பாகிஸ்தான் முகாம் மீது 1000 கிலோ வெடிகுண்டை வீசிய விமானப்படை. அதிகாலை நடந்த அதிரடி – அதிகாரபூர்வ அறிவிப்பு

Miraj-flight
- Advertisement -

கடந்த 14ஆம் தேதி இந்திய துணை ராணுவத்தினர் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது வெடிகுண்டு தாக்குதலை ஏற்படுத்தி அதிர்ச்சியில் உள்ளாக்கியது பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதப்படை. இந்த தாக்குதல் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள புல்வாமா என்னும் மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 40 வீரர்கள் வீரமரணமடைந்தனர். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு வீரர்களும் பலியாகினர்.

pulwama

இந்த தாக்குதல் குறித்து நாடு முழுவதும் மக்கள் தங்களது கோவத்தினை பாகிஸ்தான் நாட்டின் மீது காட்டிய வண்ணம் இருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்திய நாட்டின் விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவி அங்கு இருந்த பாகிஸ்தான் நாட்டினை சேர்ந்த முகாம்கள் மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வீசியது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதில் குறிப்பிடப்பட்டுள்ளவை : இந்திய விமானப்படையை சேர்ந்த “மிராஜ்” எனும் போருக்கு பயன்படுத்தக்கூடிய 12 போர்ரக விமானங்களில் சுமார் 1000 கிலோ வெடிகுண்டை எடுத்துசென்று பாகிஸ்தான் முகாம்களின் மீது சரமாரியாக குண்டு மழை பொழிந்துள்ளது. இதனை பாகிஸ்தான் ராணுவம் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லை கடந்து பறந்ததுக்கான பதிவுகளும் அவர்களிடம் உள்ளது. இந்த சேதம் குறித்த முழுத்தகவல் இன்னும் கிடைக்கவில்லை. இருப்பினும், இந்திய விமானப்படையும், இந்திய பாதுகாப்புத்துறை ஆகியவை இன்னும் தாக்குதல் நடத்தியதை பற்றி எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியிடவில்லை. பாகிஸ்தான் ராணுவம் மட்டும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளது.

- Advertisement -