உங்கள் வீட்டு ரோஜா செடியில் இலைகள் சுருண்டு போய் இருக்கிறதா? அப்படின்னா 10 பைசா செலவில்லாமல் இந்த 2 பொருளை வைத்து 3 நாளில் பெரிது பெரிதாக மொட்டுக்கள் விட என்ன செய்யலாம்?

- Advertisement -

ரோஜா செடியை ஆசை ஆசையாக வாங்கி வைத்திருப்போம் ஆனால் அதனை பராமரிப்பது என்பது மிகப்பெரிய சவாலாகவே இருந்து விடுகிறது. திடீர் திடீரென அதனை தாக்கும் நோய், ரோஜா செடியின் வளர்ச்சியை முற்றிலுமாக பாதிப்படைய செய்து விடும். ஒரு மொட்டு கூட அதில் விடாமல் செடிகள் சோர்ந்து விடக் கூடிய அபாயம் உண்டாகிவிடும். ரோஜா செடியின் இலைகள் சுருண்டு விடும் படி இருந்தால் அதில் மொட்டுக்களும் சின்னதாக பூக்க ஆரம்பிக்கும், அதை வைத்தே இதனை கண்டுபிடித்து விடலாம். இதற்கு பத்து பைசா செலவில்லாமல் வீட்டில் இருக்கும் இந்த இரண்டு பொருளை வைத்து எப்படி மூன்றே நாளில் சரி செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

rose-plant

ரோஜா செடியில் இலைகள் சுருண்டு போவது என்பது இலை சுருட்டு நோய் உடைய அறிகுறியாகும். இலைகள் சுருள ஆரம்பிக்கும் பொழுது அதில் வரும் மொட்டுகளும் சிறியதாக போய்விடும். மொட்டுக்கள் பூக்கும் பொழுது அதில் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் தாக்கப்படுகிறது. இந்த பூச்சிகள் மொட்டுகளை முழுமையாக வளர்ச்சி அடைய செய்யாமல் பூக்களை பாதிக்க செய்யும்.

- Advertisement -

எனவே ரோஜா செடிக்கு தேவையான ஊட்டசத்து அளிக்கும் வகையில் இந்த கரைசலை 15 நாட்களுக்கு ஒருமுறை கொடுத்து வரும் பொழுது இலை சுருட்டு நோய் என்பது ஏற்படாமல் தடுக்கலாம். இதற்கு நமக்கு தேவைப்படும் பொருட்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று உங்கள் வீட்டில் இருக்கும் பித்தளை பாத்திரம். இன்னொன்று அரை கப் அளவிற்கு நான்கு புளித்த தயிர். பித்தளையில் இருக்கும் தாமிர சத்து தயிருடன் சேரும் பொழுது ஊட்டச்சத்து மிக்க கரைசல் தயாராகி விடுகிறது. இந்த கரைசலை ரோஜா செடிகளுக்கு கொடுக்கும் பொழுது இலை சுருட்டு நோய் என்பது வரவே செய்யாது. அதை எப்படி செய்வது? என்பதை இனி பார்ப்போம்.

curd

அரை பக்கெட் அளவிற்கு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு நாட்கள் வரை வெளியில் வைத்து நன்கு புளித்த தயிரை அரை கப் அளவிற்கு சேர்க்க வேண்டும். இந்த தயிர் கரைசல் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கி கொடுக்கும். அதனுடன் தாமிர சத்து கிடைக்க, நம் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு பித்தனை பாத்திரத்தை அந்த தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பித்தளை தட்டு, சொம்பு என்று உங்களிடம் எது இருந்தாலும் அதில் ஒன்றை எடுத்து தண்ணீரில் முக்கி விடுங்கள்.

- Advertisement -

குறைந்தது 24 மணி நேரம் இந்த கரைசலில் ஊற வேண்டும். புளித்த தயிருடன் தாமிரம் சேரும் பொழுது கரைசல் இயற்கையான ஊட்டச்சத்து மருந்தாக மாறுகிறது. இம்மருந்தை நம் வீட்டு ரோஜா செடிகளுக்கு கொடுக்கும் பொழுது பூச்சிகள் தாக்காமல் இலைகள் செழிப்பாக வளர ஆரம்பிக்கும். இலை சுருட்டல் நோய் வருவதற்கு முன்பாகவே இதனை செய்து வருவது நாம் செடிகளுக்கு நல்லது.

multi-color-roses

நோய் தாக்கிய பின்பு இதனை செய்தாலும் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இக்கரைசலை தெளிக்க வேண்டும். அப்பொழுது தான் இலைகளில் இருக்கும் நோய் தாக்குதல் நீங்கப் பெற்று இலைகள் மீண்டும் புத்துணர்வு பெறும். இலைகள், தழைகள், வேர் என்று ஒரு இடம் விடாமல் ரோஜா செடி முழுவதும் இந்த கரைசலை நன்கு தெளிக்க வேண்டும். இப்படி முறையாக பராமரித்து வந்தால் ரோஜா செடிகள் அதிகமான மொட்டுக்களையும், பெரிய பெரிய பூக்களையும் தினந்தோறும் நமக்கு கொடுத்து மகிழ்விக்க செய்யும்.

- Advertisement -