இஞ்சி தோல் சீவுவது இவ்வளவு ஈஸியா? இது தெரியாம இவ்வளவு நாள் கஷ்டப்பட்டோமே! இதையெல்லாம் இப்படி வைத்தால் சீக்கிரம் அழுகாது தெரியுமா?

inji-ginger-chilli
- Advertisement -

அன்றாட சமையலில் உணவில் சேர்க்க தவறாமல் இருக்க வேண்டிய ஒரு பொருள் இஞ்சியாகும். இந்த இஞ்சி தினமும் சேர்த்து வந்தாலே வயிற்று உபாதைகள் நெருங்காது. இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன. இத்தகைய இஞ்சியை தோல் சீவி சுத்தம் செய்வது தான் சற்று கடினமான வேலையாக இருக்கும். அதை எப்படி சுலபமாக்குவது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

கொலஸ்ட்ராலை குறைத்து ஒற்றைத் தலைவலியை உடனடியாக விரட்டக்கூடிய சக்தி இந்த இஞ்சிக்கு உண்டு. இதய நோய், ரத்த அழுத்தம் போன்ற பல நோய்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கவும், இஞ்சியை அனுதினமும் சமையலில் பயன்படுத்துவது நல்லது. பச்சையாகவே இஞ்சியை மென்று சாப்பிட்டு வரலாம் அல்லது இஞ்சி சாறை தேனுடன் கலந்தும் சாப்பிடலாம்.

- Advertisement -

இந்த இஞ்சியை சுத்தம் செய்வது என்பது பெரும் போராக இருக்கும். முதலில் இஞ்சியை வாங்கியவுடன் மண்ணாக இருந்தால் அதை நன்கு கழுவி சுத்தம் செய்து விட வேண்டும். நன்கு திடமான இஞ்சியே சமையலுக்கு சிறந்தது. அழுகிய இஞ்சியை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள். இஞ்சியை கழுவி சுத்தம் செய்து காய வைத்துக் கொள்ளுங்கள்.

ஈரப்பதம் இல்லாமல் நன்கு காய்ந்து வந்ததும் பாத்திரம் கழுவ பயன்படுத்தும் இரும்பு நார் ஒன்றை புதிதாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நாரை வைத்து லேசாக தேய்த்து கொடுத்தால் போதும் இஞ்சி தோல் சுலபமாக நீங்கிவிடும். இண்டு இடுக்குளில் இருக்கக் கூடிய தோலையும் இது ரொம்ப சுலபமாக நீக்க கூடியது. பின்பு தண்ணீரில் ஒரு முறை கழுவி எடுத்தால் போதும், கொஞ்சம் கூட தோல் இல்லாத இஞ்சி நமக்கு சுலபமாக கஷ்டப்படாமல் கிடைக்கும்.

- Advertisement -

இஞ்சியை தோல் நீக்கி ஃப்ரிட்ஜில் வைத்தால் சீக்கிரம் அழுகிவிடும் எனவே தோலை நீக்காமல் இஞ்சியை நன்கு காய விட்டு துண்டு துண்டுகளாக வெட்டி ஃப்ரிட்ஜில் ஒரு ஏர் டைட் கண்டெய்னரில் போட்டு வைத்துக் கொள்ளலாம். அடிக்கடி இஞ்சி துவையல், இஞ்சி ஊறுகாய், இஞ்சி சட்னி என்று செய்து சாப்பிட்டு வந்தால் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.

இஞ்சி மட்டும் அல்லாமல் ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்ய வேண்டிய சில பொருட்கள் உண்டு. தேங்காயை மூடியோடு கவிழ்த்து ஒரு பாத்திரத்தில் வைத்து அப்படியே பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் அழுகாமல் இருக்கும். பச்சை மிளகாயை காம்புகளை நீக்கிவிட்டு ஒரு டிஷ்யூ பேப்பரில் சுற்றிக் கொண்டு ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் அழுகாமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
கேரளா ஸ்பெஷல் சிந்தாமணி குழிப்பணியாரம் ரொம்ப சிம்பிளா எப்படி செய்றதுன்னு தெரிஞ்சுக்கலாமா?. சுட சுட இந்த குழிப்பணியாரத்தோட சுள்ளுன்னு காரசாரமா இந்த சட்னி இருந்தால் டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.

தக்காளி பழங்களை வாங்கியதும் அப்படியே கொண்டு போய் ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. அதை நன்கு கழுவி பேன் காற்றில் காய வைத்து ஈரம் இல்லாமல் துடைத்து பின்பு பிரிட்ஜில் போட்டு வைத்தால் சீக்கிரம் அழுகாது. கறிவேப்பிலை இலைகளை காம்புடன் வைப்பதை விட உருவி ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு டைட்டாக மூடி வைத்தால் நீண்ட நாட்களுக்கு பிரஷ்ஷாக அப்படியே இருக்கும். மல்லி மற்றும் புதினாவை வேர் பகுதியை வெட்டி விட்டு பின்னர் பேப்பரில் சுற்றி வைத்தால் சிறிது நாட்கள் அப்படியே இருக்கும், சீக்கிரம் அழுகாது.

- Advertisement -