முகம் வெள்ளையாக ஃபேஸ் பேக்

face beauty moong dal
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் முகத்தில் கரும்புள்ளிகள், முகப்பரு தழும்புகள் இல்லாமல் பளிச்சென்று வைத்துக் கொள்வது மிகவும் சிரமமான காரியம் தான். இதற்கு காரணம் இன்று நம்மை சுற்றி இருக்கும் சூழ்நிலையும், எடுத்துக் கொள்ளும் உணவும், செய்யும் வேலை போன்றவை தான். இதனால் நம்முடைய முகத்தின் பொலிவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே தான் செல்கிறது

ஆகையால் தான் முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்துக் கொள்ள அழகு நிலையம் சென்று ஆயிரம் கணக்கில் செலவு செய்ய வேண்டியதாக இருக்கிறது.இந்த குறிப்பு மட்டும் உங்களுக்கு தெரிந்தால் போதும். இதுபோன்ற செலவுகளை தவிர்ப்பதோடு இயற்கையான முறையில் உங்கள் முகத்தை தெளிவாக மாற்றிக் கொள்ளலாம். அந்த ஃபேஸ் பேக்கை எப்படி செய்வது என்று இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

முகக் கருமை நீங்கி முகம் வெள்ளையாக

இந்த ஃபேஸ்புக்கை தயாரிக்க பச்சை பயிறு அடுத்து ஆரஞ்சு சாறு சுத்தமான தேங்காய் எண்ணெய் இவை மூன்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் பச்சைப்பயிறை மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல ஃபைன் பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த மாவை சலித்து கொஞ்சம் கூட கொரகொரப்பு தன்மை இல்லாத அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

இது கொரகொரப்பாக இருந்தால் முகப்பரு உள்ளவர்கள் இதை பயன்படுத்தும் போது ஸ்கிரப்பர் போல இருக்கும். இதனால் முகப்பருக்கள் அதிகமாக கூடிய வாய்ப்பு உண்டு. அதன் பிறகு ஜலித்த இந்த மாவை ஒரு பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். இப்போது ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் பச்சைப்பயிறு மாவு இத்துடன் இரண்டு ஸ்பூன் ஆரஞ்சு சாறு ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மூன்றையும் சேர்த்து நல்ல பேஸ்ட் பதத்திற்கு குறைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தண்ணீர் ஊற்ற வேண்டாம். ஒரு வேளை உங்களுக்கு பேஸ்ட் பதம் வரவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் ஆரஞ்சு சாறு அல்லது தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த பேக் போடுவதற்கு முன்பாக முகத்தை நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த பேக்கை முகத்தில் போட்டு 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.

20 நிமிடம் கழித்து லேசாக முகத்தில் மசாஜ் செய்த பிறகு முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவி விடுங்கள். பின்பு காட்டான் டவல் வைத்து முகத்தை ஒற்றி எடுங்கள். இது போல தொடர்ந்து ஏழு நாட்கள் செய்ய வேண்டும்.

- Advertisement -

இது போல பேக்கை இரவு உறங்கும் முன்பு போடுவது நல்லது. இந்த பேக்கை பயன்படுத்தும் சமயத்தில் எந்த விதமான கெமிக்கல் கலந்த சோப்பு கிரீம்கள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. முதல் முறை போடும் போது உங்களுக்கு நல்ல வித்தியாசம் தெரியும். கடைகளில் விற்கும் கெமிக்கலும் அல்லது அழகு நிலையத்தில் செய்யப்படும் சிகிச்சைகளால் நாளாடைவில் பக்க விளைவுகள் ஏற்பட கூடிய வாய்ப்பு உண்டு.

இதையும் படிக்கலாமே: அழகை அள்ளித்தரும் ஃபேஸ் க்ரீம்

இது போன்ற இயற்கையான முறைகளை பின்பற்றும் போது எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது என்பதோடு, அதன் பிறகு இது போன்ற பிரச்சனைகளும் இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அழகு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே.

- Advertisement -