இறந்த பெண்ணை உயிர்ப்பித்த இளஞ்சன் – விக்ரமாதித்தன் கதை

black-magic-1
- Advertisement -

வேதாளத்தை தன் முதுகில் சுமந்து நடந்து வந்துகொண்டிருந்த விக்ரமாதித்யனிடம், அந்த வேதாளம் ஒரு கதை சொல்ல தொடங்கியது இதோ அந்த கதை. ஒரு ஊரில் வயதான கோவில் அர்ச்சகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு “மந்திரவதி” என்ற திருமண வயதை எட்டிய ஒரு மகள் இருந்தாள். அவள் மீது ஆசை கொண்டிருந்த அந்த ஊரைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள், அவளின் தந்தையிடம், ஒவ்வொருவராக சென்று, தனக்குத்தான் மந்திரவதியை திருமணம் செய்து வைக்க வேண்டுமென்றும், அப்படி செய்யாத பட்சத்தில் தாங்கள் தற்கொலை செய்து கொள்வதாக அப்பெண்ணின் தந்தையிடம் கூறினர். இதனால் கவலையடைந்த மந்திரவதியின் தந்தை, அவளை அம்மூவரில் யாருக்கும் திருமணம் செய்துவைக்காமல் இருந்தார்.

village

சில காலம் கழித்து திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மந்திரவதி இறந்து போனாள். இச்செய்தியைக் கேட்டு மிகுந்த துக்கத்திற்காளான அந்த மூன்று இளைஞர்களும், அவள் உடல் தகனம் நடைபெறும் இடத்திற்கு வந்து, சிதை முழுவதும் எரியும் வரை அங்கேயே இருந்தனர். அப்போது அம்மூவரில் ஒருவன் துறவறம் ஏற்க காசியை நோக்கி புறப்பட்டான். ஒருவன் எறிந்த உடலின் சாம்பலை கங்கையில் கரைக்க எடுத்துச் சென்றான். மற்றொருவன் அந்த உடலை எரித்த தகன மேடையிலேயே படுத்துறங்கினான்.

- Advertisement -

அடுத்த நாள் மந்திரவதியின் எலும்புகளை வைத்துக்கொண்டிருந்த இளைஞன், “இறந்தவர்களை உயிர்ப்பிக்கும்” மந்திரங்களை கொண்ட ஒரு புத்தகத்தை, ஒரு மாந்திரீகரிடம் தற்செயலாக கண்டு, அதை திருடிக்கொண்டு மந்திரவதியின் உடலை எரித்த சுடுகாட்டிற்கு திரும்பினான். அப்போது காசியை நோக்கி சென்ற இளைஞனும் ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த சுடுகாட்டிற்கு திரும்பினான். அப்போது அவன் தன்னுடன் புனிதமான “கங்கை நீர் தீர்த்தத்தை” கொண்டுவந்திருந்தான்.

river ganga

மூன்றாமவன் இன்னும் அந்த இடுகாட்டு மேடையிலேயே உறங்கிக்கொண்டிருந்தான். அப்போது முதல் இரு இளைஞர்களும் சேர்ந்து, அந்த மந்திர புத்தகத்தில் வரும் மந்திரங்களை ஜெபித்து, அந்த கங்கை நீரை மந்திரவதியின் உடல் மீது தெளிக்க அவள் உயிர் பெற்று வந்தாள். இப்போது யார் மந்திரவதியை திருமணம் செய்வது என அந்த இருவரும், ஒருவருக்கொருவர் சண்டையிட்டனர். அங்கேயே தூங்கிய படியிருந்த மூன்றாமவனும், நடந்ததை அறிந்து அவர்களுடன் சண்டையிட தொடங்கினான்.

- Advertisement -

“விக்ரமாதித்தியா, இம்மூவரில் மந்திரவதியை திருமணம் செய்து கொள்ள யாருக்கு உரிமையுள்ளது? என வேதாளம் கேட்டது. அதற்கு விக்ரமாதித்தியன் “மந்திர ஜெபம் புரிந்து அப்பெண்ணை உயிர்ப்பித்த இளைஞனை அவளின் தந்தையாக கருத வேண்டும், அவள் உயிர் பெற கங்கை நீரைக் கொண்டு வந்த அந்த இளைஞனை அவளின் மகனாக கருத வேண்டும். ஆனால் மந்திரவதியின் மேல் உண்மையான அன்புடன், அவள் இறந்த தூக்கம் தாளாமல் அத்தகன மேடையிலேயே படுத்துக்கொண்டிருந்த மூன்றாவது இளைஞனே அவளை திருமணம் செய்து கொள்ளும் தகுதியுடையவன்” என பதிலளித்தான். இப்பதிலைக் கேட்ட வேதாளம் விக்ரமாதித்தியனிடமிருந்து விடுபட்டு, பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்டது.

இதையும் படிக்கலாமே:
மூவரில் சிறந்தவனை கண்டுபித்த துறவி – விக்ரமாதித்தன் கதை

இது போன்ற மேலும் பல விக்ரமாதித்தன் கதைகள், தமிழ் சிறுகதைகள் என பலவற்றை அறிய எங்களோடு முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள்.

- Advertisement -