2018 ராசி பலன் – உங்கள் ராசிக்கு தொழில் எப்படி இருக்கும்

2018 rasi palan

2018 தமிழ் புத்தாண்டு ராசி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

2018 ஆங்கில வருட பலன்கள் கீழே உள்ளது.

2018 ஆம் ஆண்டில் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் தொழில் எப்படி இருக்கும் என்பதை விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்:
meshamமேஷ ராசிக்காரர்களை பொறுத்த வரை 2018 ஆம் ஆண்டு மிக சிறப்பாகவே இருக்கும். செய்யும் தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு, திறமைக்கு ஏற்ப சம்பளம் அதிகரித்தல் போன்ற பல நல்ல விடயங்கள் நடக்கும். வேறு இடத்திற்கு வேலை மாற நினைப்பவர்களுக்கு இடமாற்றம் எளிதில் கிடைக்கும். வியாபாரிகளை பொறுத்தவரை தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். லாபம் அதிகரிக்கும். அடுத்தவர் விடயத்தில் மூக்கை நுழைக்காமல் உங்கள் பணியில் மட்டுமே கவனம் செலுத்துவது இந்த ஆண்டு உங்களுக்கு நல்லது.

ரிஷபம்:
rishabamரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை 2018 ஆம் ஆண்டு சற்று மந்தமாகவே இருக்கும். நீங்கள் கடினமாக உழைத்தாலும் உங்கள் உழைப்பிற்கு ஏற்ற ஊதிய உயர்வு பெற சற்று தாமதம் ஆகலாம். மேல் அதிகாரிகளால் சில நெருக்கடிகள் வரலாம். அலுவலகத்தில் ஏற்படும் டென்ஷனை வீட்டிற்கு கொண்டுவராமல் இருப்பது நல்லது. வியாபாரிகள் சற்று மென்னெச்சரிக்கையோடு தொழில் செய்ய வேண்டிய காலம் இது. புதிய தொழிலை தொடங்க நினைப்போர் சற்று சிந்தித்து செய்யுங்கள். பெரிய முதலீடை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்:
midhunamதொழிலை பொறுத்தவரை மிதுன ராசிக்காரர்கள் 2018 ஆம் ஆண்டில் சற்று உஷாராக இருப்பது நல்லது. நீங்கள் செய்யும் பணிகளில் அவ்வப்போதும் சில தடைகள் வரலாம். அலுவலகத்தில் அடுத்தவர்களை பற்றி புறம் பேசுவதை முற்றிலும் தவிர்த்து விடுவது நல்லது. வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்க கால தாமதம் ஆகலாம். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. வியாபாரிகள் கடன் தருவதைத் தவிர்ப்பது நல்லது. கூட்டுத்தொழிலில் சில பிரச்சனைகள் வரவும் வாய்ப்புள்ளது. சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசித்து வர நல்ல பலன்களை பெறலாம்.

- Advertisement -

கடகம்:
kadagamகடக ராசிக்காரர்களை பொறுத்த வரை 2018 ஆம் ஆண்டு மிக சிறப்பாகவே இருக்கும். இதுவரை தொழிலில் இருந்து வந்த தடைகள் விலகும். வியாபாரிகளுக்கு பாக்கித்தொகை வசூலாகும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்க வாய்ப்புகள் அதிகம். மென்பொருள் துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்த ஆண்டு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் தேடி வர வாய்ப்புகள் அதிகம். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

சிம்மம்:
simmamதொழிலை பொறுத்தவரை சிம்ம ராசிக்காரர்களுக்கு 2018 ஆம் ஆண்டு சிறப்பாகவே இருக்கும். அலுவலகத்தில் கொடுக்கப்படும் கடினமான பணிகளை கூட நீங்கள் எளிதாக முடித்து காட்டுவீர்கள். பணி இடங்களில் சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அது எளிதில் மறைந்து போகும். தொழில் ரீதியாக வெளிநாடு சென்று சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை பெற சில பிரச்சனைகள் இருந்தாலும் நீங்கள் போராடி பெற்றுவிடுவீர்கள். நரசிம்மரை தரிசித்து வாருங்கள் இந்த ஆண்டு உங்களுக்கு மிக சிறப்பாக இருக்கும்.

கன்னி:
kanniகன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை 2018 ஆம் ஆண்டும் தொழில் ரீதியாக சாதகம் மற்றும் பாதகம் என இரண்டும் கலந்த ஆண்டாகவே இருக்கும். வேலையில் அவ்வப்போது சில பிரச்சனைகள் வந்து செல்லும். தொழில் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறையாலும் கடின உழைப்பாலும் உங்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். ஆனால் நீங்கள் உங்கள் மேலதிகாரிகளை எதிர்க்காமல் இருக்க வேண்டும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுகையில் கணவமாக படியுங்கள். அலுவலகத்தில் உங்களுடைய மறைமுக எதிரிகளின் சூழ்ச்சியில் சிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய உழைப்பின் மூலம் உங்களுக்கு சில சலுகைகளும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. நாகேஸ்வரரை வழிபட்டு வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

துலாம்:
thulamதுலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை 2018 ஆம் ஆண்டு மிக சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். மேலதிகாரிகள் உங்களை போற்றும் காலம் இது. வேலைக்காக இதுவரை முயற்சித்து வந்தவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு என சகலமும் இந்த ஆண்டு உங்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் அதிகம். அலுவலகத்தில் இருந்து வந்த மறைமுக எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவர். தொழில் புரிவோருக்கு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். வராத கடனும் வசூலாகும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளும் காலம் இது.

விருச்சிகம்:
virichigamவிருச்சிக ராசிக்காரர்கள் இந்த ஆண்டு சற்று நிதானமாக நடந்துகொள்வது நல்லது. வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும் காலம் இது. வேலை சுமையின் காரணமாக தேவை இல்லாமல் கோபம் அடைந்து சக பணியாளர்களோடோ உயர் அதிகாரிகளோடோ பிரச்சனை செய்ய வேண்டாம். உயர் பதவி சம்பள உயர்வு போன்ற வற்றை போராடி பெற வேண்டி இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் சுமுகமாக இருப்பது போல தெரிந்தாலும் சற்று கவனம் தேவை. வீட்டருகில் உள்ள ஈஸ்வரன் கோயிலிற்கு சென்று வழிபடுங்கள் நல்லதே நடக்கும்.

தனுசு:
dhanusuதொழிலை பொறுத்தவரை தனுசு ராசி காரர்களுக்கு இந்த ஆண்டு சற்று கடினமாக இருக்கும் என்றாலும் அதை சமாளிக்கும் திறனும் உங்களுக்கு இருக்கும். அலுவலகங்களில் பணி புரிபவர்கள் சற்று கவனமாக பணி புரிவது நல்லது. உயரதிகாரிகளின் ஆதரவு இந்த ஆண்டு உங்களுக்கு இருக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றிற்காக தனியாக எதையும் செய்ய வேண்டாம். உங்கள் வேலை மீது மட்டும் கவனம் செலுத்துங்கள். அடுத்தவர்கள் சொல்வதை கேட்டு எதையும் செய்ய வேண்டாம். சுயமாக யோசித்து முடிவெடுங்கள். வியாபாரிகளை பொறுத்தவரை பெரிய தொகையில் முதலீடு செய்ய வேண்டாம். தொழிலில் பெரிய அளவில் லாபம் இல்லை என்றாலும் நஷ்டம் ஏற்படாது.

மகரம்:
magaramமகர ராசிக்காரர்கள் இந்த ஆண்டு எதை செய்தாலும் ஒன்றிற்கு 100 தடவை யோசித்து செய்ய வேண்டும். சக ஊழியர்களிடமும், உயரதிகாரிகளிடமும் பேசுகையில் என்ன பேசுகிறோம் என்பதை தெளிவாய் அறிந்து நிதானமாக பேச வேண்டும். வேலை சுமை அதிகரிக்கும். பதவி உயர்வு, சம்பள உயர் போன்றவற்றை பெற போராட வேண்டி இருக்கும். இடமாற்றங்களும் சிலருக்கு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வியாபாரிகளை பொறுத்தவரை யாருக்கும் எதையும் கடனாக கொடுக்காமல் இருப்பது நல்லது. தேவை இல்லாமல் யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலிற்கு சென்று வழிபடுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

கும்பம்:
kumbamகும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை 2018 ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் நல்ல சூழல் நிலவும். புதிய பொறுப்புகள் தேடி வரும். மேலதிகாரிகள் உங்கள் வேலையை அங்கீகரிப்பார்கள். பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள். வியாபாரிகளை பொறுத்தவரை இந்த ஆண்டு நல்ல லாபம் கிடைக்கும். புதிய யுக்திகள் மூலம் வியாபாரம் பெருகும்.

மீனம்:
meenamதொழில் ரீதியாக பார்க்கையில் மீன ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு சற்று மந்தமாகவே இருக்கும் என்றாலும் சாதனமும் உண்டு. சில முக்கிய பொறுப்புகள் உங்களை வந்தடையும். இதனால் வேலை பளு அதிகரிக்கும். அதன் மூலம் உங்களுக்கு நற்பெயர் வந்து சேரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த வேலையை பிடித்து செய்வது நல்லது. வியாபாரிகளை பொறுத்தவரை வியாபார நுணுக்கங்களை தெரிந்து தொழில் புரிவது நல்லது. தொழில் லாபகரமாகவே இருக்கும்.

வார பலன், ராசி பலன், மாத பலன் மற்றும் ஜோதிடம் சம்மந்தமான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.