1 கரண்டி கடலை மாவு இருந்தால் போதும்! 5 நிமிடத்தில் இன்ஸ்டன்ட் சட்னி தயார் செய்துவிடலாம்!

kadalai-maavu-chutney1
- Advertisement -

கடலை மாவு கொண்டு செய்யப்படும் சட்னி வகை செய்வதற்கு மிகவும் சுலபமானது ஆகும். ஐந்து நிமிடத்தில் சட்டென செய்து விடலாம். அவசரத்திற்கு இந்த சட்னி பெரும்பாலும் உதவி செய்யும். இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி இவற்றிற்கு தொட்டுக் கொள்ள இனி என்ன செய்யலாம்? என்று யோசித்து நேரத்தை வீணாக்க தேவையில்லை. ஒரு கரண்டி கடலை மாவு இருந்தா போதும் இன்ஸ்டன்ட் ஆக அட்டகாசமான சுவையில் சூப்பரான சட்னி செய்யலாம்! இதனை பாம்பே சட்னி என்றும் கூறுவது உண்டு. அது எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

kadalai-maavu

கடலைமாவில் அத்தியாவசியமான வைட்டமின்களும், டைட்டரி நார்சத்து, கனிம சத்துக்கள் ஆகியவையும் அதிகம் உள்ளன. இதனால் எளிதில் ஜீரணமாகிவிடும். கடலைமாவு உணவில் அடிக்கடி சேர்த்தால் நல்லதா? கெட்டதா? என்கிற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும். இந்த சந்தேகத்திற்கு காரணம் கடலைமாவை அதிக அளவிற்கு எண்ணெய் கொண்டு செய்யப்படும் பதார்த்தங்களுக்கு பயன்படுத்துவது தான், மற்றபடி கடலைமாவு கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளை அதிகரிக்க செய்யும். இதிலிருக்கும் நார்சத்து, புரோட்டீன் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பி இருக்குமாறு செய்வதால் உடல் எடையை குறைக்கவும் உதவும். உயர் ரத்த அழுத்தம் குறைக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு எனவே தாராளமாக அடிக்கடி செய்து சாப்பிடலாம்.

- Advertisement -

‘கடலை மாவு சட்னி’ செய்ய தேவையான பொருட்கள்:
கடலை மாவு – இரண்டு டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
பச்சை மிளகாய் – இரண்டு

kadalai-maavu1

நசுக்கிய பூண்டு ஒரு பல் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கடுகு – கால் டீஸ்பூன்
சோம்பு – கால் டீஸ்பூன்

- Advertisement -

கடலை பருப்பு – ஒரு டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிட்டிகை அளவிற்கு
சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவிற்கு

kadalai-maavu

‘கடலை மாவு சட்னி’ செய்முறை விளக்கம்:
இரண்டு டீஸ்பூன் கடலை மாவை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி நீர்க்க கரைத்துக் கொள்ளுங்கள். அதை அப்படியே வைத்து விட்டு தேவையான காய்கறி வகைகளை வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை அதில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சோம்பு ஆகியவற்றை போட்டு தாளிதம் செய்ய வேண்டும். நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு பற்கள் சேர்த்து வதக்கவும். பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

kadalai-maavu-chutney

பின்னர் தேவையான அளவிற்கு உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது தக்காளி பழங்களை போட்டு சுருள வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கி வந்ததும் கரைத்து வைத்துள்ள கடலை மாவு கலவையை ஊற்றி தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு டேபிள்ஸ்பூன் கடலை மாவு சேர்த்தால் விரைவாக கெட்டியாகி விடும் எனவே அரை லிட்டர் தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும். கடலை மாவின் பச்சை வாசம் போக நன்கு கிண்டி விடுங்கள். அப்படியே விட்டுவிட்டால் அடி பிடித்துவிடும். எனவே அருகிலேயே இருந்து கிண்டி விடுங்கள். ஐந்து நிமிடத்தில் சட்னி கெட்டியாக சூப்பரான டேஸ்ட்டில் சுட சுட தயாராகிவிடும். அதில் நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கி பரிமாறினால் அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -