இந்த அடை செய்ய வெரும் 10 நிமிடம் போதும். அரிசி ஊற வைத்து மாவு ஆட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை.

adai1

அடை செய்ய வேண்டும் என்றாலே, அரிசி பருப்பு வகைகளை ஊறவைத்து, அரைத்து சிறிது நேரம் புளிக்க விட்டு, அதன் பின்புதான் செய்ய வேண்டும். இன்று காலை உணவுக்கு பிரிட்ஜில் இட்லி தோசை மாவு இல்லை. உடனடியாக என்ன டிஃபன் செய்யலாம் என்று யோசிப்பவர்களுக்கு, சுலபமான முறையில் ஒரு அரிசி மாவு அடை ரெசிபியை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே, இந்த அடையை சுலபமாக செய்து விடலாம். சட்டென பத்து நிமிஷத்தில் ரெடி பண்ணக்கூடிய ரெசிபியை பார்க்கலாம் வாங்க.

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு 1 கப் அளவு வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி, 1/4 ஸ்பூன் அளவு உப்பு, கால் ஸ்பூன் அளவு மஞ்சள் தூள், சேர்த்து நன்றாக கலந்து கொண்டு 50 கிராம் அளவு சேமியாவை அந்த தண்ணீரில் நனைத்து, ஊற வைத்து விட வேண்டும். இந்த சேமியா 5 நிமிடங்கள் ஊறிய பின்பு, தண்ணீரை வடித்து வெறும் சேமியாவை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

மற்றொரு அகலமான பாத்திரத்தில் வறுத்த அரிசி மாவு – 1 கப் (250 கிராம்) அளவில் போட்டுக் கொள்ளவேண்டும். அடுத்த படியாக இஞ்சி – சிறிய துண்டு பொடியாக துருவியது, பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது, துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன், வேர்க்கடலை தூள் – 2 டேபிள்ஸ்பூன், வெங்காயம் பொடியாக நறுக்கியது – 1/4 கப், கேரட் – 1 பொடியாக துருவியது, மிளகாய் தூள் அல்லது சில்லி ஃப்ளேக்ஸ் – 1 ஸ்பூன், மிளகு தூள் – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழை, இறுதியாக தேவையான அளவு உப்பு. இந்தப் பொருட்கள் அனைத்தையும் மொத்தமாக போட்டு, முதலில் நன்றாக கலந்துவிட வேண்டும்.

adai3

தேவைப்பட்டால் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், பொடியாக நறுக்கிய குடைமிளகாய் இப்படி தேவையான காய்கறிகளை இந்த அடை மாவோடு நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான்.

- Advertisement -

இந்த மாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல பிசைய வேண்டும். சப்பாத்தி மாவு போல கட்டியாக பிசைந்து விட வேண்டாம். கையில் எடுத்து தட்டை தட்டும் அடை மாவு பதத்திற்கு, கேழ்வரகு அடை மாவை பிசைவது போல் பிசைந்து கொண்டால் போதும். இறுதியாக ஊற வைத்து தண்ணீர் வடித்து வைத்திருக்கும் சேமியாவை இந்த மாவோடு சேர்த்து, சேமியா குழையாமல் பிசைந்து கொள்ள வேண்டும். வறுத்த அரிசி மாவில் தண்ணீர் ஊற்றினால் நிறையவே உறிஞ்சும். பார்த்து பக்குவமாக பிசைந்து கொள்ளுங்கள்.

adai

இப்போது இந்த மாவை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்பு ஒரு வாழை இலையின் மீது அல்லது பிளாஸ்டிக் கவரின் மீதோ எண்ணெயை தடவி, ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து வைத்து உங்கள் விரல்களால் கொஞ்சம் மெல்லிசாக தட்டி, அதை எடுத்து அப்படியே தோசைக்கல்லில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால் போதும்.

adai

இறுதியாக நாம் இந்த அடை மாவில் சேர்த்து இருக்கும் சேமியா மொறுமொறுவென சிவந்து, சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். உங்களுடைய வீட்டிலும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். இதற்கு சைட் டிஷ் ஆக தேங்காய் சட்னி, அவியலை உங்கள் விருப்பம் போல பரிமாறிக் கொள்ளலாம். இது உங்களுக்கு நிறைவான ஆரோக்கியமான உணவாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே
சப்பாத்தி செய்ய இனி மாவு பிசைந்து, கஷ்டப்பட்டு தேய்க்க வேண்டும் என்ற எந்த கஷ்டமும் கிடையாது. 10 நிமிஷத்துல கஷ்டப்படாம இந்த சப்பாத்தியை, இனிமே செஞ்சுக்கலாமே.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.