வெறும் ரவையை வைத்து 5 நிமிடத்தில் சட்டுனு இந்த தோசையை எப்படி சுடுவது? உங்களுக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா? ஃப்ரிட்ஜில் தோசை மாவு இல்லை என்ற கவலை இனி வேண்டாம்.

instant-rava-dosai
- Advertisement -

ரவையை வைத்து உடனடியாக ஒரு தோசை ரெசிபியை எப்படி செய்வது என்பதைப் பற்றியும், இந்த தோசைக்கு, சைட் டிஷ் ஆக ஒரு க்ரீன் சட்னி எப்படி செய்வது என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். டக்குனு காலையில ஒரு பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி உங்களுக்காக. ரவை தோசை செய்வதற்கு தேவையான பொருட்கள். ரவை ஒரு – 1 கப், அரிசிமாவு – 2 டேபிள்ஸ்பூன், கோதுமை மாவு – 2 டேபிள்ஸ்பூன், சுடுதண்ணீர் – 2 டேபிள்ஸ்பூன், தயிர் ஒரு – 1 கப், சர்க்கரை – 1 ஸ்பூன், உப்பு – 1/2 ஸ்பூன். முதலில் ரவையை மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும்.

ravai

ஒரு அகலமான பௌலில் அரைத்த ரவை, அரிசி மாவு, கோதுமை மாவு, இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, 2 டேபிள்ஸ்பூன் அளவு தண்ணீரை விட்டு, கொஞ்சம் சுடசுட தண்ணீரை விட்டு கையிலோ அல்லது கரண்டியாலோ, நன்றாக கலந்துவிட வேண்டும். அதன் பின்பு தயிர் சர்க்கரை உப்பு, இந்த 3 பொருட்களையும் சேர்த்து கலக்க வேண்டும்.

- Advertisement -

தயிரை, ரவை நன்றாக இழுத்துக் கொள்ளும். அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்து, இந்த மாவை அப்படியே ஒரு மூடி போட்டு 5 நிமிடங்கள் வைத்து விடுங்கள். 5 நிமிடங்கள் கழித்து இந்த மாவோடு தேவைப்பட்டால் இரண்டு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து கரைத்து எப்போதும் போல தோசைக்கல்லில் தோசை ஊற்றி, மெல்லிதாக தேய்த்து, நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சிவக்க வைத்து எடுத்தால் மொரு மொரு ரவா தோசை தயார்.

dosa1

சரிங்க, இந்த தோசைக்கு தோதாக ஒரு க்ரீன் சட்னி ரெசிபியும் உங்களுக்காக. அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, உளுந்து 1 ஸ்பூன் போட்டு, பெரிய வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது, தோல் உரித்த பூண்டு பல் 6, இஞ்சி சிறிய துண்டு, பச்சை மிளகாய் 3, இந்த பொருட்களையெல்லாம் முதலில் வதக்கி விட வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியவுடன் 1 கைப்பிடி அளவு மல்லித்தழை, 1 கைப்பிடி அளவு புதினா தழைகளை, போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கி அடுப்பை அணைத்துவிட்டு இதை ஆற விடுங்கள். இந்த கலவை நன்றாக ஆறியதும் இதை அப்படியே மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

chutney4

ஒரு கைப்பிடி அளவு தேங்காய், தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு இந்த சட்னியை கொஞ்சம் கெட்டிப் பதத்துக்கு அரைத்து தனியாக ஒரு பௌலில் மாற்றிக் கொள்ளுங்கள். ஒருசிறிய தாளிப்பு கரண்டியில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து சட்னியில் சேர்த்து மேலே சொன்ன தோசை ரெசிப்பி உடன், பரிமாறி பாருங்கள். அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நாளை காலை உங்களுடைய வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -