எல்லாரையும் வயிறு குழுங்க சிரிக்க வைக்க எந்த ராசிக்காரர்களால் முடியும்? நீங்களும் இந்த ராசியில் ஒருவரான்னு தெரிஞ்சிக்கனுமா?

laugh-astro

வேடிக்கையாக பேசுபவர்களை பார்க்கும் பொழுது நமக்கு அவர்களிடம் நட்பு கொள்ள இயல்பாகவே ஆசை வந்து விடும். எல்லோரும் இயல்பாக மற்றவர்களை சிரிக்க வைத்து விடமாட்டார்கள். மற்றவர்களை சிரிக்க வைப்பதும், அதன் மூலம் சிந்திக்க வைப்பதும் ஒரு கலை தான். அந்தக் கலையை இயல்பாகவே இந்த ராசிக்காரர்கள் சுலபமாக செய்து விடுவார்கள். பொதுவாகவே அதிகம் சிரிப்பவர்கள், சிரிக்க வைப்பவர்கள் தன்னுடைய வாழ்நாளை தங்களை அறியாமல் கூட்டிக் கொள்கிறார்கள் என்பது தான் உண்மை.

kuperan

அந்த வகையில் எந்த ராசிக்காரர்கள் இயல்பாக நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள்? நம்முடைய ராசி அந்த ராசியில் ஒன்றாக இருக்கிறதா? என்பதை பார்த்துக் கொண்டு விடுவோம் பதிவிற்குள் வாருங்கள். நகைச்சுவை உணர்வு அதிகம் இருப்பவர்களுக்கு நண்பர்களும் அதிகமாக இருப்பார்கள். அவர்களைச் சுற்றிலும் எப்போதும் யாராவது ஒருவர் இருந்து கொண்டே இருப்பார்கள். தனிமையை வெறுக்கும் இவர்கள் நட்பின் மூலமே இன்பம் காண்பவர்கள். ஒருவருடைய ஜாதகத்தில் மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும், நகைச்சுவை உணர்வையும் கொடுப்பது சுப கிரகங்களான புதன், சுக்கிரன், சந்திரன் ஆகிய இந்த மூன்று கிரகங்கள் தான் என்கிறது ஜோதிடம்.

இந்த மூன்று கிரகங்கள் தான், மனிதனுக்கு நகைச்சுவை உணர்வை கொடுக்க வல்லது. நகைச்சுவை உணர்வுக்கு புதன் காரணமாக இருப்பார். புத பகவானை ராசியாதிபதியாக கொண்டவர்கள் இயல்பாகவே நகைச்சுவை உணர்வுக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள். அவ்வகையில் மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் நகைச்சுவையாகப் பேசுவது பேசுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்களை பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள்.

Nakshatra

ஜோதிடத்தைப் பொறுத்தவரை புதன், சுக்கிரன், சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும் ஒருவருடைய ஜாதகத்தில் சுப தொடர்புகளாக இருக்கும் பொழுது அந்த ராசிக்காரர்கள் நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதில் அவர்களுக்கு அலாதி பிரியம் இருக்கும்.

- Advertisement -

அந்த வகையில் மேஷ ராசிக்காரர்கள் தங்களுடைய காரியங்களை சாதுர்யமாக பேசி சுலபமாக முடித்துக் கொள்ளக் கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். யார் என்ன பேசினாலும் அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். தன்னை சுற்றியிருப்பவர்களை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். உங்களிடம் வெகுளித்தனம், கள்ளம் கபடமற்ற உள்ளமும் இருக்கும். மனதில் பட்டதை ஒளிவு மறைவில்லாமல் அப்படியே பேசக்கூடியவர்கள்.

mithunam-rasi

அதுபோல் மிதுன ராசிக்காரர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகமாக இருக்கும். அதிலும் இவர்களது ராசிக்கு ராசி அதிபதி புதன் ஆட்சி பெற்று அமர்ந்து விட்டால் இவர்களுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியும், சந்தோஷமும், சிரிப்பும் அளவில்லாமல் இருக்கும். இவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் குறும்புத்தனம் நிச்சயம் இருக்கும். எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் அதை தங்களின் நகைச்சுவை உணர்வால் ஒன்றுமில்லாமல் செய்து விடுவார்கள் இவர்கள். இவர்களை நண்பர்களாக பெற்றவர்கள் கடைசி வரை இந்த ராசிக்காரர்களை மறக்கமாட்டார்கள்.

magaram-rasi

மகர ராசிக்காரர்கள் எதையும் சாதிக்க, சிரிக்க சிரிக்கப் பேசி எவரையும் மயக்கி விடுவார்கள். அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து இவர்களின் அன்புக்கு அடிமை ஆக்கி விடுவார்கள். பேச்சில் இனிமையும், சாமர்த்தியமும் நிறையவே இருக்கும். மற்ற ராசிக்காரர்கள் இந்த ராசிக்காரர்களுடன் எப்போதும் ஒற்றுமையுடன் இருப்பார்கள். ஆனால் இதே ராசிக்காரர்கள் ஒன்றிணைந்தால் நிலைமை வேறு.

thulam-rasi

மேலும் ரிஷபம், துலாம் போன்ற ராசிக்காரர்களும் ஓரளவு நகைச்சுவை உணர்வுடன் இருப்பார்கள். மற்ற ராசிக்காரர்கள் தங்களுடைய ராசியில் மேற்கூறிய அந்த மூன்று கிரகங்கள் இருக்கும் அமைப்பை பொறுத்து வாழ்வில் அந்த காலகட்டங்களில் மட்டும் மகிழ்ச்சியுடனும், சந்தோஷத்துடனும் இருப்பார்கள். மற்ற நேரங்களில் சாதாரணமான வாழ்க்கையை வாழ்வார்கள்.

இதையும் படிக்கலாமே
‘ராசிபலன்’ சில சமயங்களில் ஏன் பலிப்பதில்லை? என்று நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.