உங்கள் ராசிக்கு பணப்புழக்கம் எப்படி இருக்கும் ?

money

பனிரெண்டு ராசிக்காரர்களுக்கும் எப்படி வேறு வேறு குணாதசியம் இருக்கிறதோ அது போல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான யோகமும் இருக்கிறது. அந்த வகையில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணப்புழக்கம் எப்படி இருக்கும் என்பது பற்றி பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:

mesham
பொதுவாக மேஷராசி நண்பர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக முன்னுக்கு வந்துவிடும் திறன் கொண்டவர்கள். வெற்றி கனியை எளிதாக பறிக்கும் யோகம் படைத்த நீங்கள் எந்த காரியத்தையும் புத்திசாலித்தனத்தோடு செய்தால் எளிதில் லாபம் அடைவீர்கள் அதோடு உங்களிடம் எப்போதும் பணம் புரள ஆரமிக்கும்.

ரிஷபம்:

எந்த வேலை செய்தாலும் அதை முழு மனதோடும் செய்யும் ரிஷபராசி நண்பர்களே நீங்கள் பணத்தை கடவுளாக நினைப்பவர்கள். பணம் சம்பாதிப்பதில் வல்லவரான நீங்கள் எந்த அளவிற்கு உழைத்து சம்பாதிக்கிறீர்களோ அதே அளவிற்கு உங்களுக்கு செலவும் காத்திருக்கும். நீங்கள் எவ்வள்வு தான் சம்பாதித்தாலும் கஷ்ட பட்டு சேமித்தால் தான் பணக்காரராக முடியும்.

- Advertisement -

மிதுனம்:

எப்போதும் நடுநிலையான பண புழக்கத்தில் இருக்கும் மிதுன ராசி நண்பர்களே, உங்களிடம் பணம் அளவுக்கு அதிகமாகவும் இருக்காது அதே சமயம் பற்றாக்குறையாகவும் இருக்காது. பிறப்பு முதல் இறப்பு வரை உங்களிடம் பணப்புழக்கம் ஒரே சீராக இருக்கும்.

கடகம்:

பணத்தை சேமிக்கும் எண்ணம் கொண்ட கடக ராசி நண்பர்களே, பயணத்தின் மூலம் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். 26 மற்றும் 30 வயதில் உங்களுக்கு நல்ல யோகம் உண்டு. பணத்தை நீங்கள் எவ்வளவு தான் சேர்த்தாலும் சில வேளைகளில் உங்களுக்கு பணத் தட்டுப்பாடு இருக்கும்.

சிம்மம்:

செலவை கண்டு அஞ்சும் சிம்ம ராசி நண்பரகளே, உங்களுக்கு பணம் எப்போது தேவைப்பட்டாலும் உடனே உங்களுக்கு கிடைத்துவிடும். உங்களிடம் பண புழக்கம் நன்றாகவே இருக்கும் ஆனாலும் பணத்தை செலவழிப்பதில் உங்களுக்கு ஒரு பயம் இருக்கும். அதே போல் பணத்தை சேமிப்பதும் உங்களுக்கு எளிதான காரியமல்ல. வீட்டில் நீங்கள் ஏதேனும் மிருகங்களை வளர்த்தால் உங்களுக்கு நல்லது.

கன்னி:

பணத்தின் மகத்துவத்தை நன்றாக புரிந்துகொண்டுள்ள கன்னி ராசி நண்பர்களே, நீங்கள் பண விடயத்தில் சிக்கனமாகவே இருப்பீர்கள். பணத்தை பத்திரப்படுத்தும் எண்ணம் உங்களுக்கு எப்போதுமே உண்டு. வீட்டு மனை வாங்கும் விடயத்தில் நீங்கள் தைரியமாக பணத்தை செலவழிக்கலாம் அதில் உங்களுக்கு வெற்றிக்கான சாத்தியம் அதிகம்.

துலாம்:

எந்த காரியத்தை செய்தாலும் அதில் விரைவில் அதிக லாபம் ஈட்டும் துலாம் ராசி நண்பர்களே, நீங்கள் வியாபாரம் செய்தால் அதிக லாபம் அடைவீர்கள். உங்களுக்கு பணவரவு என்பது எப்போதும் குறையாமல் இருக்கும்.

விருச்சிகம்:

கடினமாக உழைக்கும் எண்ணம் கொண்ட விருச்சிக ராசி நண்பர்களே உங்களுடைய அணைத்து ஆசைகளும் நிறைவேற நீங்கள் மேலும் மேலும் உழைத்துக்கொண்டே இருக்கவேண்டும். எந்த காரியத்திலும் நீங்கள் அவ்வளவு எளிதாக வெற்றி பெற முடியாது அனால் வெற்றி பெற்றுவிட்டால் நீங்கள் தான் ராஜா. ஆகையால் உனகளுக்கு தேவையான பணம் வரும் வரை நீங்கள் மனம் தளராமல் உழைப்பது அவசியம்.

தனுசு:

பணம் இருந்தால் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கும் தனுசு ராசி நண்பர்களே, உங்களுக்கு கொடுக்கல் – வாங்கல், வாங்குதல்-விற்றல் எல்லாமே இழுபறியாக இருக்கும். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை உங்களுக்காகவே செலவழிப்பீர்கள். நீங்கள் பணத்தை எளிதாக சேமிக்க இயலாது. உங்களது வாழ்நாளில் ஒரு பெரும் செலவு செய்யும் வாய்ப்புண்டு. ஏமாற்றப்படவும் வாய்ப்புண்டு.

மகரம்:

சொந்த திறமையால் முன்னுக்கு வரும் ஆற்றல் படைத்த மகர ராசி நண்பர்களே. நீங்கள் எந்த தொழிலை செய்தாலும் நஷ்டம் அடைய மாட்டீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதிலேயே உங்களுடைய பாதி நேரம் செலவழியும். உங்களுடைய தர்மம் உங்களை எப்போதும் காத்து நிற்கும். வீண் செலவை தவிர்த்தால் உங்கள் கையின் எப்போதுமே பணம் தங்கும்.

கும்பம்:

புத்திசாலித்தனமாக எல்லா செலவையும் குறைக்கும் திறன் படைத்த கும்ப ராசி நண்பர்களே. நீங்கள் எப்போதும் பண நடமாட்டம் இருக்கும் நபராகவே திகழ்வீர்கள். என்னதான் கணக்கு போட்டாலும் சில நேரங்களில் செலவு அதிகரிக்கவே செய்யும் ஆனாலும் அதிக அளவில் சொத்து சேர்க்கும் யோகம் உங்களுக்கு உண்டு.

மீனம்:

பணம் தேவை பட்டாள் உடனடியாக கிடைக்கும் யோகம் பெற்ற மீனா ராசி நண்பர்களே உங்களது சொந்த முயற்சியிலேயே நீங்கள் முன்னுக்கு வருவீர்கள். பணம் என்பது உங்களுக்கு எப்போதும் ஒரு சாதாரண விடயம் தான் அனால் சூதாட்டத்தில் ஈடுபட்டால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும் ஆகையால் ஜாக்கிரதையாக இருங்கள்.