கையில் காசு பணம் இல்லை என்ற கஷ்டமே, காலத்திற்கும் வராது! சேமிப்பு உயர்ந்து கொண்டே செல்ல, நாளை, இஷ்ட தெய்வத்தை வேண்டி இந்த ஒரு முடிச்சை மட்டும் முடிந்து வைத்தால்.

dheivam

பணம் என்பது மனிதர்கள் அனைவருமே வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையான ஒரு விடயமாக இன்றைய காலங்களில் இருக்கின்றது. பலருக்கும் பணத்தை நன்றாக சம்பாதிப்பதை காட்டிலும் அதை முறையாக சேமிப்பது தான் பெரிய சவாலாக இருக்கிறது. அதிலும் சிலர் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் சம்பாத்தியங்கள் கொண்டிருந்தாலும், அதற்கு ஈடான வகைகளில் அவர்களுக்கு வீடு மற்றும் தொழில் வியாபாரங்களில் ஏதேனும் வீண் பண விரயங்கள் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கும். அப்படி வீண் விரயங்கள் ஏற்படுவதை அவர்கள் என்னதான் பலவகைகளில் தடுக்க முயற்சித்தாலும், அது முடியாமல் போய் விடும். இப்படியான ஒரு கட்டான பிரச்சனையை சந்தித்து அவதிப்படுபவர்களுக்காக கூறப்பட்டி ருக்கின்ற ஒரு அபூர்வ பரிகார முறையை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

money

வீண் செலவீனங்களை குறைக்க செய்கின்ற இந்த பரிகாரத்தை நிச்சயம் ஒரு செவ்வாய்க்கிழமை தினத்தில் தான் செய்ய வேண்டும். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு உணவேதும் அருந்தாமல் உங்கள் வீட்டுற்க்கு அருகில் இருக்கின்ற, உங்களின் இஷ்ட தெய்வ கோவிலுக்கு கீழ்கண்ட பரிகாரப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும். இப்படி கோயிலுக்கு செல்லும் போது சிவப்பு நிறத்திலான ஆடைகளை அணிந்து கொள்வது கூடுதல் சிறப்பு.

தெய்வீக பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள்
1) ஒரு சிறிய அளவிலான செஞ்சந்தன மரக்கட்டை துண்டு. இந்த செஞ்சந்தன மரக்கட்டை மத்திய, மாநில அரசு நடத்துகின்ற கைவினை மட்டும் கிராமப்புற பொருட்கள் விற்பனை செய்கின்ற கடைகளில் கிடைக்கும்.
2) சிறிய கருமஞ்சள் கிழங்கு துண்டு
3) சில புத்தம் புதிய சிவப்பு நிற ரோஜா மலர்கள்
4) புத்தம் புதிய சிவப்பு நிற துணி சிறிதளவு

கோயிலுக்குள் சென்றதும் மேற்சொன்ன சிவப்பு நிற துணியை எடுத்து, விரித்து அதில் மேற்கூறிய செஞ்சந்தன மரத்துண்டு, கரு மஞ்சள் கிழங்கு துண்டு, ரோஜா மலர்கள் என மூன்றையும் போட்டு அந்த சிவப்பு நிறத் துணியை முடிபோட்டு முடிந்து, நீங்கள் வழிபாடு செய்யக்கூடிய உங்களின் இஷ்ட தெய்வ கோவிலின் அர்ச்சகரிடம் அந்த மடிப்பை கொடுத்து, கோயில் கர்ப்பக்கிரகத்தில் ஒரு வாரம் வைத்து தர செய்ய வேண்டும்.

ஒரு வாரம் கழித்து உங்கள் இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று கர்ப்பக்கிரகத்தில் ஒரு வாரம் வைக்கப்பட்ட அந்த முடிப்பை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்து, பூஜையறையில் அந்த முடிப்பை வைத்து ஊதுபத்தி, சாம்பிராணி கொளுத்தி, கற்பூர சூடம் ஏற்றி காட்டி, உங்கள் இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரம், ஸ்தோத்திரம் போன்றவற்றை துதிக்க வேண்டும். பின்பு உங்கள் இஷ்ட தெய்வத்திடம் மானசீகமா “உன் ஆசீர்வாதத்தால் நான் சம்பாதிக்கக்கூடிய செல்வம் அனைத்தும் வீண் விரயங்கள் ஏதும் ஏற்படாமல், எனக்கு அதிகளவு சேமிப்புகளாக மாறி, அவை மேலும் பெருக வேண்டும்” என மனமுருகி வழிபாடு செய்ய வேண்டும்.

money

இந்த பூஜையை முடித்த பின்பு, அந்த முடிப்பை எடுத்து உங்கள் வீட்டில் பணம் சேமிக்கின்ற அலமாரியில் வைக்கலாம். அல்லது உங்கள் தொழில், வியாபார கூடங்களில் இருக்கின்ற பணப்பெட்டியில் வைத்துக் கொள்ளலாம். இதன் பிறகு உங்கள் வீடு மற்றும் தொழில், வியாபாரங்களில் ஏற்படுகின்ற வீண் செலவுகள் வெகுவாக குறைவதை அனுபவத்தில் காணமுடியும்.