வீட்டில் கோதுமை மாவு மற்றும் தேங்காய் இருந்தால் போதும். உடனே சுவையான இந்த கோதுமை லட்டுவை செய்திடலாம்

WHEAT
- Advertisement -

இனிப்பு சுவை என்பது அனைவரும் விரும்பும் ஒரு சுவை. ஆனால் இனிப்பு பலகாரங்கள் என்றால் அதனை செய்வதற்கு பலரும் தயக்கம் கொள்வார்கள். ஏனென்றால் இனிப்பு பலகாரங்கள் எதுவாக இருந்தாலும் அதனை செய்வதற்கு பலவித பொருட்கள் தேவைப்படும். அதனை செய்வதற்கு நேரமும் அதிகமாக செலவாகும். அத்துடன் அதை செய்வதற்கான வேலையும் அதிகம் இருக்கும் என்பதால், இனிப்பு பலகாரங்களை பூஜை மற்றும் விசேஷங்களின் போது மட்டுமே வீடுகளில் செய்வதுண்டு. ஆனால் இந்த கோதுமை மாவு லட்டுவை நினைத்த உடனே சட்டென செய்துவிட முடியும். இதற்கு தேவையான பொருட்களும் இரண்டு பொருட்கள் தான். அதிலும் இவை இரண்டு பொருள்களும் எப்பொழுதும் அனைவரின் வீட்டிலும் இருக்கக் கூடிய பொருட்கள் தான். வாருங்கள் இந்த சுவையான கோதுமை லட்டுவை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – அரை கப், தேங்காய் – அரை மூடி, நெய் – ஒரு ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 20, வெல்லம் – முக்கால் கப், உப்பு – கால் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு கப் கோதுமை மாவை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்ற வேண்டும். பின்னர் முந்திரிப் பருப்புகளை பொடியாக உடைத்து, நெய்யில் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அரை மூடித் தேங்காயை காய் துருவல் வைத்து நன்றாக துருவிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் ஒரு கப் கோதுமை மாவை சேர்த்து தேங்காய் மற்றும் கோதுமை மாவு இரண்டாம் சேர்ந்து பவுடர் பதம் வரும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அரைத்த இந்த மாவை கடாயில் இருக்கும் நெய்யுடன் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த கோதுமை மாவை வேறு தட்டில் மாற்றிக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயில் முக்கால் கப் வெல்லம், அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கரைத்து விட வேண்டும்.

பிறகு இந்த வெல்லம் கரைந்து நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும், அதனுடன் ஒரு ஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து விட வேண்டும். பிறகு வறுத்து வைத்துள்ள கோதுமை மாவு கலவையை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இப்பொழுதும் அடுப்பு சிம்மில் மட்டுமே இருக்க வேண்டும். இவை அனைத்தும் சேர்த்து நன்றாக கலந்து வந்ததும், இந்த மாவை சிறிது நேரம் ஆற வைத்து, கை பொறுக்கும் சூடு வந்ததும் உருண்டையாக பிடிக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான கோதுமை லட்டு தயாராகிவிட்டது.

- Advertisement -