இவ்வளவு ஈஸியா சாதாரண தேங்காயிலிருந்து, தேங்காய் எண்ணெயை வீட்டிலேயே பிரித்து எடுக்க முடியுமா என்ன? இந்த டிப்ஸ் தெரிந்தால் மட்டும் போதுமே!

coconut-oil4
- Advertisement -

நம்முடைய வீட்டில் சட்னி அரைப்பதற்கு வாங்கும் சாதாரண தேங்காயிலிருந்து கூட சுலபமான முறையில் நம் கையாலேயே தேங்காய் எண்ணையை பிரித்து எடுக்க முடியும். அது எப்படி என்பதைப் பற்றித்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சில பேர் இந்த தேங்காயிலிருந்து, தேங்காய் எண்ணெயைப் பிரித்து எடுக்க முயற்சி செய்து தோல்வி அடைந்திருந்தாலும், இந்த குறிப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு சின்ன டிப்ஸ் ஃபாலோ செய்தாலே போதும். சரியான முறையில் எண்ணெயைப் பிரித்து எடுத்துவிடலாம். சரி குறிப்புக்கு செல்வோம் வாருங்கள்.

நன்றாக முத்திய பழைய 5 தேங்காய்களை வாங்கிக் கொள்ள வேண்டும். புது தேங்காய் இந்த குறிப்புக்கு பயன்படுத்தக்கூடாது. 5 தேங்காய்களை வாங்கி உடைத்து தேங்காய் துருவியில் துருவிக் கொள்ள வேண்டும். தேங்காய் துருவலை கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு தேங்காய் பாலை பிழிந்து எடுக்க வேண்டும். நிறைய தண்ணீர் ஊற்றக்கூடாது. தேங்காய் பால் திக்காக இருக்க வேண்டும். எவ்வளவு திக்காக பாலை எடுக்க முடியுமோ அவ்வளவு திக்காக எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

முதல் முறை எடுக்கப்பட்ட பாலை மட்டும் தான் நாம் இந்த எண்ணெய் எடுக்க பயன்படுத்த வேண்டும். திக்கான இந்தப் பாலை அப்படியே காய்ச்சி தேங்காய் எண்ணெய் எடுத்தால் ஒரு சில பேருக்கு எண்ணெய் பிரிந்து வராது. இதற்கு தான் ஒரு சூப்பர் ஐடியா உங்களுக்காக. திக்கான இந்த பாலை 12 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். அந்த தேங்காய் பால் கொஞ்சம் கெட்டியாக க்ரீமி பதத்தில் வரும்.

coconut-oil

இதோ மேலே படத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாறு. இந்த ஃப்ரிட்ஜில் வைத்த தேங்காய் பாலில் இருந்து கிரீமை மட்டும் தனியாக அல்லி ஒரு கடாயில் போட்டுக் கொள்ள வேண்டும். தேங்காய் பாலை ஃப்ரிட்ஜில் வைத்தும் கூட, கொஞ்சம் தண்ணீர் ஆக இருக்கக் கூடிய தேங்காய் பாலை அப்படியே சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளுங்கள் வீணாக்காதீர்கள்.

- Advertisement -

இப்போது கிரீமி பதத்தில் இருக்கும் இந்த தேங்காய் பாலை மட்டும் அடுப்பில் வைத்து கைவிடாமல் காய்ச்ச வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ள வேண்டும். 25 நிமிடத்தில் இருந்து 30 நிமிடத்திற்குள் தேங்காய் நன்றாக காய்ந்து, சுருங்கி பிரவுன் கலருக்கு வந்தவுடன் எண்ணெய் தனியாக பிரிந்து வருவது உங்களுக்கே தெரியும்.

coconut-oil

அடுப்பை அணைத்து விடுங்கள். கொஞ்ச நேரம் அப்படியே ஆரட்டும். அதன் பின்பு ஒரு வடிகட்டியை வைத்து இதிலிருந்து தேங்காய் எண்ணெயை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

coconut-oil3

அவ்வளவுதான் 100% நேச்சுரல் ஆன தேங்காய் எண்ணெய் நமக்கு கிடைத்து விட்டது. ஈரமில்லாத பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். இதை சமைக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். தலையில் வைக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்தான். ஆனால் எந்த ஒரு கலப்படமில்லாத தேங்காய் எண்ணெயை தயார் செய்து நீங்களே அந்த எண்ணெயை பயன்படுத்தி பாருங்கள். மனதிற்கு நிறைவாக இருக்கும்.

- Advertisement -