- Advertisement -

ஐஸ்வர்ய தீப வழிபாடு

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும் என்றால் அவருக்கு ஐஸ்வர்யம் பெருக வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த ஐஸ்வர்யத்தை வாரி வழங்கக்கூடிய தெய்வமாக திகழ்பவள் மகாலட்சுமி தாயார். அதிலும் குறிப்பாக ஐஸ்வர்ய லட்சுமி. ஐஸ்வர்ய லட்சுமிக்கு தீபமேற்றி வழிபாடு செய்வதன் மூலம் அவள் என்றென்றும் நம்முடைய வீட்டில் நிரந்தரமாக தங்குவாள் என்று கூறப்படுகிறது. அப்படி அவள் நிரந்தரமாக தங்குவதன் மூலம் நமக்கு ஐஸ்வர்யத்தில் எந்த வித குறையும் உண்டாகாது என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு ஐஸ்வர்ய தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஐஸ்வர்ய தீப வழிபாடு

எந்த ஒரு தெய்வ வழிபாட்டை நாம் செய்வதாக இருந்தாலும் முதலில் தீபம் ஏற்றி தான் வழிபாடு செய்வோம். அப்படி தீபம் ஏற்றுவதன் மூலம் தான் அந்த வழிபாடு முழுமை அடையும் என்று கூறப்படுகிறது .எந்தவித வேண்டுதலையும் வைக்காமல் தீபத்தை மட்டும் ஏற்றி வைத்தாலே அதனால் பல நன்மைகள் நமக்கு உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த தீபத்தை ஐஸ்வர்ய தீபமாக ஏற்றினோம் என்றால் நமக்கு ஐஸ்வரியம் பெருக்கும். அந்த ஐஸ்வர்ய தீப வழிபாட்டை தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

ஒவ்வொரு தீபத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கும். இந்த தீபத்தை நாம் ஏற்றக்கூடிய அகல் விளக்கு, பித்தளை விளக்கு, வெள்ளி விளக்கு என்று ஒவ்வொரு விளக்கிற்கு ஏற்றவாறு பலன்கள் இருக்கும். அடுத்ததாக அதில் ஊற்றக்கூடிய எண்ணெய் எந்த வகையான எண்ணையாக இருக்கிறதோ அதற்கேற்றாற்போல் பலன் கிடைக்கும். இதில் கடலை எண்ணெயை மட்டும் ஊற்றி தீபம் ஏற்றக்கூடாது என்று கூறுவார்கள். இதை தவிர்த்து விட்டு நெய், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் போன்ற எண்ணெய்களை பயன்படுத்தி தீபம் ஏற்றலாம்.

அடுத்ததாக நாம் தீபம் ஏற்றுவதற்கு போட வேண்டிய திரியில் ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. சாதாரண பஞ்சு திரி, நூல் திரி, தாமரை தண்டு திரி, வாழைத்தண்டு திரி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மேலும் நவகிரக பாதிப்பில் இருந்து நீங்குவதற்கு நவகிரகங்களுக்குரிய திரியும் இருக்கிறது இப்படி நமக்கு என்ன பிரச்சனை இருக்கிறதோ அதை சரி செய்வதற்கு தீப வழிபாடு மிகவும் சிறப்புக்குரியதாகவே திகழ்கிறது.

- Advertisement -

நம் வீட்டில் மகாலட்சுமி என்றும் நிரந்தரமாக இருக்க வேண்டும், ஐஸ்வரியம் பெருக வேண்டும், செல்வ செழிப்பு உயர வேண்டும் என்று நினைப்பவர்கள் மகாலட்சுமி தாயாருக்கு இந்த ஒரு தீபத்தை ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இந்த தீபத்தை வெள்ளிக்கிழமை தோறும் ஏற்றலாம். அப்படி வெள்ளிக்கிழமை ஏற்றுபவர்களாக இருந்தால் தொடர்ச்சியாக ஒன்பது வெள்ளிக்கிழமை ஏற்ற வேண்டும். இல்லை தினமும் ஏற்றி விடலாம் என்று நினைப்பவர்கள் தொடர்ச்சியாக 21 நாட்கள் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

இந்த தீபத்தை காலை பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது மாலை ஆறு மணிக்கு மேல ஏற்றி வழிபாடு செய்யலாம். இந்த தீபத்திற்கு நாம் சாதாரண அகல் விளக்கை பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் ஊற்றக்கூடிய எண்ணெய் என்பது நல்லெண்ணையாக இருக்க வேண்டும். இதில் போடக்கூடிய திரியில் தான் முக்கியமான பங்கு இருக்கிறது. அந்த திரியின் பெயர் தான் மார்வாடி திரி.

- Advertisement -

பூஜை பொருட்கள் கிடைக்கும் கடைகளில் மார்வாடி நூல் என்று விற்கும். இது சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்துடன் இருக்கக்கூடிய நூலாக இருக்கும். இந்த நூலை வாங்கி வந்து திரிபோல நறுக்கி அகல் விளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி நாம் தீபமேற்றி நம்முடைய வேண்டுதலை மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக வைக்கும் பொழுது மகாலட்சுமி தாயார் நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல் நமக்கு சகல விதமான செல்வங்களையும் வாரி வழங்குவார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: ஐப்பசி வெள்ளிக்கிழமை வாராகி வழிபாடு

இந்த எளிமையான தீப வழிபாட்டை மேற்கொள்பவர்களுக்கு சகல விதமான ஐஸ்வர்யங்களும் ஏற்படும் என்பதோடு மட்டுமல்லாமல் மகாலட்சுமி தாயார் நிரந்தரமாக நம் வீட்டில் அருள் பாலிப்பார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்