சாமி கும்பிடும் போது எப்படி வேண்டிக் கொண்டால் 100% அப்படியே நடக்குமென்று தெரிஞ்சிக்கணுமா?

temple-prayer
- Advertisement -

எந்த மதமாக, எந்த இனமாக, எந்த மொழியாக இருந்தாலும் அவரவர்களுக்கு என்று தனித்துவமான தெய்வங்கள் நிச்சயம் இருக்கும். மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருப்பதாக ஒவ்வொருவரும் நம்பிக் கொண்டிருக்கிறோம். அதைத் தான் நாம் பல்வேறு வடிவங்களில் கடவுளர்களாக போற்றிக் கொண்டாடுகிறோம். நமக்கு கஷ்டம் என்று வரும் பொழுது நாம் உடனே ஓடோடி செல்வது அவர்களிடத்தில் தான். நாம் எப்படி வேண்டிக் கொண்டால் நம்முடைய வேண்டுதல் அப்படியே பலிக்கும்! என்று ஒரு வரைமுறை உள்ளது. அதை சரியாக கடைபிடித்தால் நினைத்தது நிறைவேறும். அதைப் பற்றிய ஒரு விரிவான அலசல் இந்த பதிவின் மூலம் அறிவோம் வாருங்கள்.

praying

முதலில் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். நாம் நமக்காக வேண்டும் வேண்டுதலை விட, மற்றவர்களுக்காக மனமிரங்கி வேண்டும் வேண்டுதல்கள் அதிவிரைவாக பலித்துவிடும். அதிலும் கூட்டாக பிரார்த்தனை செய்பவர்கள் விரைவாக பலனை அடைவார்கள் என்கிறது சாஸ்திரம். கஷ்டம் வரும் பொழுது மட்டும் சாமி கும்பிடுவது மிகவும் தவறான பழக்கம். அதனால் மென்மேலும் சோதனைகள் தான் வந்து கொண்டிருக்கும். எவ்வளவோ விஷயத்திற்காக எவ்வளவு நேரத்தை செலவிடுகிறோம்? அதில் பலவும் வீணான நேரங்கள் தான் என்கிறது ஒரு ஆய்வு. சராசரியாக ஒரு நாளில் நான்கு மணி நேரத்தை வீணாக தான் செலவு செய்து கொண்டிருக்கிறோம் என்கிறது அந்த ஆய்வு முடிவு.

- Advertisement -

தினமும் நமக்கு இறைவனிடத்தில் கான்வர்சேஷன் இருந்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு சிலர் தன்னுடைய மனசாட்சியுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். சிலர் ஏதேனும் ஒரு பொருளை நண்பனாக நினைத்து பேசிக் கொண்டிருப்பார்கள். அதற்கு பதிலாக இறைவனிடத்தில் மனம் விட்டு பேசுங்கள். இப்படி செய்வதால் உங்கள் ஒழுக்கம் சீராகும்.

pray

சில நிமிடங்களாவது ஒரு நாளில் இறைவனைப் பற்றிய சிந்தனையில் மட்டும் மூழ்கி இருங்கள். அந்த சமயத்தில் எதுவும் பேசாதீர்கள். மனதால் மட்டும் நினையுங்கள். பிறகு நீங்கள் எப்படி மற்றவரிடம் பேசுகிறீர்களோ அதே போல் மனக்குறைகளை இறைவனிடத்தில் சொல்லுங்கள். நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது, பயணம் மேற்கொள்ளும் பொழுது உங்களுடன் இறைவன் இருப்பதாக நினைத்து அடிக்கடி சிறிய வேண்டுதல்கள் செய்யுங்கள்.

- Advertisement -

நாம் கேட்காமலேயே இறைவன் நமக்காக எவ்வளவு செய்து இருப்பார். அதற்காக நன்றி கூறுங்கள். எப்போதும் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருப்பதில் பயனில்லை. கொடுத்தவற்றுக்கு நன்றியும் அடிக்கடி கூற வேண்டும் என்பது தான் முக்கியம். அப்படி நீங்கள் சாமி கும்பிடும் பொழுது எந்த சூழ்நிலையிலும் உங்கள் மனதில் இருக்கும் பகையும், கசப்பு உணர்ச்சியும் வந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு பிடிக்காதவர்களுக்கு கூட நல்ல புத்தி கொடுக்குமாறு மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

praying-god1

சாமி கும்பிடும் பொழுது யார் யாரெல்லாம் விரோத மனப்பான்மையுடன் வெறுப்பாக வேண்டுதல்கள் வைக்கிறார்களோ, அவர்களின் வேண்டுதல்களுக்கு இறைவன் செவி சாய்ப்பது இல்லையாம். தவறு செய்பவர்களை தண்டிப்பது இறைவனுடைய வேலை. நம்முடைய வேலை அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு பிடித்தவர்களுக்காக ஒவ்வொருவரின் பெயரை சொல்லியும், அவர்களுக்கு இருக்கும் பிரச்சனையை சரி செய்யுமாறு வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

praying

நமக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மற்றவர்களின் பிரச்சனைகளை நாம் வேண்டுதலாக வைக்கும் பொழுது அதனுடன் நம்முடைய பிரச்சனைகளும் நிச்சயம் தீரும் என்கிறது சாஸ்திரம். இது எப்படி இருக்கிறது தெரியுமா? ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பது போல் உள்ளது அல்லவா? ஆனால் உண்மையில் இதுவே சிறந்த வேண்டுதலாக சாஸ்திரம் கூறுகிறது.

praying-god

நாம் எந்த வேண்டுதலை சாமியிடம் வைத்தாலும் அது நிச்சயம் பலிக்கும் என்று முதலில் நம்ப வேண்டும். நம்பிக்கையே முதல் கடவுள் என்கிறது தர்ம சாஸ்திரம். நடக்குமா? நடக்காதா? என்று நினைத்தாலே அது நடப்பதில்லை. நடக்கும் என்று தீர்க்கமாக நம்புங்கள். உங்களின் அனைத்து பிரார்த்தனைகளும் 100% நிச்சயம் நிறைவேறும் என்பதைக் கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
சுக்கிர பகவானை இப்படி வழிபாடு செய்து பாருங்கள்! நினைத்த காரியம் 11 வாரங்களில் நிறைவேறும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -