- Advertisement -

நம் வீட்டில் இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை எல்லாம் நாம் பயன்படுத்தலாமா? அதனால் ஏதாவது ஆபத்து வருமா?

தானம் என்பது புண்ணியத்தை சேர்க்கும் ஒரு மாபெரும் விஷயமாகும். இந்த தானத்தை செய்வதற்கும் ஒரு முறை உண்டு. ஒருவரிடம் இருந்து ஒரு பொருள், இன்னொருவரிடம் செல்வதாக இருந்தால் அதனால் உண்டாகும் விளைவுகள் என்ன? நன்மை தீமைகள் என்ன? என்பதை நிச்சயம் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். அதே போல தான் இறந்தவர்களுடைய பொருட்களை நாம் பயன்படுத்தும் பொழுது நமக்கு என்ன நடக்கும்? என்பதைப் பொறுத்து தான் முடிவு செய்ய வேண்டும். அதைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

உங்கள் குடும்பத்தில் இறந்த யாராவது ஒருவருடைய பொருட்கள் நீங்கள் பயன்படுத்தலாமா? வேண்டாமா? என்கிற குழப்பம் எப்பொழுதும் இருக்கும். அவர்கள் பயன்படுத்திய கண்ணாடி, வாட்ச், உடுத்திய உடைகள், இதர பொருட்கள் அத்தனையும் நம்மிடம் இருக்கும். அவற்றை நாம் பயன்படுத்துவதால் ஏதாவது ஆபத்து வருமா? எல்லா ஜீவராசிகளுக்கும், உயிரற்ற பொருட்களுக்கும் கூட நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் உண்டு. அப்படி இருக்கும் பொழுது இறந்தவர்களுடைய நேர்மறை, எதிர்மறை ஆற்றல்களும் அவர்கள் பயன்படுத்திய எல்லாப் பொருளிலும் இருக்கும்.

- Advertisement -

ஒருவர் தானம் செய்கிறார் என்பதற்காக இலவசமாக கிடைக்கிறது என்று வாங்கி வைத்துக் கொள்ளக் கூடாது. அவர் எதை தானம் கொடுக்கிறார்? என்ன நோக்கத்துடன் கொடுக்கிறார்? என்கிற விஷயத்தை கட்டாயம் உற்று நோக்க வேண்டும். அதன் பிறகு தான் அதனை பெற்றுக் கொள்ளலாமா? வேண்டாமா? என்கிற முடிவு உங்களுக்கு தெரியும். யார் எதை கொடுத்தாலும் வாங்கிக் கொண்டால் பிறகு அவஸ்தைப்பட வேண்டியது தான்.

இறந்தவர்களுடைய எந்த விதமான பொருட்களையும் கூடுமானவரை நாம் பயன்படுத்தாமல் இருப்பது தான் நல்லது. அது நகையாக இருப்பின் அவற்றை கடைகளில் கொடுத்து மாற்று நகையாக புதியதாக வாங்கிக் கொள்ளலாம். அதே நகையை நாம் பயன்படுத்துவது கூடாது. இறந்தவர்கள் வயதானவர்கள், வாழ்ந்து அனுபவித்து முடித்தவர்கள் என்றால் அவர்களுடைய நகைகளை பரம்பரை சொத்தாக பாதுகாத்து வருவது வழக்கம். அத்தகைய பரம்பரை சொத்துகளை நாம் தாராளமாக அனுபவிக்கலாம்.

- Advertisement -

ஆனால் ஆயுள் குறைந்து இறந்தவர்களுடைய பொருட்களை நாம் அப்படியே பயன்படுத்துவதை தவிர்ப்பது தான் நல்லது. கல் உப்பு, மஞ்சள் ஆகிய இந்த இரண்டு பொருட்களும் எவ்விதமான தோஷத்தையும் நம்மை அண்டவிடாது. எனவே அப்படி நீங்கள் அவர்களுடைய பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் உப்பு மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீரில் சிறிது நேரம் அந்த பொருட்களை ஊற வைத்து கழுவி பின்னர் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் தோஷங்கள் ஏற்படாமல் இருக்கும்.

அதே போல ஒருவருக்கு நீங்கள் பொருட்களையோ அல்லது உடுத்திய உடைகளையோ பழையதாக தானம் செய்கிறீர்கள் அல்லது பெற்றுக் கொள்கிறார்கள் என்றால் அதிலும் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் இருக்கும். கொடுப்பவர் நல்ல எண்ணத்தில் கொடுக்க வேண்டும். அவர்களுடைய கர்மத்தை கழிக்க, பாவத்தைப் போக்க கொடுக்கும் பொருட்களில், உடைகளில் தோஷங்கள் இருக்கும் எனவே இவற்றை நாம் நீக்க மேற்கண்ட வழிமுறைகளின்படி தோஷங்களை விலக்கி பின்னர் அவற்றை பயன்படுத்துவது தான் நல்லது. அப்படியே பயன்படுத்துவதால் அவர்களுக்கு இருக்கும் கர்மங்கள் நம்மையும் பின்தொடரும் என்பதை மட்டும் நினைவில் வைத்து செயல்படுவது நல்லது.

- Advertisement -