இட்லி, தோசை செய்வதற்கு வீட்டில் மாவு இல்லாத நேரத்தில் இப்படி ஒரு முறை மொறு மொறு இன்ஸ்டன்ட் தோசை செய்து பாருங்கள்

toor-dosai
- Advertisement -

இன்றைய அவசர உலகத்தில் வீட்டில் உள்ள கணவன், மனைவி இருவருமே வேலைக்கு சென்று சம்பாதித்தால் மட்டுமே அவர்களின் குடும்ப சூழ்நிலையை சமாளிக்க முடியும். எனவே வேலைக்கு செல்லும் பெண்களுக்கு காலையில் வீட்டு வேலை அதிகமாக இருக்கும். சமையல் செய்து, குழந்தைகளை பள்ளிக்கு கிளப்பி விட்டு, அதன் பிறகுதான் இவர்கள் வேலைக்கு செல்ல வேண்டும். எனவே வாரத்திற்கு ஒரு முறை இட்லி, தோசை செய்வதற்கு மாவு அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுவார்கள். ஆனால் ஒரு சில நேரங்களில் இந்த மாவு தீர்ந்து விட்டால் அன்றைய காலைப் பொழுதில் என்ன சமைக்க வேண்டும் என்ற யோசனை வந்து விடும். அதற்கு வீட்டில் உள்ள இந்த எளிய பொருட்களை வைத்து மொறு மொறு தோசை செய்து கொடுத்துப் பாருங்கள், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 200 கிராம், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – ஒன்று, இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, காய்ந்த மிளகாய் – ஒன்று, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அடுத்ததாக கருவேப்பிலை, கொத்தமல்லி இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் சிறிய துண்டு இஞ்சியை தோல் நீக்கி விட்டு, மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு காய்ந்த மிளகாயை மிக்ஸி ஜாரில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 200 கிராம் அரிசி மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் முக்கால் ஸ்பூன் உப்பு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இவற்றுடன் அரைத்து வைத்துள்ள காய்ந்த மிளகாய், அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மிளகு மற்றும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி மச்சம் கருவேப்பிலை, கொத்தமல்லி இவை அனைத்தையும் சேர்த்து ஒன்று சேர கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு இவற்றுடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து9 கலந்து விடவேண்டும். ரவா தோசை செய்வதற்க்கு எப்படி மாவு தண்ணீர் பதத்தில் இருக்குமோ அது போல இந்த மாவையும் தண்ணீர் பதத்தில் கரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் 10 லிருந்து 15 நிமிடத்திற்கு மாவை அப்படியே ஊறவிட வேண்டும். அதன் பிறகு அடுப்பின் மீது தோசைக்கல்லை வைத்து ஒவ்வொரு கரண்டி மாவாக எடுத்து தோசை ஊற்றி, அதன் மீது அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, தோசை சிவந்ததும் திருப்பிப் போட்டு எடுக்க வேண்டும்.

- Advertisement -