நாளை இந்திர ஏகாதசி. இதை மட்டும் செய்தால் அதிகப்படியான பலன்களை பெறலாம்.

உலகில் நாம் பிறந்து, தற்போது வரை வாழும் வாழ்க்கைக்கு காரணமே நம்மைப் பெற்றெடுத்த தாய் தந்தை மற்றும் அவர்களை பெற்றெடுத்த பெற்றோர்கள் எனும் நமது முன்னோர்கள் தான். நாம் வாழும் காலத்தில் நம்முடைய நன்மையை மட்டுமே மறைந்த நமது முன்னோர்கள் வேண்டுகின்றனர். மறைந்த நம் முன்னோர்களை வழிபடும் மரபு நம் நாட்டில் தொன்று தொட்டே இருந்து வருகின்கிறது.பித்ருக்கள் எனப்படும் மறைந்த முன்னோர்களின் ஆசிகள் மட்டும் நமக்கு கிடைக்குமானால், நாமும் நமக்கு பிறகு வரப்போகின்ற சந்ததிகளின் வாழ்க்கையும் மிகச்சிறப்பாக இருக்கும். அத்தகைய மறைந்த முன்னோர்களின் ஆசிகளை பெறுவதற்கும், பெருமாளை வழிபடுவதற்கும் சிறந்த தினமாக ஐப்பசி மாதம் தேய்பிறை ஏகாதசி வருகிறது. இந்த ஐப்பசி மாத தேய்பிறை ஏகாதசி குறித்தும், இந்த தினத்தில் விரதம் அனுஷ்டிப்பதால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

pitru worship

ஐப்பசி மாதமென்பது சூரியன் புதன் பகவானுக்குரிய கன்னி ராசியிலிருந்து, சுக்கிர பகவானுக்குரிய துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் ஒரு காலமாகும். மனிதர்களுக்கு அனைத்து விதமான சுக போகங்களை அளிக்கின்ற நவகிரக நாயகனாக சுக்கிர பகவான் இருக்கின்றார். எனவே தான் இந்த ஐப்பசி மாதத்தில் மட்டும் சுப காரியங்கள் அதிகளவில் விரும்பி செய்யப்படுகின்றன. புராணங்களில் தேவலோக அதிபதியாக இந்திரன் கூறப்படுகிறார். இந்திர தேவனும் அனைத்து சுகபோகங்களுக்கு அதிபதியாக இருக்கிறார். எனவே இந்த ஐப்பசி மாத தேய்பிறை ஏகாதசி தினத்தில் விரதம் மேற்கொண்டு திருமாலின் அம்சம் நிறைந்த இந்திர தேவரின் அருட்கடாட்சம் கிடைக்கப்பெற்று, வாழ்வில் அனைத்து விதமான இன்பங்களையும் பெறுவார்கள் என்பது அனுபவம் வாய்ந்தவர்களின் வாக்காக உள்ளது.

இந்திர ஏகாதசி விரதத்திற்கு மற்றொரு வரலாறும் உண்டு. முற்காலத்தில் “மகிஷ்மதி” என்கிற நகரத்தை மையமாக கொண்டு “இந்திரசேனன்” என்ற பெயர் கொண்ட மன்னன் ஆண்டு வந்ததாகவும், அப்போது அந்த மன்னனின் அரண்மனைக்கு வருகை தந்த தேவலோக ரிஷியான நாரதமுனிவர் இறந்து போன இந்திரசேனனின் தந்தையைத் ஆத்ம ரூபமாக எமலோகத்தில் தான் சந்தித்ததாகவும், அவர் நாரத முனிவரிடம் தனது மகனான இந்திரசேனனிடம் சொல்லி ஐப்பசி மாதத்தில் வருகின்ற தேய்பிறை ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளுமாறும், அப்படி இந்திரசேனன் அந்த ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளும் பட்சத்தில் தான் எமலோகத்தில் படுகின்ற நரக வேதனையிலிருந்து விடுதலை பெற்று, சொர்க்கத்திற்கு செல்லமுடியும் என கூறியதாக நாரதமுனிவர் இந்திரசேன மன்னனிடம் கூறினார்.

narathar

இதைக் கேட்டு மிகவும் வருந்திய இந்திரசேனன் மறைந்து நரகத்தில் அவதிப்படும் தனது தந்தைக்கு நற்கதி கிடைக்க வேண்டி தான் அந்த ஐப்பசி மாத தேய்பிறை ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்க விரும்புவதாகவும், அந்த விரத வழிபாட்டிற்குரிய வழிமுறைகள் என்ன என்பதை நாரத முனிவரிடம் கேட்டறிந்து, அப்படியே அந்த ஐப்பசி தேய்பிறை ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தார் இந்திரசேனன். இதனால் இந்திரசேரனின் இறந்த தந்தைக்கு எமலோக நரகத்திலிருந்து விடுதலை கிடைத்து, சொர்க்கம் செல்ல வழி ஏற்பட்டது. இந்திர சேனன் மன்னன் இந்த விரதத்தை மேற்கொண்டதால் தான் இந்த ஐப்பசி தேய்பிறை ஏகாதசி தினத்திற்கு “இந்திர ஏகாதசி” என்கிற உண்டானதாக பெரியோர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஐப்பசி வளர்பிறை ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளை வழிபட்ட பின்பு, வீட்டிற்கு வந்து பெருமாள் படத்திற்கு வாசம் மிகுந்த பூக்கள் சாற்றி, தீபமேற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டிலோ அல்லது அருகில் எங்கேனும் நெல்லி மரம் இருக்கும் பட்சத்தில் அம்மரத்திற்கு தீப ஆராதனை காட்டி, லட்சுமி தேவியின் மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும். உடல் நிலை நன்கு உள்ளவர்கள் இத்தினத்தில் காலை முதல் மாலை வரை எதுவும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் அல்லது துளசி இலைகள் போட்டுவைத்த தீர்த்த நீரை அருந்தி விரதம் இருக்கலாம்.

Perumal

அன்றைய நாள் முழுவதும் விஷ்ணு புராணம், பெருமாள் ஸ்தோத்திரம் போன்றவற்றை பாராயணம் செய்வது நல்லது. மாலையிலும் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்பு வீட்டிற்கு திரும்பி பால், பழம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். மேற்கூறிய முறைப்படி இந்திர ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் மறைந்த அவர்களின் பல தலைமுறை முன்னோர்கள் நற்கதி பெற்று, அவர்களின் ஆசிகள் கிடைக்கப்பெற்று நாம் ஈடுபடுகின்ற அனைத்து காரியங்களிலும் மகத்தான வெற்றிகளை பெற உதவும். நாராயணனாகிய பெருமாள் மற்றும் லட்சுமி தேவியின் அருள் கிடைத்து குடும்பத்தில் சுபிட்சம் பெருகும்.

gajalakshmi

ஜாதகத்தில் பித்ரு சாபம் பெற்றவர்களாக கூறப்படுகின்ற நபர்கள் இந்த விரதத்தை மேற்கொள்வதால் பித்ரு சாபங்கள் நீங்கி குடும்ப வாழ்க்கையில் சுபிட்சங்களும், நிம்மதியும் உண்டாகும். இந்திர ஏகாதசி தினத்தில் விரதம் மேற்கொண்டு பூஜைகள் மட்டும் வழிபாடு செய்த பிறகு உங்கள் சக்திக்கேற்ப அன்னதானம் செய்வது மிகுதியான புண்ணிய பலன்களை கொடுக்கும்.