மண்பானையும், வெல்லமும் இருந்தால் போதுமே! எந்தச் செடியும் அடிக்கிற வெயிலையும் தாண்டி கொத்து கொத்தா பூக்குமே!

man-panai-rose
- Advertisement -

கத்திரி வெயில் ஆரம்பமாகியதும் வீட்டில் இருக்கும் அத்தனை செடியும் வாடி வதங்கிப் போய் விட்டிருக்கும். இலைகள் எல்லாம் கருகி பூக்கள் எல்லாம் உதிரவும் துவங்கும். இப்படி வீட்டில் நீங்கள் வளர்க்கும் காய்கறி செடிகள், பூச்செடிகள் எதுவாகினும் வெப்பத்தையும் தாண்டி செழிப்புடன் வளர மண்பாண்டமும், வெல்லமும் இருந்தால் போதுமே! அதை வைத்து என்ன செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

rose2

வெயில் காலங்களில் அதிக வெப்பத்தின் காரணமாக நீங்கள் என்னதான் உரம் கொடுத்தாலும் அதில் நுண்ணுயிரிகளின் பெருக்கம் குறைந்து விடும். வேகமாக மண்ணின் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு வறண்டு போகும். இதனால் செடிகளுக்கு தேவையான உயிர் உரம் கிடைப்பதில்லை குறைபாடுகள் ஏற்படும். எனவே செடிகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் வறண்டு போக துவங்கி விடுகிறது.

- Advertisement -

நுண்ணுயிரிகளின் பெருக்கத்தை கொடுக்கும் imo (Indigenous Microorganisms) எனப்படும் உயிர் உரக் கரைசலை வீட்டிலேயே எப்படி மிகவும் எளிதாக தயார் செய்வது? அதற்கு என்ன தேவை? என்பதையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். இந்த கரைசலை மாதமொருமுறை உங்களுடைய பூச்செடி மற்றும் காய்கறி செடிகளுக்கு கொடுத்தால் போதும் கொத்து கொத்தாக பூக்களும், காய்களும் காய்க்கத் துவங்கும்.

basmati-rice

உங்களிடம் இருக்கும் ரேஷன் அரிசி அல்லது எந்த வகையான அரிசியாக இருந்தாலும் சரி. பச்சரிசி, புழுங்கல் அரிசி என்று எந்த வகையான அரிசியிலும் சாதம் வடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் தினமும் சாதம் வடிக்க பயன்படுத்தும் அரிசியை கூட பயன்படுத்தலாம். வடித்த சாதத்தை தண்ணீரில்லாமல் உதிரி உதிரியாக எடுத்து ஒரு மண் பானையில் சிறிதளவு போட்டுக் கொள்ளுங்கள். இதற்கு மட்பாண்டம் சிறிய அளவில் இருந்தாலே போதுமானது. மண்பாண்டம் இல்லாதவர்கள் பிளாஸ்டிக் டப்பாவை பயன்படுத்தலாம் ஆனால் மண்பானையில் இருப்பது இன்னும் கூடுதல் பலனை கொடுக்கும்.

- Advertisement -

மண்பானையை சாதம் போட்டு மூடி வைத்து பாலிதீன் பை கொண்டு காற்று புகாமல் நன்கு கட்டப்பட்டு மண்ணில் புதைத்து வைத்து விடுங்கள். மண்ணில் புதைக்க இடம் இல்லாதவர்கள் சிறு மண் தொட்டியில் இருக்கும் மண்ணிற்குள் புதைத்து வைத்தால் கூட போதும். ஏழு நாட்கள் கழித்து பார்த்தால் சாதத்தில் பூஞ்சைகள் பிடிக்க ஆரம்பித்திருக்கும். இந்த பூஞ்சைகள் நுண்ணுயிரிகளை பெருக்குவதற்கு உதவி செய்யும். இப்போது வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை 2 டீஸ்பூன் அளவிற்கு போட்டுக் கொள்ளுங்கள். எந்த வெல்லமாக இருந்தாலும் பரவாயில்லை.

man-panai-pot

பின்னர் மீண்டும் மூடி போட்டு மூடி வைத்து அதே போல மண்ணுக்குள் புதைத்து வைத்து விடுங்கள். இந்த முறை மூன்று நாட்கள் கழித்து திறந்து பார்த்தால் நுண்ணுயிரிகளின் பெருக்கம் பன்மடங்கு பெருகி இருக்கும். பானை முழுவதும் இருந்த சாதம் பாதியாக நீர்த்துப் போய் இருக்கும். இதில் இருக்கும் நுண்ணுயிரிகளுக்கு செடிகளுக்கு செழிப்பை கொடுக்க கூடிய ஆற்றல் உண்டு. எத்தகைய வெயிலின் தாக்கத்தையும் தாங்கிக் கொண்டு செடிகள் செழிப்புடன் பசுமையாக வளரும்.

imo-pot

நிறைய பூக்களையும், கொத்துக் கொத்தாக காய்கறிகளையும் கொடுக்கும். இதை imo கரைசல் என்பார்கள். இக்கரைசலை 5 ஸ்பூன் அளவிற்கு 5 லிட்டர் தண்ணீரில் கலந்து விட்டால் போதும். செடிகளின் வேர் முதல் இலைகள், கிளைகள் வரை அத்தனை இடங்களிலும் தெளித்து பாருங்கள். மாதம் ஒருமுறை தெளித்தால் போதும்! மாதம் முழுவதும் செடிகள் வாடி கருகிப் போகாமல் பூத்துக் குலுங்கும்.

- Advertisement -