உலகக்கோப்பை இந்தியா பாகிஸ்தான் மேட்ச். மொத்த பார்வையாளர் இருக்கை 25,000. ஆனால் ஐசி.சி -க்கு வந்திருக்கும் வேண்டுகோள் விண்ணப்பம் எத்தனை லட்சம் தெரியுமா ?

Ground
- Advertisement -

2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் இறுதியில் துவங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட தயாராகி விட்டது என்றே கூறலாம். இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கோப்பையை கைப்பற்ற பலத்த போட்டி நிலவும் என்று பலரும் கூறிவருகின்றனர்.

worldcup

ஆனால், தற்போது இந்தியாவில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணிக்கு ஜூன் 16 ஆம் தேதி ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா பங்கேற்க வேண்டாம் என்று பல முன்னாள் வீரர்கள் கூறிவரும் நிலையில், ஐ.சி.சி மற்றும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலையும் வெளியிடவில்லை. அதுகுறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் குறித்து ஐ.சி.சி முக்கிய நிர்வாகியான டேவ் ரிச்சர்ட்ஸன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியதாவது : இந்த உலகக்கோப்பை தொடரில் இறுதி போட்டிக்கு கூட இவ்வளவு விண்ணப்பங்கள் வந்திருக்குமா? என்று தெரியாது அந்த அளவிற்கு இந்த போட்டியினை காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Ind-Pak

25000 பேர் அமர்ந்து கண்டுகளிக்க கூடிய அளவில் இருக்கும் அந்த மைதானத்திற்கு போட்டியை நேரில் காண 4 லட்சம் விண்ணப்பங்கள் இதுவரை வந்துள்ளன. திட்டமிட்டபடி ஒருவேளை இந்த போட்டி நடைபெற்றால் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கிய போட்டியாக இது இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் தடை செய்யப்பட இருக்கும் பாகிஸ்தான் அணி. துபாயில் அடுத்தவாரம் கூடுகிறது அவசர ஆலோசனை கூட்டம் – டேவ் ரிச்சர்ட்ஸன்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -