அடேங்கப்பா! ஒரு இட்லி மாவை வெச்சு இத்தனை விஷயங்கள் செய்ய முடியுமா என்ன? வீட்டிற்கு தேவையான பயனுள்ள 5 குறிப்புகள்!

idly-mavu
- Advertisement -

உங்களுடைய வீட்டில் எந்த பூச்செடி இருந்தாலும் அந்த பூச்செடியில் கொத்துக்கொத்தாக பூக்கள் பூக்க வேண்டுமா, ஒரு குழிகரண்டி இட்லி மாவில், ஒரு மக் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து, அதன் பின்பு அதை செடிகளுக்கு வாரத்திற்கு ஒரு நாள் ஊற்றி வாருங்கள். அப்படி இல்லை என்றால் உங்களுடைய இட்லி மாவை போட்டு வைத்திருக்கும் டப்பாவை கழுவும் தண்ணீரை மட்டும் இந்தச் செடிகளுக்கு ஊற்றினால் கூட போதும். எண்ணி ஒரு மாதத்தில் உங்களுடைய செடியில் இருக்கும் வித்தியாசத்தை நீங்களே பார்க்கலாம். மூன்றே மாதத்தில் கொத்துக்கொத்தாக பூக்கள் பூப்பது நிச்சயம் ட்ரை பண்ணி பாருங்க.

rose1

அடுத்தபடியாக உங்கள் வீட்டில் குளியல் அறையில் இருக்கும் உப்புத் தண்ணீர் கரை படிந்த பக்கெட், ஜக் இவைகளை ஈசியாக சுத்தம் செய்ய புளித்த மாவு பயனுள்ளதாக இருக்கும். ஒரு சிறிய கிண்ணத்தில் புளித்த மாவுடன் கொஞ்சம் ஆப்ப சோடா மாவை கலந்து கொள்ளுங்கள். ஒரு ஸ்டீல் நாரில் இந்த மாவை தொட்டு கரை பிடித்திருக்கும் பக்கெட், ஜெக்கை கொஞ்சம் அழுத்தம் கொடுத்து நன்றாக தேய்த்து அதன் பின்பு கழுவினால் உப்பு கரை சீக்கிரமே நீங்க விடும். வாரத்தில் ஒருநாள் இப்படி செய்தாலும் உங்கள் குளியலறையில் இருக்கும் பக்கெட் புதுசு போல இருக்கும்.

- Advertisement -

இதேபோல் உங்கள் வீட்டில் இருக்கும் எவர்சில்வர் டேப் சுத்தம் செய்யவும் இந்த புளித்த மாவை பயன்படுத்திக்கொள்ளலாம். சமையலறை மேடை போன்ற இடங்கள் உப்பு தண்ணீர் பட்டு கொஞ்சம் வெள்ளையாக பூத்திருக்கும். இதை ஒரே ஒரு முறையில் சுத்தம் செய்யும் போது முழுமையாக உப்பு கரையை நீக்கிவிட முடியாது. வாரத்திற்கு ஒரு முறை புளித்த மாவை வைத்து சிங்க், பாத்திரம் கவிழ்க்கும் மேடை, போன்ற இடங்களை சுத்தம் செய்யும் போது, வெள்ளையாக கரை படிந்து இருக்கும் பட்சத்தில் படிப்படியாக அந்தக் கரை நீங்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

tap-cleaning

அடுத்தபடியாக சமைக்கும்போது பெண்கள் கட்டாயம் கையை சுட்டுக் கொள்வது வழக்கம் தான். ஆண்கள் சமைத்தாலும் சுட்டுக் கொள்வது இயல்புதான். யாருக்கு நெருப்பின் மூலம் காயம் பட்டாலும் காயம்பட்ட இடத்தில் உடனே இந்த மாவை எடுத்து தடவி விட்டு விடுங்கள். கொப்பளம் வராது. தீக்காயம் சீக்கிரம் சரியாகிவிடும்.

- Advertisement -

புதியதாக இட்லி மாவு அரைக்கும் போது, புளிக்காத இட்லி மாவை கொஞ்சமாக எடுத்து தனியாக பாத்திரத்தில் போட்டு, அதனுடன் கோதுமை மாவு அல்லது அரிசி மாவு இப்படி உங்களுடைய வீட்டில் எந்த மாவு இருக்கின்றதோ அந்த மாவை கலந்து கொள்ள வேண்டும். பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, தேவையான அளவு உப்பு, 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா இந்த பொருட்களை எல்லாம் போட்டு சேர்ந்து, கலந்து சிறிய சிறிய போண்டா போலவும் ஸ்நாக்ஸ் தயார் செய்து கொள்ளலாம்.

பஜ்ஜி மாவை கரைத்து விட்டு அதில் ஒரு குழிகரண்டி இட்லி மாவு அல்லது தோசை மாவு கலந்து அதன் பின்பு, அந்த மாவில் பஜ்ஜி சுட்டு பாருங்கள். பஜ்ஜி மொறுமொறுவென இருக்கும். அதே சமயம் எண்ணெய் குடிக்காமலும் வரும். மேலே சொன்ன குறிப்புகள் எல்லாம் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் உங்களுடைய வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -