குழந்தைகளை காத்தருளும் கிருஷ்ண ஜெயந்தி விரதத்தை முறையாக இருப்பது எப்படி?

krishnajeyanthil

கம்சனை அழிப்பதற்காகவும் உலகில் தர்மத்தை நிலைநிறுத்துவதற்காகவும் தசாவதாரத்தில் 9-வது அவதாரமாக இந்த உலகில் உதித்தார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். அவர் பிறந்த இந்த நாளையே பக்தர்கள் அனைவரும் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறார்கள். வைணவத் தலங்களில் இந்த விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும்.

Sri krishna feet

பல சிரிப்புகள் மிக்க கிருஷ்ண ஜெயந்தியான இன்று, கணவன் மனைவி ஆகிய இவனும் கிருஷ்ணரை நினைத்து விரதமிருந்து, இன்று இரவு கண் விழித்து கிருஷ்ணரின் பாடல்கள், மந்திரங்கள், வரலாறு போன்றவற்றை கேட்டுக்கொண்டு இருக்க வேண்டும்.

அதன் பிறகு நாளை மீண்டும் கிருஷ்ணருக்கு பூஜை செய்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் அளித்தபின் விரதத்தை பூர்த்தி செய்யவேண்டும். இப்படி செய்வதால் பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

Krishna feet

குழந்தை பாக்கியம் இல்லாதோர் இன்று முறையாக விரதம் இருந்து கண்ணனை வேண்டினால், ஜாதகத்தில் உள்ள புத்திர தோஷம், புத்திர தடை போன்றவை நீங்கி விரைவில் குழந்தை பிறகும்.

krishnar

கருவுற்றிக்கும் தாய்மார்கள் தன் வயிற்றில் வளரும் சிசுவுவிற்கு புக்தி, யுக்தி, அறிவு, ஆற்றல், ஆயுள், ஆரோக்யம் போன்ற வற்றை அருளும்படி பகவானிடம் மனதார வேண்டினாள் அவர் அந்த சிசுவிற்கு அணைத்து நற்பலன்களையும் அருளி சிசுவை ஆசீர்வதிப்பார்.