தோசை மாவு இல்லாத சமயத்தில் கூட, இப்படி ஒரு தோசையை சுட்டுக்கொடுத்த உங்க கைக்கு நிச்சயம் தங்க வளையல் தாங்க.

dosai4
- Advertisement -

பிரிட்ஜில் தோசை மாவு இல்லை என்ற கவலை இனி நமக்குத் தேவையில்லை. தோசை மாவு இல்லை என்றாலும் கோதுமை மாவை வைத்து தோசை சுடுவது எப்படி என்பதை பற்றிய குறிப்புதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கோதுமை மாவை வைத்து ஒரு தோசை ரெசிபி கிடையாது. இரண்டு தோசை ரெசிபிகள் இதோ உங்களுக்காக. என்ன சமைப்பது என்றே குழப்பமாக இருக்கக்கூடிய நேரத்தில் சட்டுனு இப்படி ஒரு தோசையை தயார் செய்து கொடுத்தால் வீட்டில் இருப்பவர்கள் நிச்சயமாக உங்களை பாராட்ட செய்வார்கள். இந்த தோசை மாவு தயார் செய்ய வெறும் பத்து நிமிடங்கள் எடுத்தாலே அது அதிகம்.

இன்ஸ்டன்ட் கோதுமை மாவு பொறி தோசை:
இந்த தோசை செய்ய பொறி நமக்கு தேவைப்படும். பொறியை வாங்கி வீட்டில் ஒரு டப்பாவில் போட்டு ஸ்டாக் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பொறி – 2 கப், கோதுமை மாவு – 1 கப், தயிர் – 1/2 கப், உப்பு தேவையான அளவு, வெல்லம் – 1 ஸ்பூன், கொஞ்சமாக தண்ணீர் விட்டு முதலில் இந்த பொருட்களை எல்லாம் ஒருமுறை அரைத்துக் கொள்ளுங்கள். எல்லா பொருட்களும் ஒன்றாக கலக்கட்டும்.

- Advertisement -

மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி, இந்த மாவை நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த மாவை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். இந்த மாவு ரொம்பவும் திக்காக இருக்கக் கூடாது. ரொம்பவும் தண்ணியாகவும் இருக்கக் கூடாது. மாவை எடுத்து கல்லில் ஊற்றி தேய்ப்பதற்கு மாவை தயார் செய்து கொள்ள வேண்டும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து மிதமாக சூடு செய்து, தயார் செய்து வைத்திருக்கும் மாவை எடுத்து கல்லில் ஊற்றி, அரிசி மாவு தோசை வார்ப்பது போலவே மெல்லிசாக வாத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மொறு மொறுவென சிவக்க வைத்து எடுத்தால் சூப்பரான தோசை தயார். இந்த தோசைக்கு நல்லெண்ணெய் வார்த்து சுட்டுக் கொள்ளுங்கள். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி கார சட்னி எதை வேண்டுமென்றாலும் பரிமாறலாம். அது நம்முடைய விருப்பம் தான்.

- Advertisement -

இன்ஸ்டன்ட் கோதுமை மாவு தக்காளி தோசை:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சீரகம் – 1 ஸ்பூன், மிளகு – 1 ஸ்பூன், மிளகாய் தூள் – 2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, தோல் சீவி – 2 இன்ச் இஞ்சி, இந்த பொருட்களை எல்லாம் போட்டு, முதலில் தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு பழுத்த – 2 தக்காளி பழங்களை போட்டு எல்லா பொருட்களையும் விழுதாக அரைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். இதில் தாராளமாக தண்ணீர் ஊற்றி அரைக்கலாம்.

அரைத்த விழுதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். இந்த விழுதோடு ரவை – 1/2 கப், அரிசி மாவு – 1/2 கப், கோதுமை மாவு – 1/2 கப், இந்த பொருட்களை எல்லாம் போட்டு தேவையான அளவு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டிகள் இல்லாமல் இந்த மாவை தண்ணீராக கரைத்துக் கொள்ள வேண்டும். கரைத்த இந்த மாவில் பொடியாக நறுக்கிய – 1 கைப்பிடி அளவு வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை, போட்டு நன்றாக கலந்து அப்படியே தோசை வார்க்க வேண்டியதுதான். (இந்த தோசை மாவு ரொம்பவும் திக்காக இருக்கக் கூடாது. கொஞ்சம் நீர்க்க கரைத்துக் கொள்ளுங்கள். ஒரு தோசை வார்த்து பாருங்கள். மொறுமொறுப்பாக வரவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் தண்ணிரை சேர்த்து கூட கரைத்துக் கொள்ளலாம் தவறு கிடையாது.)

இந்த மாவை அரிசி மாவு தோசை போல ஊற்றி தேய்க்க முடியாது. அடுப்பில் தோசை கல்லை வைத்து இந்த மாவை எடுத்து பரவலாக ரவை தோசை ஊற்றுவது போல ஊற்ற வேண்டும். தோசை சிறிய சிறிய ஓட்டைகளோடு தான் நமக்கு வரும். ஓட்டைகளை மாவு ஊற்றி மூடாதிங்க. அப்படியே மிதமான தீயில் தோசையை சிவக்க வைக்க வேண்டும். தேவையான நெய் அல்லது எண்ணெய் ஊற்றி தோசையை சுட்டு எடுக்கலாம். பொன்னிறமாக தோசை சிவந்து வந்ததும் திருப்பிப் போட வேண்டும் என்று அவசியம் கூட கிடையாது. அப்படியே எடுத்தால் மொறு மொறு தோசை சூப்பராக கிடைக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி தக்காளி சட்னி, கார சட்னி எதை வேண்டும் என்றாலும் பரிமாறலாம். உங்களுக்கு இந்த தோசை ரெசிப்பி பிடிச்சிருந்தா உங்க வீட்ல ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -