழைத்து செல்வது என்பது புரியாததால் அவர்கள் இந்த பிரச்சனை குறித்து தங்களின் தலைவரிடம் சென்று தீர்வு கேட்க திரும்பிவிட்டனர். அதன் பிறகு தன் தவறை உணர்ந்த அஜாமிளன் கடவுளின் நாமத்தை ஜபித்தபடியே தவம் இருந்து முக்தி அடைந்தார்.