எவ்வளவோ ட்ரை பண்ணாலும் பூரி மட்டும் ஹோட்டலில் செய்வது போல் புஸ்சுன்னு வரலையா? அப்போ இத ட்ரை பண்ணி பாருங்க!

poori

சில பேருடைய வீடுகளில் பூரி சுட்டால் எவ்வளவு இருந்தாலும் பத்தவே பத்தாது. அந்த அளவிற்கு பூரியை விரும்புபவர்களாக இருப்பார்கள். பூரி சுடுவது சப்பாத்தி சுடுவதை விட மிக மிக எளிமையானது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆமாங்க! பூரி சுடுவது என்பது ஒரு கலை தான். ஓட்டலில் சுடுவது போலவே புஸ்சென்று உப்பிய பூரியை வீட்டிலேயே எப்படி அரை மணி நேரத்தில் சட்டென சுட்டு எடுக்க முடியும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

poori 1

பூரி புஸ்சென்று வருவதற்கு நிறைய சிறு குறிப்புகள் உள்ளன. இந்த சிறு சிறு குறிப்புகளை கவனித்து செய்து பார்த்தால் உங்களுக்கும் பூரி ஹோட்டலில் சுடுவது போலவே புஸ்சென்று உப்பி வரும். முதலாவதாக பூரி மாவு எடுக்கும் பொழுது அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவிற்கு ரவை சேர்த்துக் கொள்ளுங்கள். ரவை சேர்ப்பதால் பூரி எவ்வளவு நேரமானாலும் மொறுமொறுவென்று இருக்கும். தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். கை பொறுக்கும் சூட்டில் வெதுவெதுப்பான தண்ணீரை கொண்டு தெளித்து தெளித்து பூரி மாவை பிசைய வேண்டும்.

கடைசியாக பூரியை சிறிதளவு எண்ணெய் ஊற்றி கைகளை கொண்டு அழுத்தி அழுத்தி பூரி மாவை உருட்டி எடுக்க வேண்டும். பின்னர் சிறு சிறு உருண்டைகளாக செய்து கொள்ள வேண்டும். எப்பொழுதும் பூரி சுடும் பொழுது மட்டும் கோதுமை மாவைப் பயன்படுத்தி உருண்டைகளை தேய்த்து எடுக்கக் கூடாது. அதற்கு பதிலாக எண்ணெய்யை பயன்படுத்தி மாவை சிறியதாக அழுத்தம் கொடுக்காமல் தேய்த்து எடுக்கலாம். அப்படி எடுக்கும் பொழுதும் மிகவும் மெல்லியதாக இருக்கக் கூடாது. ஓரளவுக்கு தடிமனாக இருந்தால் தான் பூரி உப்பி வரும்.

poori_1

ரொம்பவே மெல்லியதாக சப்பாத்தியை போல் உருட்டி விட்டால், பூரி உப்பி வராமல் தட்டையாக போய்விடும். நீங்கள் கோதுமை மாவை பயன்படுத்தி உருண்டைகளை உருட்டினால் நீங்கள் போட இருக்கும் சமையல் எண்ணெய் வெகு விரைவாகவே மாவு கலந்து அழுக்காகி விடும். இதையே நீங்கள் எண்ணெய் தடவி உருண்டைகளை உருட்டி எடுத்தால் எண்ணெய் மீண்டும் பயன்படுத்தும் அளவிற்கு சுத்தமாக இருக்கும். அது போல் மாவை பிசையும் பொழுதும் சரி, உருட்டும் பொழுதும் சரி, அதிகமாக அழுத்தம் கொடுத்து விடக்கூடாது.

- Advertisement -

லேசாக தேய்த்தாலே போதும். நீங்கள் நன்கு அழுத்தி தேய்த்து விட்டால் பூரி உப்பி வராமல் போய் விடும் வாய்ப்புகள் உண்டு. சப்பாத்தியை செய்வதற்கு அதிக நேரமுமோ! அதை ஊற வைப்பதற்கு அதை விட அதிக நேரமும் எடுக்கும். ஆனால் பூரி அப்படி அல்ல! சட்டென மாவை எடுத்து உருட்டி அரைமணியில் எளிதாக பூரி செய்து அசத்தி விடலாம். கடாயில் சூடான எண்ணெயில் பூரியை போடும் பொழுது மேல்புறமாக பகுதிக்கு இருக்கும் எண்ணெயில் கரண்டியால் எடுத்து ஊற்ற வேண்டும் அப்படி செய்யும் பொழுதே புஸ்சென்று ஓட்டலில் இருப்பது போலவே வரும்.

poori 4

குறைவான தீயில் வைத்து இரண்டு புறங்களிலும் நன்கு வெந்து வந்த பின் மூடியை எடுத்து விடலாம் பூரியின் ஓரங்களில் எண்ணெய் பட்டால் தான் பூரி முழுவதுமாக நன்றாக வேகும் எனவே அதையும் சரியாக பார்த்துக் கொள்ள வேண்டும். பூரியை விரும்பாத குழந்தைகளே இல்லை என்று சொல்லலாம். அவர்களுக்கு பிடித்தமான படி இந்த முறையில் பூரியை சுட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலாகவே சாப்பிடுவார்கள்.

இதையும் படிக்கலாமே
உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வித்தியாசமான ‘வெந்தயக்கீரை புலாவ்’ இப்படி சுலபமாக ஒருமுறை செய்து பாருங்க! இனி அடிக்கடி வீட்டில் கேட்டுட்டே இருப்பாங்க!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.