உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஒழிப்பது எப்படி?

negative-energy-home

நம் உடம்பில் எவ்வாறு நெகடிவ் பாசிடிவ் என இரு எனர்ஜிகள் இருக்கிறதோ அதே மாதிரி தான் நாம் வாழும் வீட்டுக்குள் அந்த இரண்டும் இருக்கிறது. எதிர்மறை சக்திகள் எல்லாருடைய வீட்டிலும் நிச்சயம் இருக்கும். அந்த சக்திகள் கண்ணுக்குத் தெரியாத நுண் சக்திகளாக இருக்கும். நம் வீட்டை நாம் எவ்வளவு தான் தூய்மையாக வைத்துக் கொண்டாலும் இந்த எதிர்மறை சக்திகளிடமிருந்து நம்மை காத்துக் கொள்ள ஒரு சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவற்றைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Home 2

நம் முன்னோர்கள் நமக்குச் சொல்லிச் சென்ற ஒவ்வொன்றிலும் ஓராயிரம் அர்த்தங்கள் ஒளிந்து கொண்டிருக்கும் ஆனால் அதை யாரும் இந்த தலைமுறையினர் முழுமையாக நம்புவது கிடையாது. அவர்கள் சொல்லிச் சென்ற ஒவ்வொன்றிற்கு பின்னாலும் ஏதேனும் அறிவியல் காரணங்களும் கட்டாயம் இருக்கும்.

முதலில் உங்கள் வீட்டில் நெகட்டிவ் எனர்ஜி எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு ஒரு வழிமுறை இருக்கிறது. அதை சோதித்துப் பார்த்தபின் நீங்களே அதன் தாக்கத்தை உணர்வீர்கள். நம் வீட்டில் மட்டுமல்ல நாம் செல்லும் பல இடங்களில் இருந்தும் நாம் நம்முடன் கொண்டு வந்து நம் வீட்டில் சேர்க்கிறோம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

white-hibiscus

வெள்ளை செம்பருத்தி செடி:
நர்சரி கடைகளில் விற்கும் வெள்ளை செம்பருத்தி செடியை வாங்கிக் கொண்டு வந்து உங்கள் வீட்டில் தண்ணீர் ஊற்றி முறையாக பராமரித்து வளர்த்து பாருங்கள். உங்கள் வீட்டில் நெகட்டிவ் எனர்ஜி இருக்குமாயின் அந்தச் செடி வாடிப் போய்விடும். இது ஒரு சுலபமான வழிமுறை தான் இதை வைத்தே உங்கள் வீட்டில் எதிர்மறை சக்தியின் தாக்கம் எவ்வளவு இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.

- Advertisement -

அப்படி எதிர்மறை சக்தி உங்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் நீங்கள் செய்ய வேண்டியவை:
பூச்சி அரிக்கப்படாத மாந்தளைகளை கொத்துக்கொத்தாக பறித்து வந்து வீட்டு வாசலில் நன்கு நிறையும்படி தோரணம் கட்டி விடுங்கள். சிலர் கூறுவது போல் ஒரு ஒரு இலையாக நூலில் கோர்த்து கட்டுவது சரியான முறை அல்ல. இதன் அறிவியல் காரணம் வெளியிலிருந்து வரும் கெட்ட கார்பன்-டை-ஆக்சைடை இவைகளால் உறிஞ்சப்பட்டு நம் வீட்டில் அதனை கொண்டு வராமல் தடுப்பதற்கு துணை புரிகின்றது. அதனால்தான் நன்கு நிறையும்படி நெருக்கி நெருக்கி வைத்து தொங்க விடுங்கள்.

அதுபோல வீட்டில் தினமும் விளக்கு ஏற்றி பழகுங்கள் இப்போதெல்லாம் யாருடைய வீட்டிலும் தினமும் விளக்கு எரிவது கிடையாது. விளக்கு ஏற்றுவதனால் வீட்டிலுள்ள எதிர்மறை சக்திகள் அனைத்தும் அதன் பலமிழக்கின்றன. நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், துளசிச்சாறு அல்லது துளசி பொடி இவை மூன்றையும் கலந்து தீபம் ஏற்றினால் அதிலிருந்து வரும் புகையானது கெட்ட சக்திகளை ஒழித்து விடும்.

deepam

அதுபோல் வாரம் இரு முறையாவது சாம்பிராணி புகை போடுங்கள். சாம்பிராணி என்றதும் கடைகளில் இருக்கும் கம்ப்யூட்டர் சாம்பிராணி என்று நினைத்துக் கொண்டு விடாதீர்கள். தேங்காய் ஓட்டை நன்கு நெருப்பிலிட்டு அதனை சாம்பிராணி காட்டும் தட்டில் போட்டு அந்த தணல் இருக்கும்போதே வெண்கடுகு, நாயுருவி, குங்குலியம் இவை மூன்றையும் கலந்து அதில் போட்டு அதிலிருந்து வரும் புகையை வீடு முழுவதும் காட்டுங்கள். மகாலட்சுமி குடிகொண்டிருக்கும் பீரோவையும் திறந்து காட்டுங்கள்.

dhoopam

இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து துஷ்ட சக்திகளும், நெகட்டிவ் எனர்ஜியும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு நல்லதொரு சுபிட்சத்தை உங்கள் குடும்பத்திற்கு வழங்கும்.

இது போன்ற மேலும் பல ஆன்மிக தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Negative energy in home. How to remove negative energy. Signs of negative energy in home. Ethirmarai sakthi vilaga.