- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஐஸ்வர்யம் பெருக விநாயகர் வழிபாடு

ஐஸ்வர்யம் பெருக விநாயகர் வழிபாடு

- Advertisement -

இந்தப் பிரபஞ்சத்திற்கே முழு முதற் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான் என்று நம் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அந்த செயலை செய்வதற்கு முன்பாக விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும் காரியத்தடை நீக்கக்கூடிய அற்புதமான தெய்வங்களுள் ஒருவராக திகழ்பவர்தான் விநாயகப் பெருமான். விநாயகப் பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வேண்டிய வரம் கிடைப்பதோடு அவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்தும் விநாயகப் பெருமான் தக்க சமயத்தில் வந்து காப்பாற்றுவார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை ஐஸ்வர்யம் பெருகுவதற்கு எந்த முறையில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஐஸ்வர்யம் பெருக வழிபாடு

நல்ல நிலையில் இருந்தவர்களுக்கு திடீரென்று அவர்களுடைய தொழிலிலோ, வியாபாரத்திலோ, குடும்பத்திலோ ஏதோ ஒரு பாதிப்பு ஏற்பட்டு தங்களுடைய பொருளாதாரத்தில் இருந்து இறங்கி கீழே வந்து கொண்டு இருக்கிறார்கள் என்றாலோ அப்படி பட்ட நிலையில் இருப்பவர்கள் முன்னேறுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் பலன் இல்லாமல் போகிறது என்றாலோ விநாயகப் பெருமானை நாம் கண்டிப்பான முறையில் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது அவர்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக நீங்கும். மேலும் காரிய வெற்றி ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும் என்றே கூறலாம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை வளர்பிறையில் வரக்கூடிய நல்ல நாளாக பார்த்து ஆரம்பிப்பது என்பது மிகவும் சிறப்பு. இதற்கு நமக்கு அருகம்புல் வேண்டும். இதோடு ஒரு ரூபாய் நாணயமும் வேண்டும். 16 எண்ணிக்கையில் அருகம்புல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அதேபோல் 16 எண்ணிக்கையில் ஒரு ரூபாய் நாணயத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். இவை இரண்டையும் சுத்தமான தண்ணீரால் சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது விநாயகப் பெருமானுக்கு முன்பாக இரண்டு நெய் தீபங்கங்களை ஏற்றி வைத்து வாசனை மிகுந்த மலர்களை சாற்றிக் கொள்ளுங்கள். விநாயகப் பெருமானுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு அருகம்புல் ஒரு ஒரு ரூபாய் நாணயம் இவை இரண்டையும் ஒன்றாக எடுத்து விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அவ்வாறு அர்ச்சனை செய்யும் பொழுது “ஓம் செல்வகணபதியே நமஹ” என்று கூறலாம். அப்படி இல்லை என்றால் “ஓம் லக்ஷ்மி கணபதியே நமஹ” என்று கூறலாம்.

- Advertisement -

இப்படி 16 முறை அருகம்புள்ளையும் ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்து விநாயகப் பெருமானின் மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். அன்றைய தினத்தில் வெளியில் செல்லும் பொழுது அர்ச்சனை செய்த அருகம்புல்லில் இருந்து ஒரு அருகம்புல்லை எடுத்து தங்களுடன் வைத்துக் கொண்டு வெளியே செல்லும் பொழுது அவர்களுடைய முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும். இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக 48 நாட்கள் செய்ய வேண்டும். ஒரு ரூபாய் நாணயத்தை திரும்பவும் நாம் மறுநாள் அர்ச்சனைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அருகம்புல்லை மட்டும் புதிதாக வாங்கி பயன்படுத்த வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பணம் சேர வளர்பிறை அஷ்டமி வழிபாடு

நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளையும் காரிய தடைகளையும் நீக்கி வெற்றிகளையும் செல்வத்தையும் வாரி வழங்கக்கூடிய விநாயகர் பெருமானை முழுமனதோடு நம்பி இப்படி வழிபாடு செய்ய அவரின் அருளால் அனைத்து விதமான ஐஸ்வர்யங்களையும் பெற்று சிறப்பாக வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்