அற்புதம் வாய்ந்த இந்த நாளை தவறவிடாதீர்கள். இன்று இரவு, இதை மட்டும் செய்தால் போதும். உங்கள் வாழ்க்கையில் தீர்க்கவே முடியாத பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

powrnami

உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய தீர்க்கவே முடியாத பல பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கொடுக்கும் ஒரு வழிபாட்டு பரிகார முறையை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இன்று சித்ரா பவுர்ணமி! சந்திர பகவானின் ஒளிக்கதிர்கள் நம்முடைய பூமிக்கு அதிகமாக கிடைக்கப் போகின்றது. இந்த தருணத்தை நாம் தவற விடக்கூடாது. மன அழுத்தத்தை நீக்க, மனநிம்மதியை பெற, தீராத கஷ்டங்கள் தீர, குழப்பங்கள் தெளிவு பெற, வாழ்க்கையில் எதை தொட்டாலும் தடை என்று நினைப்பவர்கள், பணக்கஷ்டம், மனக்கஷ்டம், கடன் கஷ்டம், சண்டை சச்சரவு, இப்படி வாழ்க்கையில் வரக்கூடிய பல கஷ்டத்திற்கும் ஒரே தீர்வு என்றால், அது இந்த பரிகாரம் தான்.

Pournami days in Tamil Calendar

உங்கள் வாழ்க்கையின் தலையெழுத்தை மாற்றும் இந்த பரிகாரத்தை எப்படி செய்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவை ஒரே ஒரு எலுமிச்சம் பழமும், ஒரு பிரியாணி இலை மட்டும்தான். இன்று இரவு 7 மணிக்கு மேல், முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து, அந்த எலுமிச்சம்பழத்தில் பேனாவை கொண்டு உங்களது பெயரை எழுதி விடுங்கள்.

ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். முதலில் உங்கள் பெயரை எழுதி வைத்திருக்கும் எலுமிச்சம்பழத்தை அந்த தண்ணீருக்குள் போட வேண்டும். இரண்டாவதாக ஒரு பிரியாணி இலையை அந்த தண்ணீரில் போட்டு விடுங்கள். அந்த தண்ணீரில் இறுதியாக ஒரு சொட்டு மஞ்சள் தூளை கலந்து விட வேண்டும்.

lemon

தயார் செய்த இந்த கண்ணாடி டம்ளர் தண்ணீரை அப்படியே எடுத்து உங்கள் வீட்டின் வெளிப்பக்கம் வைத்துவிட வேண்டும். அதாவது நிலவொளி இந்த கண்ணாடி டம்ளரின் மேல் பட வேண்டும். இன்று இரவு முழுவதும் சந்திர பகவான் பிரகாசமாக காட்சி தருவார். சந்திர பகவானை இரண்டு கண்களாலும் தரிசனம் செய்து, உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். சந்திர பகவானை பார்த்து மனதார வேண்டிக் கொண்டாலே மனது தெளிவு பெறும்.

- Advertisement -

இரவு முழுவதும் இந்த டம்பளர் தண்ணீர் அப்படியே நிலவொளியில் இருக்கட்டும். மறுநாள் காலை எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, சூரிய உதயத்திற்கு முன்பாகவே டம்ளரில் இருக்கும் எலுமிச்சம் பழத்தை எடுத்து உங்கள் தலையை மூன்று முறை சுற்றி, வெட்டி சாறு பிழிந்து குடித்து விடுங்கள். சர்க்கரை போட்டும் இந்த சாறை குடிக்கலாம் தவறு கிடையாது. டம்ளரில் இருக்கும் தண்ணீரையும் பிரியாணி இலையையும், கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பல வகையான பிரச்சனைகளுக்கு விடிவுகாலம் பிறந்ததாக உணர்வீர்கள்.

lemon1

சந்திர தரிசனம் நம்முடைய மனதை தெளிவுபடுத்தக் கூடிய ஒரு வழிபாடு. மனக்குழப்பம் நீங்கி, மன அழுத்தம் முழுமையாக நீங்கி, தெளிவாக நம்முடைய வாழ்க்கையை வந்தாலே போதுமே! பல வெற்றிகளைப் பெறமுடியும். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு, சில நேரங்களில் சில விஷயங்களை, செய்யலாமா வேண்டாமா என்று பல பேருக்கு மனதளவில் பல தடுமாற்றம் இருந்து வரும்.

வாழ்க்கையில் இருக்கும் அத்தனை தடுமாற்றமும் நீங்க, நம்பிக்கையை மட்டும் மூலதனமாக வைத்து இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள். உங்கள் தலைவிதி நிச்சயமாக மாறும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து நல்ல பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.