ஃபிளாஸ்கில் பால், சுடு தண்ணீர், காஃபி எதை ஊற்றி வைத்தாலும் அது 12 மணிநேரத்திற்கு சூடாகவும், சூப்பராகவும் இருக்கும். இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க!

kitchen-tip10

ஃபிளாஸ்கில் சூடு அதிக நேரம் தங்க:
ஃபிளாஸ்கில் சூடு அதிக நேரம் தங்க வேண்டும் என்றாலும், பிளாஸ்கில் ஊற்றி வைத்த பொருள் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும் என்றாலும், முதலில் சரியான முறையில் ஃபிளாஸ்கினை பராமரித்து வரவேண்டும். பிளாஸ்கை சுத்தமாக கழுவ வேண்டும். அதே சமயம் ஃபிளாஸ்கை எப்போதும் சுடு தண்ணீரில் மட்டுமே கழுவவேண்டும். பச்சை தண்ணீரில் கழுவ கூடாது. வெந்நீரில் கொஞ்சமாக சோடா உப்பை சேர்த்து, ஃபிளாஸ்கில் உள்பக்கம் ஊறவைத்து கழுவும் பட்சத்தில், ஃபிளாஸ் எப்போதும் புத்தம் புதுசு போல இருக்கும்.

flask2

பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பு நன்றாக கொதிக்கின்ற தண்ணீரை, அந்த ஃபிளாஸ்க் முழுவதும் ஊற்றி மூடி போட்டு அப்படியே வைத்து விடுங்கள். 5 நிமிடம் கழித்து பிளாஸ்கை திறந்து அதன் உள்ளே இருக்கும் வெந்நீரை கீழே கொட்டிவிட்டு உடனடியாக சூடாக இருக்கும் பாலோ, காபியோ அல்லது தேநீரோ, சுடு தண்ணீரோ உங்கள் இஷ்டம்போல் ஊற்றி மூடி வைத்து கொள்ளலாம். குறைந்தது 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரம் வரை அதில் நல்ல சூடு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரை பண்ணி பாருங்க.

பழைய சப்பாத்தியை சூடுபடுத்த சூப்பர் டிப்ஸ்:
நிறைய பேர் வீட்டில் சப்பாத்தியை கொஞ்சம் அதிகமாகத்தான் செய்வோம். மீதமிருந்தால் அடுத்த நாள், அடுத்த வேளை சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று, சில பேர் இதை கெட்டுப்போகாமல் இருக்க ப்ரிட்ஜில் ஸ்டோர் செய்வார்கள். ஆனால் மீண்டும் எடுத்து அந்த சப்பாத்தியை என்னதான் எண்ணெய் ஊற்றி சூடு செய்தாலும், அந்த சப்பாத்தி சாஃப்டாக மாறவே மாறாது.

triangle-chappathi

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்த பின்பு அந்த தோசைக்கல்லில் லேசாக தண்ணீர் தெளித்து, அந்தத் தண்ணீர் தோசைக்கல்லில் இருக்கும் போதே பழைய சப்பாத்தியை போட்டு, சூடு செய்ய வேண்டும். இந்த சப்பாத்தியின் மேல் பக்கத்திலும் ஒரு ஸ்பூன் அளவு லேசாக தண்ணீரை தெளித்து விட வேண்டும். இந்த தண்ணீரை சப்பாத்தி உறிஞ்சி சூடாகும் வரை இரண்டு பக்கமும் திருப்பி போட்டு சூடு செய்து எடுத்தால், சூப்பரான சப்பாத்தி இப்போது சுட்டது போலவே சாஃடாக கிடைக்கும்.

காலிபிளவர் சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ்:
காலிபிளவரை மொத்தமாக வாங்கி எப்போதுமே அப்படியே பிரிட்ஜில் ஸ்டோர் செய்ய முடியாது. அதை என்னதான் வெட்டி சுத்தம் செய்தாலும், அதில் அந்த பச்சை நிற புழுக்கள் கட்டாயம் இருக்கத்தான் செய்யும். சுடுதண்ணீரில் போட்டு கழுவி அதை பிரிட்ஜில் ஸ்டோர் செய்யவும் முடியாது. என்ன செய்வது. காலிஃப்ளவரை வாங்கி அதன் மேலே இருக்கும் பச்சை நிற இலைகளை எல்லாம் நீக்கிவிட்டு முழு காலிபிளவரை அப்படியே சிறிது நேரம் கேஸ் ஸ்டவ்வில் காட்ட வேண்டும்.

coliflower

கேஸ் அடுப்பில் வைத்து தீய விட்டுவிடாதீர்கள். கேஸ் சிம்மில் வைத்து விடுங்கள். அதன் மேலே அனலில் காலிஃப்ளவரை சுற்றிலும் காட்டுவதன் மூலம் உள்ளே இருக்கும் புழு பூச்சிகள் வெளியேறிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். அதன்பின்பு காலிபிளவர் உங்களுக்கு எந்த புழு பூச்சும் இல்லாமல் சுத்தமாக கிடைக்கும். பிறகு ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்யலாம். தேவைப்பட்டால் உடனே சமைத்தும் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்.