இப்படி செய்தால், உங்களுக்கும் தெய்வத்திற்கும் இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். இறை சக்தியை உணர இந்த வழியை பின்பற்றி பாருங்களேன்!

sivan
- Advertisement -

இறைவனிடம் நாம் வைக்கக்கூடிய வேண்டுதல் பளிக்காமல் போவதற்கு முதல் காரணம் இறைவனுக்கும் நமக்கும் இருக்கக்கூடிய இடைவெளி அதிகமாக இருப்பது தான். அந்த இடைவெளியை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டாலே போதும். நாம் வைக்கும் வேண்டுதல் இறைவனின் செவிகளில் உடனே கேட்கும். வேண்டுதலும் உடனே பளித்துவிடும். மனிதர்களில் கூட நமக்கு நெருக்கமானவர்கள், நமக்கு பிடித்தவர்கள் நம்மிடத்தில் எதை சொன்னாலும் அதை நாம் உடனே செய்வோம் அல்லவா. இதேபோல் தான் தெய்வங்களுக்கும். தெய்வத்திடம் நாம் நெருக்கமாகி விட்டால், நாம் எந்த விஷயத்தை வேண்டுதலாக தெய்வத்திடம் சொன்னாலும், அதை அந்த தெய்வம் உடனே நிறைவேற்றித் தரும்.

lemon

கேட்பதற்கு இது கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாக இருக்கலாம். இருப்பினும் இதில் ஒரு உண்மை மறைந்திருக்கிறது. இறைவனை உணர்ந்து முழு நம்பிக்கையோடு இறைவனை உங்களுக்கு நண்பனாக்கிக் கொண்டு, தினமும் இறைவனிடத்தில் உரையாடும் பழக்கத்தை வைத்துக் கொண்டால் உங்களை அறியாமலேயே நீங்கள் இறைவனிடம் நெருக்கம் ஆகி விடுவீர்கள்.

- Advertisement -

சில நாட்களிலேயே தெய்வ சக்தியை உணர்ந்து, அந்த தெய்வத்திற்கும் உங்களுக்கும் இருக்கக்கூடிய இடைவெளி குறைந்து, நெருக்கம் அதிகரித்து, அந்த இறைவன் உங்களிடம் ஏதாவது ஒரு ரூபத்தில் பேசவும் தொடங்கி விடுவார். சரி இறைவனுக்கும் உங்களுக்கும் எப்படி நெருக்கத்தை அதிகரிப்பது.

lemon-murugan

இறைவனுக்கும் நமக்கும் இடையே ஏதாவது ஒரு பொருள் பாலமாக இருக்க வேண்டும். இறைசக்தி நிறைந்த பொருள் என்றால், இறை சக்தியை சீக்கிரமே உள்வாங்கிக் கொள்ளக்கூடிய பொருள் என்றால் அது எலுமிச்சம் பழம் தான். ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அந்த எலுமிச்சம்பழத்தை மஞ்சள் தண்ணீரில் சுத்தமாக கழுவி விடுங்கள்.

- Advertisement -

பூஜையறையில் அமர்ந்து ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு எலுமிச்சம்பழத்தை இடது உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, அதன் மேலே வலது உள்ளங்கையை வைத்து மூடிக் கொள்ளுங்கள். இப்போது உங்களுடைய கோரிக்கைகளை இறைவனிடம் வைக்க வேண்டும்.

எப்படி தெரியுமா. உங்களுக்கு தெரிந்த மனிதர்களிடம் உங்களுடைய கவலைகளை நீங்கள் எப்படி சொல்வீர்கள். அதேபோல், மனதார உங்களுடைய பிரச்சினைகளை இறைவனிடம் சொல்ல வேண்டும். உங்கள் வீட்டில் வேறு யாரும் இல்லை, எனும் பட்சத்தில் வாய்விட்டு இறைவனிடம் உங்களுடைய குறைகளை கூறலாம். கையிலிருக்கும் எலுமிச்சம்பழம் மட்டும் அப்படியே இருக்கட்டும். வாய்விட்டு சொல்ல முடியாத சூழ்நிலை இருந்தால் மௌனமாக மனதிற்குள்ளேயே உங்களுடைய வேண்டுதலை தினம்தோறும் இறைவனிடம் இதேபோல் சொல்லி வாருங்கள்.

- Advertisement -

pooja-room

வெறும் 5 நிமிடங்கள் இறைவனிடம் இப்படி வேண்டுதல் வைத்து விட்டு கையில் இருக்கும் எலுமிச்சம்பழத்தை பூஜை அறையிலேயே வைத்து விடுங்கள். அந்த ஒரு எலுமிச்சம் பழத்தின் மூலம் நீங்கள் இறைவனை உணர்ந்து முழுமையாக நம்பி வேண்டுதலை இறைவனிடம் சொல்லிக்கொண்டே இருக்கும்போது, நீங்கள் வைத்த வேண்டுதல் வெகு சில நாட்களிலேயே நிறைவேறுவதை உங்களால் உணர முடியும்.

poojai

சரி, இப்படி செய்தால் இறைவனுக்கும் உங்களுக்கும் இருக்கக்கூடிய இடைவெளி குறைந்துவிட்டது என்பதை எப்படி தெரிந்து கொள்வது. நீங்கள் உண்மையிலேயே இறை சக்தி இருப்பதாக உணர்ந்து நம்பி இருந்தால், உங்கள் பூஜை அறையில் இருக்கக்கூடிய எலுமிச்சம்பழம் அழுகிப் போகாது. பூசனம் பிடிக்காது. எலுமிச்சம்பழம் காய்ந்து போகுமே தவிர, கெட்டுப் போவதற்கு வாய்ப்பு இல்லை.

praying-god1

இந்த அறிகுறி இருந்தாலே போதும். இறைவன் உங்களுக்கு ஆசீர்வாதத்தை வழங்கியுள்ளார் என்று தான் அர்த்தம். அதேசமயம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நம்ப முடியாத சில விஷயங்கள் சில மனிதர்களின் மூலம் உங்களுக்கு நடக்கத் தொடங்கும். அதுவே நீங்கள் இறைவனை நெருங்கியதற்கு சாட்சி. நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -