இந்த ஆண்டு ஐ.பி.எல் துவக்க விழா நடைபெறாது என்று அறிவித்த பி.சி.சி.ஐ – காரணம் இதுதான் ?

IPL

இந்தியாவில் 2019ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் அடுத்தமாதம் இறுதியில் துவங்க உள்ளன. இதில் பல நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொண்டு தங்களின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் தங்களது அணியையும், ரசிகர்களையும் மகிழ்விப்பது வழக்கம்.

ABD

அதோடு ஒவ்வொரு ஆண்டும் இதன் துவக்க விழா போட்டி துவங்கும் ஒருநாளைக்கு முன் ஆட்டம், பாட்டம் என கோலாகலமாக துவங்கும். ஆனால், இந்த வருடம் ஐ.பி.எல் போட்டிகளிலேந்த துவக்க விழாவும் நடக்காது என்று பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. மேலும், அதற்கான காரணத்தினையும் தற்போது பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

அதன்படி பி.சி.சி.ஐ கூறியதாவது : இந்த ஆண்டு ஐ.பி.எல் துவக்க விழா நடைபெறாது. துவக்க விழாவுக்காக நாங்கள் ஒரு பெரிய தொகையினை செலவிட திட்டமிட்டுருந்தோம். ஆனால், அதனை நாங்கள் செய்வதுக்கு பதிலாக அந்த பணத்தை புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் கும்பத்திற்கு வழங்க இருக்கிறோம் என்று அறிவித்துள்ளது.

pulwama

இந்த அறிவிப்பினை இந்திய ரசிகர்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர். மேலும் இந்த வருடமும் கடந்த பல வருடங்களை போல சிறப்பாக போட்டிகளை ரசிக்க தயாராகி வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே :

ஆஸ்திரேலிய தொடரை அடுத்து ஐ.பி.எல் போட்டிகளிலும் ஹார்டிக் பாண்டியா விளையாடுவது சந்தேகம் – இத்தனை வாரம் கண்டிப்பாக ட்ரீட்மென்ட் அவசியம் – இந்திய அணி மருத்துவர் தகவல்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்