மாதக்கணக்கில் தேங்காயை கெட்டு போகாமல் பாதுகாக்க சூப்பரான ஐடியா இதோ! தேங்காய் எப்படி வாங்க வேண்டும்? நீண்ட நாட்கள் எப்படி சேமிக்கலாம்? தேங்காய் பற்றிய பயனுள்ள தகவல்கள்!

coconut-storage

சமையலில் முக்கியமாக நமக்கு அடிக்கடி தேவைப்படும் பொருட்களில் தேங்காயும் ஒன்று. அடிக்கடி தேங்காயை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் பிரச்சனைகள் குறையும். வாய்ப்புண் போன்ற பிரச்சினைகளும் வராமல் இருக்கும். இந்த தேங்காயை நீண்ட நாட்களுக்கு எப்படி கெடாமல் வைத்திருப்பது? பிரிட்ஜ் இருந்தாலும், இல்லை என்றாலும், தேங்காய் உடைத்ததாக இருந்தாலும், உடைக்காமல் இருந்தாலும் நிறைய நாட்களுக்கு அழுகாமல் பிரஷ்ஷாக பாதுகாப்பது எப்படி? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

coconut 2

தேங்காயை எப்படி பார்த்து வாங்குவது?
தேங்காயை தட்டிப் பார்த்து வாங்க வேண்டும் என்று கூறக் கேட்டிருப்போம். தேங்காயை எடுத்தவுடன் லேசாகத் தட்டினாலே நல்ல பலத்த ஓசை கேட்கும் தேங்காய், நல்ல தேங்காய் ஆகும். அதற்குப் பிறகு தேங்காயை ஆட்டி பார்க்கும் பொழுது உள்ளே நிறைய தண்ணீர் இருக்க வேண்டும். வெளிப்புறப் பகுதிகளில் ஈரம் இருக்கக் கூடாது, விரிசல் இருக்கக் கூடாது. ஓட்டுப் பகுதியில் விரிசல்கள் லேசாக இருந்தாலும் அந்த தேங்காயை வாங்க வேண்டாம்.

உடைக்காமல் எவ்வளவு நாட்கள் வரை பாதுகாக்கலாம்?
தேங்காயை உடைக்காமல் சுமார் நான்கு மாதங்கள் வரை பாதுகாப்பாக உங்கள் அறை வெப்ப நிலையில் வைத்திருக்கலாம். எனினும் உலர்ந்த மற்றும் குளிர்ச்சியான இடத்தில் வைத்திருப்பது மிகவும் நல்லது. மேலும் தேங்காயின் கண் உள்ள பகுதி அதாவது குடுமி உள்ள பகுதி மேற்புறம் ஆகவும், மண்டையோட்டு பகுதி கீழ் கீழேயும் இருக்குமாறு நிமிர்த்தி வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதால் தேங்காய் வெகுநாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும்.

coconut

உடைத்த தேங்காய் மூடிகளை என்ன செய்யலாம்?
தேங்காயை உடைத்து முடித்த பின் உடனே முழுவதுமாக பயன்படுத்த போவது இல்லை. எப்படியும் ஒரு மூடி பயன்படுத்திவிட்டு இன்னொரு மூடியை பாதுகாக்க வேண்டி இருக்கும். மீதமிருக்கும் இந்த அரை மூடியை மறுநாள் பயன்படுத்துவீர்கள் என்றால் சதைப் பகுதியில் லேசாக உப்பு தடவி வைத்தால் வெளியில் அல்லது பிரிட்ஜில் எங்கு வைத்தாலும் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும். இல்லை இன்னும் சில நாட்களுக்கு பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றால் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதனுள் தேங்காய் மூடியை மூழ்கும்படி ஆக வைக்கலாம். இதற்கு ஓடு பகுதி கீழே இருக்க வேண்டும். மேலே இருக்கும் சதைப்பகுதி வெளியில் தெரியாதவாறு வெள்ளை துணியை வைத்து பாத்திரத்தை மூடி விடுங்கள். ஓரிரு நாட்களுக்கு அப்படியே பிரஷ்ஷாக வெளியில் வைத்தாலும் இருக்கும்.

தேங்காய் மூடியை வேறு எந்த வகையிலும் நீங்கள் பிரிட்ஜில் வைத்தாலும் ஓரிரு நாட்களுக்கு மேல் சுருங்கி அல்லது அழுகி போய்விடும். நிறைய தேங்காய் இருக்கிறது என்றால் நீங்கள் அதனை துருவி வைத்துக் கொள்ளுங்கள். துருவிய தேங்காயை ஏர் டைட் கண்டைனரில் சேமித்து ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். இப்படி செய்தால் எவ்வளவு நாட்கள் ஆனாலும் அப்படியே இருக்கும். தேங்காய் மூடியை அப்படியே கொண்டு போய் பிரீசரில் வைத்தால் சதைப் பகுதியை பனிக்கட்டிகள் கிழித்து உள்ளே தங்கிவிடும். எனது அவசரத்திற்கு வைப்பவர்கள் பால் வைக்கும் ட்ரேயில் மூடியை கவிழ்த்து வையுங்கள். இப்படி வைப்பதால் ஓரிரு நாட்களுக்கு கெட்டுப் போகாமல் நிறம் மாறாமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்.

தேங்காய் பத்தைகளாக போட்டு சிறுசிறு வில்லைகளாக கத்தரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு எவர்சில்வர் டப்பாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதற்குள் போட்டுக் கொள்ளுங்கள். இதனை வெளியில் வைத்தால் ஒரு வாரம் வரை அப்படியே இருக்கும். அல்லது பிரிட்ஜில் எங்கு வைத்தாலும் வாரக்கணக்கில் கெட்டுப் போகாமல் பிரஷ்ஷாக இருக்கும். தேவையான பொழுது எடுத்து சமையலுக்கு எளிதாக பயன்படுத்திக் கொள்ளலாம்.